உங்களுடைய இறைவன் வெட்கப்படுபவன்; சங்கையானவன். அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் பூஜ்யமாக-வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)
(இப்னுமாஜா: 3865)حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
إِنَّ رَبَّكُمْ حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ، فَيَرُدَّهُمَا صِفْرًا، – أَوْ قَالَ: خَائِبَتَيْنِ
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3911.
Ibn-Majah-Shamila-3865.
Ibn-Majah-Alamiah-3855.
Ibn-Majah-JawamiulKalim-3863.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஜஃபர் பின் மைமூன் என்பவர் பற்றி இவர் ஒரு பொருட்டே அல்ல என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும், அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்றும் கூறியுள்ளனர். - உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள், இவர் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியைப் போல் யாரும் அறிவிக்கவில்லை. இவர் மட்டுமே தனித்து அறிவிக்கிறார் என்று கூறியுள்ளார். - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவரின் செய்தியை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தே ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/313, தக்ரீபுத் தஹ்தீப்-1/201)
அபூஉஸ்மான் நஹ்தீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்ற பலமான அறிவிப்பாளர்கள் இந்த செய்தியை நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளனர் என்பதால் இதில் இவர் தவறு செய்துள்ளார் என்று தெரிகிறது.
மேலும் பார்க்க: முஸ்னத் அஹ்மத்-23714 .
சமீப விமர்சனங்கள்