தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-620

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…உனக்கு இரு நூறு திர்ஹங்கள் இருந்து, அதற்கு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹங்கள் (ஸகாத் கடமையாகும்). இருபது தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஸகாத்) கடமையில்லை. இருபது தீனார் இருந்து, அதில் ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அரை தீனார் (ஸகாத்) ஆகும். இந்தக் கணக்கின் அடிப்படையில் இதற்கு அதிகமானவைகளுக்குக் கணக்கிட வேண்டும்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)

(திர்மிதி: 620)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ المَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

قَدْ عَفَوْتُ عَنْ صَدَقَةِ الخَيْلِ وَالرَّقِيقِ، فَهَاتُوا صَدَقَةَ الرِّقَةِ: مِنْ كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمًا، وَلَيْسَ فِي تِسْعِينَ وَمِائَةٍ شَيْءٌ، فَإِذَا بَلَغَتْ مِائَتَيْنِ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ

وَفِي البَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، وَعَمْرِو بْنِ حَزْمٍ.: رَوَى هَذَا الحَدِيثَ الأَعْمَشُ، وَأَبُو عَوَانَةَ، وَغَيْرُهُمَا، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، وَرَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ، وَابْنُ عُيَيْنَةَ، وَغَيْرُ وَاحِدٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الحَارِثِ، عَنْ عَلِيٍّ. وَسَأَلْتُ مُحَمَّدًا: عَنْ هَذَا الحَدِيثِ؟ فَقَالَ: «كِلَاهُمَا عِنْدِي صَحِيحٌ عَنْ أَبِي إِسْحَاقَ، يُحْتَمَلُ أَنْ يَكُونَ رُوِيَ عَنْهُمَا جَمِيعًا»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1342.
Tirmidhi-Shamila-620.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-563.




இந்த ஹதீஸில் இடம் பெறும் அறிவிப்பாளரான ஆஸிம் பின் லமுரா என்பவர் பலவீனமானவராவார்.

  • இவர் மனனத் தன்மையில் மிகவும் மோசமானவராவார். தெளிவாகத் தவறு செய்யக் கூடியவர். அலீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றில் அதிகமானவற்றை நபியவர்கள் கூறியதாக அறிவிப்பவராவார். இவர் அறிவித்திருப்பது அலீயின் சொந்தக் கூற்று தான் என்பது) அறியப்படும் போது, விடப்படுவதற்கு தகுதியானவராவார்’ என்று இமாம் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் இவரைப் பற்றிக் குறை கூறியுள்ளார்கள்.
  • இவருடைய அறிவிப்பை வலுவூட்டக் கூடிய வகையில் உறுதியானவர்கள் எவரும் அறிவிக்காத, தவறான செய்திகளை அலீ அவர்களிடமிருந்து இவர் தனித்து அறிவிக்கிறார். குழப்பங்களே இவரிடமிருந்துதான்’ என இமாம் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்களும் இவரைக் குறை கூறியுள்ளார்.

நூற்கள்: அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், பாகம் 2, பக்கம் 69, அல் மஜ்ரூஹீன் பாகம் 2, பக்கம் 125.

எனவே ஆஸிம் பின் லமுரா அறிவிக்கக் கூடிய அனைத்து அறிவிப்புகளும் பலவீனம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.


இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-, தாரிமீ-1669 , இப்னு மாஜா-1790 , 1813 , அபூதாவூத்-1572 , 1574 , திர்மிதீ-620 , நஸாயீ-2477 , 2478 ,


ஜகாத் ஆய்வு செய்தி-6.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1792 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.