நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செயல்கள் (அனைத்துமே) எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒரு மனிதனுக்கு அவன் எதை எண்ணியிருந்தானோ அதுதான் கிடைக்கும். ஒருவர் அல்லாஹ்வுக்காகவும், அவனுடைய தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாராயின் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே அமைந்திருக்கும்.
அவரின் ஹிஜ்ரத் அவர் அடைந்து கொள்ளும் உலக ஆதாயம் ஒன்றுக்காகவோ, அவர் மணந்து கொள்ளும் ஒரு பெண்ணுக்காகவோ இருக்குமானால் அவர் எதற்காக ஹிஜ்ரத் செய்தாரோ அதுதான் அவருக்குக் கிடைக்கும்.
என உமர் பின் கத்தாப் (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 49
(புகாரி: 2529)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ اللَّيْثِيِّ، قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَلِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»
Bukhari-Tamil-2529.
Bukhari-TamilMisc-2529.
Bukhari-Shamila-2529.
Bukhari-Alamiah-2344.
Bukhari-JawamiulKalim-2356.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . முஹம்மத் பின் கஸீர்-அல்அப்தீ
3 . ஸுஃப்யான் பின் உயைனா-இப்னு உயைனா
4 . யஹ்யா பின் சயீத்-அல்அன்ஸாரீ
5 . முஹம்மத் பின் இப்ராஹீம்-அத்தைமீ
6 . அல்கமா பின் வக்காஸ்-அல்லைஸீ
7 . உமர் பின் கத்தாப் (ரலி)
மேலும் பார்க்க: புகாரி-1.
சமீப விமர்சனங்கள்