தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21986

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

21986. முஆத் (ரலி) அவர்கள் யமனில் இருந்து திரும்ப வந்த போது நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! யமனில் உள்ளவர்களில் சிலர் சிலருக்கு ஸஜ்தா செய்வதை பார்த்தேன். எனவே நாங்கள் உங்களுக்கு ஸஜ்தா செய்யலாமா என்று கேட்டார்கள்,

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதித்திருப்பேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : (ரலி)

முஆத் பின் ஜபல் (ரலி)

معاذ بن جبل

இறப்பு: ஹிஜ்ரி 18, அமவாஸ் (ஷாம்)

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: முஆத் பின் ஜபல்

தந்தை பெயர்: ஜபல் பின் அம்ர் பின் அவ்ஸ்

வம்சம்: கஸ்ரஜ் கோத்திரம், அன்ஸார்

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, யமன், மக்கா, ஷாம்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 18, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 18, அமவாஸ் (ஷாம்)

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

முஆத் பின் ஜபல் ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். ஹலால், ஹராம் விஷயங்களில் நபித்தோழர்களில் மிகவும் அறிந்தவர் என்று நபி (ஸல்) அவர்களால் புகழப்பட்டார். குர்ஆனைத் தொகுத்த ஆறு நபித்தோழர்களில் இவரும் ஒருவர்.

யமன் பகுதிக்கு இஸ்லாத்தைக் கற்றுக்கொடுக்க நபி (ஸல்) அவர்களால் அனுப்பப்பட்டார். ஹிஜ்ரி 18 ஆம் ஆண்டு ஷாம் நாட்டில் அமவாஸ் என்ற இடத்தில் ஏற்பட்ட கொள்ளை நோயில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): இப்னு அப்பாஸ், அபூ மூஸா அல்அஷ்அரீ, அப்துல்லாஹ் பின் அம்ர், இப்னு உமர், அப்துர்ரஹ்மான் பின் ஸம்ரா, அப்துல்லாஹ் பின் அபூ அவ்ஃபா, அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அபூ அத்தஃப்பீல், அப்துர்ரஹ்மான் பின் ஃக்னம், அபூ முஸ்லிம் அல்கவ்லானீ, ஷகீக் பின் ஸலமா

வேறு பெயர்கள்: முஆத்


ஆதாரம்: muslimscholars.info (32) · Should verify


حَدِيثُ مُعَاذِ بْنِ جَبَلٍ

(حدثنا عبد الله، حدثني أبى، فِي سَنَةِ ثَمَانٍ وَعِشْرِينَ وَمِائَتَيْنِ،) حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي ظَبْيَانَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ:

أَنَّهُ لَمَّا رَجَعَ مِنَ الْيَمَنِ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَأَيْتُ رِجَالًا بِالْيَمَنِ يَسْجُدُ بَعْضُهُمْ لِبَعْضٍ، أَفَلَا نَسْجُدُ لَكَ؟ قَالَ: «لَوْ كُنْتُ آمِرًا بَشَرًا يَسْجُدُ لِبَشَرٍ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21986.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21426.



இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் حصين بن جندب بن عمرو அபூ ளப்யான் அவர்கள் முஆத் (ரலி) அவர்களை சந்திக்கவில்லை…


وقال ابن حزم : لم يلق معاذا ، ولا أدركه
تهذيب التهذيب: (1 / 441)

ஹதீஸின் கருத்தும் வரலாற்று செய்திக்கு மாற்றமாக உள்ளது. முஆத் (ரலி) அவர்கள் யமனுக்கு சென்று திரும்ப வந்தது அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது தான், முஆத் (ரலி) யமனில் இருக்கும்போதே நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்…


6 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அஃமஷ் —> அபூளப்யான் —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-8785, அஹ்மத்-21986, அல்முஃஜமுல் கபீர்-373,


  • அபூளப்யான் —> அன்ஸாரிகளில் ஒரு மனிதர் —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-17127, அஹ்மத்-21987,


…


மேலும் பார்க்க: திர்மிதீ-1159.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.