தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3461

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கணவனிடம் சண்டையிட்டு (தகுந்த காரணமின்றி) விவாகரத்து கோரும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

 

இதை நான் அபூஹுரைராவை (ரலி) தவிர வேறு யாரிடமிருந்தும் செவியேற்கவில்லை என ஹஸன் பஸரீ (ரஹ்) கூறினார்.

நஸாயீ இமாம் கூறுகிறார்.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் எந்த ஹதீஸையும் செவியேற்கவில்லை.

(நஸாயி: 3461)

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا الْمَخْزُومِيُّ وَهُوَ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«الْمُنْتَزِعَاتُ وَالْمُخْتَلِعَاتُ هُنَّ الْمُنَافِقَاتُ»

قَالَ الْحَسَنُ: ” لَمْ أَسْمَعْهُ مِنْ غَيْرِ أَبِي هُرَيْرَةَ قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «الْحَسَنُ لَمْ يَسْمَعْ مِنْ أَبِي هُرَيْرَةَ شَيْئًا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-3407.
Nasaayi-Shamila-3461.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3425.




  • ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளாரா? இல்லையா? என்பதில் நான்கு விதமான கருத்துக்கள் உள்ளன.
  1. சிலர் அறவே கேட்கவில்லை என்று கூறுகின்றனர்.
  2. சிலர் கேட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.
  3. சிலர் சில ஹதீஸ்களை மட்டும் கேட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.
  4. சிலர் கருத்துவேறுபாட்டை மட்டும் சுட்டிக்காட்டுவார்கள். ( உ. ம்-இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களைப் போன்று.)
  • ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடம் எந்த ஹதீஸையும் செவியேற்கவில்லை என நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இமாம் அவர்கள் இங்கு குறிப்பிட்டுள்ளதால் இது முர்ஸலான செய்தி என்று சிலர் கூறுகின்றனர்.
  • இன்னும் சிலர் இந்த ஹதீஸில் வரும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள், பலமானவர்கள். ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் அபூஹுரைராவிடம் செவியேற்றதாக வார்த்தை அமைப்பு இருக்கும் போது அந்த ஹதீஸ்கள் முர்ஸல் அல்ல. சரியானவையே என்று கூறியுள்ளனர். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    ஷாகிர், அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் இதை குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: அஸ்ஸஹீஹா-632 .) இவர்களின் கருத்து ஹஸன் பஸரீ (ரஹ்) சில ஹதீஸ்களை மட்டும் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடமிருந்து கேட்டுள்ளார் என்பதாகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அப்துர்ரஸ்ஸாக்-11891 , முஸன்னஃப் இப்னு அபீஷைபா-19257 , அஹ்மத்-9358 , நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
குப்ரா-5626 , நஸாயீ-3461 , அபீயஃலா-6237 , முஃஜமுல் கபீர்-935 , ஸுனன்குப்ரா பைஹகீ-14862 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அஹ்மத்-22440 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.