தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4848

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

வெறுப்பிற்குரிய உட்காரும் முறை.

ஷரீத் பின் ஸுவைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் எனது இடது கையை எனது முதுகுக்குப் பின்புறமாக வைத்து என்னுடைய கையின் உள்ளங்கையை ஊன்றி உட்கார்ந்திருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள்.

அப்போது அவர்கள், “அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டானோ அவர்களின் இருப்பைப் போன்று நீ அமர்ந்திருக்கின்றாயா? என்று (என்னிடம் கடிந்து) கூறினார்கள்.

(அபூதாவூத்: 4848)

بَابٌ فِي الْجِلْسَةِ الْمَكْرُوهَةِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، قَالَ

مَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسٌ هَكَذَا، وَقَدْ وَضَعْتُ يَدِيَ الْيُسْرَى خَلْفَ ظَهْرِي وَاتَّكَأْتُ عَلَى أَلْيَةِ يَدِي، فَقَالَ: «أَتَقْعُدُ قِعْدَةَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ؟»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4208.
Abu-Dawood-Shamila-4848.
Abu-Dawood-Alamiah-4208.
Abu-Dawood-JawamiulKalim-4210.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அலீ பின் பஹ்ர்

3 . ஈஸா பின் யூனுஸ்

4 . இப்னு ஜுரைஜ்

5 . இப்ராஹீம் பின் மைஸரா

6 . அம்ர் பின் ஷரீத்

7 . ஷரீத் பின் ஸுவைத் (ரலி)


  • இந்தச் செய்தியை மேற்கண்டவாறு இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து ஈஸா பின் யூனுஸ், மின்தல் பின் அலீ ஆகியோர், இப்னு ஜுரைஜ் —> இப்ராஹீம் பின் மைஸரா —> அம்ர் பின் ஷரீத் —> ஷரீத் பின் ஸுவைத் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

மின்தல் பின் அலீ பலவீனமானவர்; இவரின் அறிவிப்பாளர்தொடரில் வேறு சில விமர்சனமும் உள்ளது.

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7243.


  • இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஸ்ஸாக் அவர்கள், இப்னு ஜுரைஜ் —> இப்ராஹீம் பின் மைஸரா —> அம்ர் பின் ஷரீத் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாகவும், சிறிது வார்த்தை மாற்றத்துடனும் அறிவித்துள்ளார்.

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3057.


  • இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மக்கீ பின் இப்ராஹீம், ஸகரிய்யா பின் இஸ்ஹாக் ஆகியோர், இப்னு ஜுரைஜ் —> இப்ராஹீம் பின் மைஸரா —> அம்ர் பின் ஷரீத் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் வேறு ஒரு செய்தியை மட்டும் அறிவித்துள்ளனர்.

(பார்க்க: அஹ்மத்-19473)


1 . இப்னு ஜுரைஜ் அவர்களின் மாணவர்களில் அப்துர்ரஸ்ஸாக் முன்னுரிமை பெற்றவர் ஆவார் என்பதாலும்,

2 . மக்கீ பின் இப்ராஹீம், ஸகரிய்யா பின் இஸ்ஹாக் ஆகியோரும் இந்த அறிவிப்பாளர்தொடரைக் கூறியிருப்பதாலும்,

3 . அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் செய்தியைப் போன்றே இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களின் வழியாக வந்திருப்பதாலும் அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் அறிவிக்கும் முர்ஸலான செய்தியே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.

எனவே ஈஸா பின் யூனுஸ் தவறுதலாக அறிவித்திருக்கலாம்.


 


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26543-இப்னு ஜுரைஜ் அவர்கள், பலமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(அதாவது  தம்முடைய ஆசிரியரிடமிருந்து சில செய்திகளை நேரடியாக கேட்டிருப்பார். சில செய்திகளை நேரடியாக கேட்டிருக்கமாட்டார். நேரடியாக செவியேற்காத செய்திகளை அறிவிக்கும்போது செவியேற்றதைப் போன்று பொருள் தரக்கூடிய قال – கால, ذكر தகர, عن – அன் போன்ற வார்த்தைளைப் பயன்படுத்தி அறிவிப்பவர் ஆவார். இவர் அதாஉ பின் அபூரபாஹ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் தத்லீஸ் இல்லை. இவர் வழியாக அன்அனாவாக அறிவித்தால் அவை சரியானதாகும். இப்னு ஜுரைஜ் அவர்களே நான் அதாஃ அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் தத்லீஸ் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதாஉ அவர்களின் வழியாக அறிவிக்கும் செய்திகளில் தத்லீஸ் இல்லை என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்றவர்கள் கூறியுள்லனர். என்றாலும் இந்தக் கருத்தை அபூஇஸ்ஹாக் ஹுவைனீ போன்ற சிலர் ஏற்பதில்லை…)

