தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4031

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்பாக நடந்துக் கொள்கிறாரோ அவர், அவர்களையே சார்ந்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(அபூதாவூத்: 4031)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3512.
Abu-Dawood-Shamila-4031.
Abu-Dawood-Alamiah-3512.
Abu-Dawood-JawamiulKalim-3514.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21626-அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்பான் அவர்களைப் பற்றி சிலர் பாராட்டியும் உள்ளனர். சிலர் விமர்சித்தும் உள்ளனர்.

1 . இவரைப் பற்றி பாராட்டியவர்கள்:

  • துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ராஸீ, அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    (இப்னுஹிப்பான்), அப்துர்ரஹ்மான் பின் இப்ராஹீம் ஆகியோர் இவரை பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    யஃகூப் பின் ஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 182
    இறப்பு ஹிஜ்ரி 262
    வயது: 80
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    ஸாலிஹ் பின் முஹம்மத், அபூஸுர்ஆ, இப்னு ஷாஹீன்,பிறப்பு ஹிஜ்ரி 298
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 87
    அபூபக்ர் கதீப் பக்தாதீ ஆகியோர் இவரிடம் குறையில்லை-சுமாரானவர், ஸதூக்-நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
  • அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், இவர் நல்லமனிதர்; இவர் துஆ செய்தால் அல்லாஹ்வால் ஏற்கப்படும் நிலையில் உள்ள மனிதர் என்று கூறியுள்ளார்.
  • (அபூஸுர்ஆ அவர்கள், இவரிடம் சிறிது பலவீனம் உள்ளது என்று கூறியதாக வந்துள்ள தகவல் தவறானது. அஸல் பிரதிகளில் இந்தக் கருத்து இல்லை)

2 . இவரைப் பற்றிய விமர்சனங்கள்:

கத்ரிய்யா, காரிஜிய்யா கொள்கையுடையவர்.

  • கத்ரிய்யா, காரிஜிய்யா கொள்கையுடைவர்களின் கொள்கையான அநியாயக்கார ஆட்சியாளர்கள் பின்னால் தொழக்கூடாது என்பதின்படி இவர் நடந்துள்ளார். இவர் கடமையான தொழுகைகளிலும், ஜுமுஆவிலும் கலந்துக் கொள்ளாமல் இருந்ததால் இவரின் தந்தையின் நண்பரான அவ்ஸாயீ இமாம் அவர்கள், இவருக்கு உபதேசம் செய்து எழுதிய கடிதத்தின் மூலம் இது தெரிகிறது.

(நூல்: அல்மஃரிஃபது வத்தாரீக்-2/391, 392).

  • எனவே தான் இவர் கத்ரிய்யா கொள்கையுடையவர் என்று துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ஸாலிஹ் பின் முஹம்மத் ஆகியோர் கூறியுள்ளனர்.
  • (அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், இவர் கத்ரிய்யா கொள்கையுடையவர் என்ற கருத்தை மறுத்துள்ளார்)
  • (என்றாலும் பித்அத் கொள்கையுடையவர்கள் நம்பகமானவராக இருந்து அவர் பித்அத்திற்கு அழைக்காதவர் என்றால் அவரின் செய்திகளை ஏற்கலாம் என்பதே யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    கதீப் பக்தாதீ போன்ற பல அறிஞர்களின் கருத்தாக உள்ளது. அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 65
    அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் ஆரம்பத்தில் இதை ஏற்காதவராக இருந்தாலும் கடைசி காலத்தில் இந்த வகையினரிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். எனவே தான் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்களும் இது போன்ற பித்அத் கொள்கையுடையவர்கள் இடம்பெறும் ஹதீஸ்களையும் அறிவித்துள்ளார்.)

கடைசி காலத்தில் மூளைக் குழம்பியவர்.

அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியிருப்பதுடன் கடைசி காலத்தில் மூளை குழம்பிவிட்டார் என்றும் இவரின் செய்திகள் சரியானவையே என்றும் கூறியுள்ளார். (எனவே இதன் மூலம் இவர் மூளை குழம்பியபின் ஹதீஸை அறிவிக்கவில்லை என்று தெரிகிறது என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்).

பலவீனமானவர்.

  • இமாம் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அவர்கள், இவரை சுமாரானவர் என்று கூறியிருப்பதுடன் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இவ்வாறே அப்துர்ரஹ்மான் பின் யூஸுஃப் பின் கிராஷ், அபூஸுர்ஆ ஆகியோரும் கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியதாக உஸ்மான் தாரிமீ அவர்களும்; இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியதாக இப்னு அபூகைஸமா அவர்களும் அறிவித்துள்ளனர். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்றாலும் இவர் நல்ல மனிதர் இவரின் செய்திகளை எழுதிக்கொள்லலாம் என்று கூறியதாக முஆவியா பின் ஸாலிஹ் கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்களும் இந்தக் கருத்தையே கூறியுள்ளார்.

(என்றாலும் அப்பாஸ் பின் முஹம்மத் அத்தூரீ அவர்கள், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் இவரை சுமாரானவர் என்று கூறியதாக அறிவித்துள்ளார் என்பதால் அப்பாஸ் அத்தூரீ அவர்களின் கருத்துக்கே முதலிடம் கொடுக்கப்படும் என்பதின் படி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்களின் கருத்து இவர் சுமாரானவர் என்பதாகும்)

  • நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    ஆகியோரும் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். (அறிவிப்பாளகளை விமர்சிப்பதில் இவர்கள் கடினம் கொண்டவர்கள் என்பதால் மற்ற மூத்த அறிஞர்களின் கருத்திற்கே முதலிடம் தரவேண்டும்.)
  • இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் இவர் பலமானவர் அல்ல என்றும், இவரின் ஹதீஸ்களை முன்கர் என்றும் கூறியுள்ளார்.

