நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. அவை தான் மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.
“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)
அறிவிப்பவர்: ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
சில அறிவிப்பாளர்தொடர்களில் ஸுபைர் (ரலி) அவர்களின் அடிமைக்கும், நபி (ஸல்) அவர்களுக்குமிடையில் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறப்படாமல் வந்துள்ளது.
(பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-190)
(திர்மிதி: 2510)
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ حَرْبِ بْنِ شَدَّادٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَعِيشَ بْنِ الوَلِيدِ، أَنَّ مَوْلًى لِلزُّبَيْرِ، حَدَّثَهُ أَنَّ الزُّبَيْرَ بْنَ العَوَّامِ، حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
دَبَّ إِلَيْكُمْ دَاءُ الأُمَمِ قَبْلَكُمْ: الحَسَدُ وَالبَغْضَاءُ، هِيَ الحَالِقَةُ، لَا أَقُولُ تَحْلِقُ الشَّعَرَ وَلَكِنْ تَحْلِقُ الدِّينَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُوا الجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَفَلَا أُنَبِّئُكُمْ بِمَا يُثَبِّتُ ذَلِكَ لَكُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ
«هَذَا حَدِيثٌ قَدْ اخْتَلَفُوا فِي رِوَايَتِهِ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ». فَرَوَى بَعْضُهُمْ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَعِيشَ بْنِ الوَلِيدِ، عَنْ مَوْلَى الزُّبَيْرِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنِ الزُّبَيْرِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2434.
Tirmidhi-Shamila-2510.
Tirmidhi-Alamiah-2434.
Tirmidhi-JawamiulKalim-2447.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
(நூல்: இலலுல் ஹதீஸ்-2500)
…
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (4/ 247)
544- وَسُئِلَ عَنْ حَدِيثِ مَوْلًى لِآلِ الزُّبَيْرِ، عَنِ الزُّبَيْرِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: دَبَّ إِلَيْكُمْ دَاءُ الْأُمَمِ قَبْلَكُمُ الْحَسَدُ وَالْبَغْضَاءُ.
فَقَالَ: يَرْوِيهِ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ يَعِيشَ بْنِ الْوَلِيدِ بْنِ هِشَامٍ، عَنْ مَوْلًى لِآلِ الزُّبَيْرِ.
قَالَ ذَلِكَ عَنْهُ حَرْبُ بْنُ شَدَّادٍ، وَعَلِيُّ بْنُ الْمُبَارَكِ، وَمَعْمَرُ بْنُ رَاشِدٍ، وَشَيْبَانُ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَقِيلَ: عَنْ شَيْبَانَ، عَنْ يَحْيَى، عَنْ يَعِيشَ، عَنِ الزُّبَيْرِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَقَالَ مُوسَى بن خلف، عن يحيى، عن يَعِيشَ مَوْلَى ابْنِ الزُّبَيْرِ، عَنِ الزُّبَيْرِ.
وَقَالَ هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى، عَنْ يَحْيَى، عَنْ يَعِيشَ، عَنِ الزُّبَيْرِ.
وَالْقَوْلُ قَوْلُ حَرْبِ بْنِ شداد ومن تَابَعَهُ، عَنْ يَحْيَى.
…
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுபைரின் அடிமை என்பவர் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- யஹ்யா பின் அபூகஸீர் —> யஈஷ் பின் வலீத் —> ஸுபைர் (ரலி) அவர்களின் அடிமை —> ஸுபைர் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-190, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25744, அஹ்மத்-1430, திர்மிதீ-2510, குப்ரா பைஹகீ-21066,
- யஹ்யா பின் அபூகஸீர் —> யஈஷ் பின் வலீத் —> இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களின் அடிமை —> அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2232,
முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20339, அஹ்மத்-1412, 1430, 1431,
முஸ்னத் அபீ யஃலா-669, குப்ரா பைஹகீ-21065,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2509, ஹாகிம்-7311,
சமீப விமர்சனங்கள்