  • இது போல் தத்லீஸ் செய்யும் அறிவிப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களில் ஏதேனும் ஒரு அறிவிப்பாளர்தொடரிலாவது سمعت – இவரிடம் நான் நேரடியாக கேட்டேன் என்றோ حدثني – என்னிடம் இவர் சொன்னார் என்றோ நேரில் கேட்டதைத் தெளிவுபடுத்தும் சொற்களைப் பயன்படுத்தி அறிவித்தால் தான் அது ஏற்கப்படும் என்பது ஹதீஸ்கலையில் உள்ள விதியாகும்.
  • இவர் இப்ராஹீம் பின் மைஸரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் வேறு சில செய்திகளில் ஸிமாஃவை-நேரடியாக கேட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் மேற்கண்ட செய்தியின் கருத்திலும், இந்த வகை அறிவிப்பாளர்தொடர்களிலும் ஸிமாவை கூறவில்லை.

இப்னு ஜுரைஜ் என்பார் தத்லீஸ் செய்யக் கூடியவர் என்று பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

1 . இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
கூறுகிறார் :

இன்னார் கூறினார், இன்னார் கூறினார் என்றோ எனக்கு அறிவிக்கப்பட்டது என்றோ இப்னு ஜுரைஜ் அறிவித்தால் நிராகரிக்கத்தக்க செய்திகளைக் கொண்டுவருவார். (அக்பரனீ) இன்னார் எனக்கு அறிவித்தார் என்றோ (ஸமிஃத்து) நான் செவியேற்றேன் என்றோ கூறினால் அதுதான் அவர் (செய்திகளில்) உனக்கு போதுமானதாகும்.

2 . இமாம் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
கூறுகிறார்:

இப்னு ஜுரைஜ் தத்லீஸாக அறிவிப்பவற்றை விட்டும் தூர விலகி விடுங்கள். ஏனெனில் அவர் மிக மோசமாகத் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்பவர் ஆவார். அவர் குறை கூறப்பட்ட அறிவிப்பாளர்களிமிடருந்து தாம் செவியேற்றவற்றில் தான் தத்லீஸ் செய்வார்.

3 . இவர் தத்லீஸ் செய்பவராக இருந்தார் என இமாம் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/616…)

  • மேற்கண்ட செய்தியின் அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு ஜுரைஜ் அவர்கள், இப்ராஹீம் பின் மைஸரா அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியேற்றதற்கான எந்த வார்த்தைகளையும் கூறவில்லை என்பதால் இது பலவீனமான செய்தியாகும்…

1 . இந்தக் கருத்தில் ஷரீத் பின் ஸுவைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இப்னு ஜுரைஜ் —> இப்ராஹீம் பின் மைஸரா —> அம்ர் பின் ஷரீத் —> ஷரீத் பின் ஸுவைத் (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: அஹ்மத்-19454, அபூதாவூத்-4848, இப்னு ஹிப்பான்-5674, அல்முஃஜமுல் கபீர்-7242, 7243, ஹாகிம்-7703, குப்ரா பைஹகீ-5920, அல்ஆதாப் லில்பைஹகீ-256,


2 . அம்ர் பின் ஷரீத் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

  • இப்னு ஜுரைஜ் —> இப்ராஹீம் பின் மைஸரா —> அம்ர் பின் ஷரீத் (ரஹ்) —> நபி (ஸல்)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3057.


 


இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா?

1 . முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3057 அறிவிப்பில், இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்யவில்லை. ஆனால் அது முர்ஸலான செய்தி. ஒரு வாதத்திற்கு அந்த செய்தியை ஸஹீஹ் என்று வைத்துக் கொண்டாலும் அந்த செய்தியில் தொழுகையின் இருப்பில் கைகளை ஊன்றி வைப்பது கூடாது என்றுதான் வந்துள்ளது. எனவே தொழுகை அல்லாத நிலைகளில் அவ்வாறு ஊன்றி இருப்பதைத் தவறு என்று கூறமுடியாது.

2 . தொழுகையின் அத்தஹிய்யாத் இருப்பில் இடது கையைப் பின்புறமாக ஊன்றி இருப்பதைத் தான் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று மற்ற சரியான ஹதீஸ்களில் வந்துள்ளது.

(பார்க்க: அஹ்மத்-6347)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.