தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-4072

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எளிமையான திருமணமே சிறந்த திருமணம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு மனிதருக்கு திருமணம் நடத்திவைக்கும் போது அவரிடம், நான் இந்த பெண்ணை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். அந்த பெண்ணிடமும் நான் இந்த மனிதரை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அந்த பெண்ணும் ஆம் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மஹர் எதையும் நிர்ணயிக்காமலேயே அவ்விருவருக்கும் திருமணம் முடித்துவைத்தார்கள். அந்த மனிதர் இல்லறவாழ்கையில் ஈடுபட்ட பின்பும் மஹர் தரவில்லை. அவரின் மரணத்தருவாயில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு இந்த பெண்ணை திருமணம் முடித்து வைத்தார்கள். நான் மஹர் எதுவும் தரவில்லை. இப்போது கைபர் போரில் எனக்கு கிடைத்த பங்கை அந்தப்பெண்ணுக்கு மஹராக தருகிறேன் என்று கூறினார்.

அந்தபெண் கைபரின் பங்கை அவரிடம் மஹராக வாங்கி, அதை விற்று ஒரு லட்சம் திர்ஹத்தை பெற்றார்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

(இப்னு ஹிப்பான்: 4072)

أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ الْيَزَنِيُّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«خَيْرُ النِّكَاحِ أَيْسَرُهُ،

وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ: » أَتَرْضَى أَنْ أُزَوِّجَكَ فُلَانَةً «قَالَ: نَعَمْ، قَالَ لَهَا: أَتَرْضَيْنَ أَنْ أُزَوِّجَكَ فُلَانًا» قَالَتْ: نَعَمْ، فَزَوَّجَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَفْرِضْ صَدَاقًا، فَدَخَلَ بِهَا، فَلَمْ يُعْطِهَا شَيْئًا، فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَوَّجَنِي فُلَانَةً، وَلَمْ أَعْطِهَا شَيْئًا، وَقَدْ أُعْطِيتُهَا سَهْمِي مِنْ خَيْبَرَ، فَكَانَ لَهُ سَهْمٌ بِخَيْبَرَ فَأَخَذَتْهُ فَبَاعَتْهُ فَبَلَغَ مِائَةَ أَلْفٍ


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-4072.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-4163.




إسناده حسن رجاله ثقات عدا هاشم بن القاسم القرشي وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹாஷிம் பின் காஸிம் வயதானபோது நினைவாற்றல் தடுமாறியவர் என்றாலும் இவரிடமிருந்து அபூஅரூபா செவியேற்றது அதற்கு முன் என்பதால் இதன் அறிவிப்பாளர்தொடர் சரியானது…

1 . இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2117இப்னு ஹிப்பான்-4072 , அல்முஃஜமுல் அவ்ஸத்-723 , 724 , ஹாகிம்-2742 , குப்ரா பைஹகீ-14332 , 14333 ,

2 . அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
(ரஹ்) வழியாக வரும் செய்தி:

பார்க்க: முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்-10412 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-4034 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.