என்றாலும் இவரின் மாணவர்களான அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
ஆகியோர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களின் கருத்திற்கே முன்னுரிமை தந்துள்ளனர்.

யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அவர்கள், இவர் விசயத்தில் நம்முடைய தோழர்கள் (ஆசிரியர்கள்) கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் இவர் விசயத்தில் நல்லெண்ணம் கொண்டுள்ளார். எனவே இவர் உண்மையாளர்; இவர் விசயத்தில் குறை இல்லை (சுமாரானவர்) என்று கூறியுள்ளார். (தஹ்தீபுத் தஹ்தீப்-2/494)

  • இவர் தன் தந்தையிடமிருந்து மக்ஹூல் வழியாக அறிவிக்கும் செய்திகள் முன்கரானவை என்று ஸாலிஹ் பின் முஹம்மத் அவர்கள் கூறியுள்ளார். (இந்தக் கருத்து ஏற்கத்தக்கதே)

(ஆதார நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/219 , அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/460, தாரீகுல் இஸ்லாம்-4/433, ஸியரு அஃலாமின் நுபலாஃ-7/313, அல்காஷிஃப்-3/243, தஹ்தீபுல் கமால்-17/12, தஹ்தீபுத் தஹ்தீப்-2/493, 494)

  • மேற்கண்ட தகவல்களிலிருந்து அதிகமான அறிஞர்கள் இவரை சுமாரானவர் என்று கூறியிருப்பதால் இவரை ஹஸனுல் ஹதீஸ்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று முடிவு செய்வதே சரியானதாகும் என்பதின் படி சில அறிஞர்கள் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.
  • ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    போன்ற சிலர் இந்த செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.
  • தப்ரானீ அவர்கள் இவர் வழியாக குறைந்த செய்திகளையே பதிவு செய்துள்ளார் என்பதால் இவர் அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை. இவரை தனி ஆதாரமாக ஏற்கக்கூடாது. ஸாலிஹுல் ஹதீஸ் என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் கூறியுள்ளார். (இதன்கருத்து இவர் தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது மற்றவர்கள் அறிவித்திருந்தால் மட்டுமே ஏற்கவேண்டும் என்பதாகும்.)

இந்த செய்தியை இவர் மட்டும் தனித்து அறிவிக்கவில்லை; மற்றவர்களும் அறிவித்துள்ளனர் என்பதால் இந்த விமர்சனம் இதில் வராது. இதன்படி இது ஸஹீஹுன் லிகைரிஹீ ஆகும்.

  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரைப் பற்றி முன்சென்ற அறிஞர்களின் கூற்றுக்களை வைத்து சுருக்கமாக, இவர் நம்பகமானவர்; தவறிழைப்பவர்; கத்ரிய்யா கொள்கையுடையவர் என்று விமர்சிக்கப்பட்டவர்; கடைசிக் காலத்தில் மூளைக் குழம்பியவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/572)

3 . கீழ்கண்ட இறைவசனம் மேற்கண்ட ஹதீஸின் கருத்தை உறுதிப்படுத்துகிறது என்றும் சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

5:51 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰۤى اَوْلِيَآءَ ‌ؔۘ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ؕ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான். (அல்குர்ஆன்-5:51)

யூத, கிருஸ்துவர்களுக்கும், இணைவைப்போருக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற கருத்தில் சரியான ஹதீஸ்கள் உள்ளன.

1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு அபீ ஷைபா-19401 , 33016 , அஹ்மத்-5114 , 5115 , 5667 , அல்முன்தகப்-அப்து பின் ஹுமைத்-848 , அபூதாவூத்-4031 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-231 , அல்முஃஜமுல் கபீர்-14109 , 14110 ,

2 . ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2966 .

3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8606 .

4 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21911 .

5 . தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு அபீ ஷைபா-19437 .

6 . வேறு சில நூல்களில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்தி மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராக உள்ளது.

8 comments on Abu-Dawood-4031

      1. عبد الرحمن بن ثابت بن ثوبان فقال يحيى بن معين وأبو زرعة وأحمد بن عبد الله: ليس فيه بأس

  1. https://tamil.quranandhadis.com/abu-dawood-4294/

    இந்த செய்தியில் பலவீனமானவர் என்று கூறப்பட்டுள்ள அதே அப்துல் ரஹ்மான் பின் ஸாபித் தான் இதிலும் வருகிறார்.. பின்னர் இது மட்டும் எப்படி பலமானதாக வரும்?

    1. சில அறிஞர்கள் இவரை பரவாயில்லை என்று கூறியுள்ளனர்
      يحيى بن معين وأبو زرعة وأحمد بن عبد الله: ليس فيه بأس. وقال عبد الرحمن بن إبراهيم دحيم: هو ثقة. وقال أبو حاتم: هو مستقيم الحديث

    2. சில அறிஞர்கள் இவரை பரவாயில்லை என்று கூறியுள்ளனர்
      யஹ்யா இப்னு முயின்,அபூ ஸுர்ஆ,அஹ்மத் பின் அப்துல்லாஹ்
      மூன்று வகையான விமர்சனங்களும் இவரைப்பற்றி வந்துள்ளது
      1. இவர் பலவீனமானவர்
      2. சரியானவர்
      3. பலமானவர்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.