அதாஉ பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் குர்பானி எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒருவர் தன் சார்பாகவும், தன் குடும்பத்தார் சார்பாகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் (இதன் மூலம்) பெருமையடித்துக்கொள்வதை நீங்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது” என்று விடையளித்தார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதில் இடம்பெறும் உமாரா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் மதீனாவைச் சேர்ந்தவர் ஆவார். இவரிடமிருந்து மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் (ஹதீஸ்களை) அறிவித்துள்ளார்.
அறிஞர்களில் சிலரின் செயல்பாடு இதன் மீதே அமைந்துள்ளது. இதுவே அஹ்மத் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரின் கருத்துமாகும். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுத்துவிட்டு, “இது எனது சமுதாயத்தில் குர்பானி கொடுக்காதவர்களின் சார்பாக ஆகும்” என்று கூறிய ஹதீஸை இவர்கள் இருவரும் ஆதாரமாகக் கொள்கின்றனர்.
வேறு சில அறிஞர்களோ, “ஒரு ஆடு ஒரு நபருக்கு மட்டுமே போதுமானதாகும்” என்று கூறுகின்றனர். இது அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) போன்ற பிற அறிஞர்களின் கருத்தாகும்.
(திர்மிதி: 1505)حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الحَنَفِيُّ قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنِي عُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ يَقُولُ:
سَأَلْتُ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ: كَيْفَ كَانَتِ الضَّحَايَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «كَانَ الرَّجُلُ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ، فَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ حَتَّى تَبَاهَى النَّاسُ، فَصَارَتْ كَمَا تَرَى»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَعُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ مَدِينِيٌّ، وَقَدْ رَوَى عَنْهُ مَالِكُ بْنُ أَنَسٍ وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ العِلْمِ، وَهُوَ قَوْلُ أَحْمَدَ، وَإِسْحَاقَ، وَاحْتَجَّا بِحَدِيثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ضَحَّى بِكَبْشٍ، فَقَالَ: «هَذَا عَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي»، وَقَالَ بَعْضُ أَهْلِ العِلْمِ: لَا تُجْزِي الشَّاةُ إِلَّا عَنْ نَفْسٍ وَاحِدَةٍ، وَهُوَ قَوْلُ عَبْدِ اللَّهِ بْنِ المُبَارَكِ، وَغَيْرِهِ مِنْ أَهْلِ العِلْمِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1425.
Tirmidhi-Shamila-1505.
Tirmidhi-Alamiah-1425.
Tirmidhi-JawamiulKalim-1421.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்-முஹம்மத் பின் ஈஸா (3. பலமானவர்).
2 . யஹ்யா பின் மூஸா-அல்ஹதானீ (3. பலமானவர்).
3 . அப்துல்கபீர் பின் அப்துல்மஜீத்-அபூபக்ர் அல்ஹனஃபீ (3. பலமானவர்).
4 . ளஹ்ஹாக் பின் உஸ்மான்-அபூஉஸ்மான் (4. நடுத்தரமானவர்).
5 . உமாரா பின் அப்துல்லாஹ் பின் ஸய்யாத் (3. பலமானவர்).
6 . அதாஉ பின் யஸார்-அல்ஹிலாலீ (3. பலமானவர்).
7 . அபூஅய்யூப் (ரலி)-அல்அன்ஸாரீ (1. நபித்தோழர்).
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19943-ளஹ்ஹாக் பின் உஸ்மான் அவர்களை சிலர் பலமானவர் என்றும் சிலர் சுமாரானவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்ற கருத்திலும் கூறியுள்ளனர். இந்தச் செய்தியின் கருத்தை உமாரா அவர்களிடமிருந்து மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் அவர்களும் அறிவித்துள்ளார். (பார்க்க: மாலிக்-1396)
எனவே இதன் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரம்… வேறு பலமான அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தி வந்திருப்பதால் இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தை அடைகிறது. இதையே திர்மிதீ இமாம் அவர்கள் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
…
மேலும் பார்க்க: மாலிக்-1396.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹதீஸ்களின் எண்களை குறிப்பிடும்போது, திர்மிதீ போன்ற சில நூல்களில் பதிவான ஹதீஸ்களுக்கு ஒரே எண் இல்லாமல், அந்தந்த நூல்களில் பதிவு செய்யப்பட்ட அடிப்படையில் ஒரு ஹதீசுக்கு பலவித எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக இந்தப் பக்கத்தில் உள்ள திர்மிதீ ஹதீசுக்கு
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1425.
Tirmidhi-Shamila-1505.
Tirmidhi-Alamiah-1425.
Tirmidhi-JawamiulKalim-1421
இப்படி கொடுத்துள்ளீர்கள். இந்த ஹதீஸை எடுத்து பிறருக்கு அனுப்பும்போது நாம் எந்த எண்ணை குறிப்பிட வேண்டும்?
சிலர் திர்மிதீ 1425 என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இதே எண்ணை இந்த தளத்தில் தேடினால் வேறு ஒரு ஹதீஸ் வருகிறது. இந்த தளத்தில் 1505 என்ற எண்ணில் மட்டுமே இந்த ஹதீஸ் பதிவாகியுள்ளது. இந்தக் குழப்பத்தை தவிர்க்க இதற்கு விளக்கம் தர முடியுமா?
TamilMisc என்பது என்ன நூல்?
TamilMisc-1425. ஆரம்பத்தில் நமது பயான் குறிப்புகள் இணையதளத்தில் உள்ள எண்களாகும், மேலும் இந்த வகை எண்கள் ஆரம்ப குதுபுத்திஸ்ஆ சாப்ட்வேரின் ஆலமிய்யா எண்களாகும். தற்போது ஹதீஸ் எண் தேடலில் shamila-1505. எண்களே தேடினால் வரும். ஷாமிலா சாப்ட்வேரில் ஒரு ஹதீஸ் நூலுக்கே பல பிரதிகள் இருக்கும். அவற்றிலும் எண்கள் மாறுபடும்.
(நாம் பெரும்பாலும் ஹதீஸ்ஆய்வாளர்கள் தக்ரீஜ் வகைக்காக அதாவது ஒரு குறிப்பிட்ட செய்தி ஒரு குறிப்பிட்ட நபித்தோழர் வழியாக, பல அறிவிப்பாளர்தொடர்களிலும், பல நூல்களிலும் வந்திருப்பதை குறிப்பிடும் பிரதிகளின் எண்களை பயன்படுத்தியுள்ளோம்)
முதலில் நீங்கள் இணையதளத்தில் கிடைத்த எண்ணைத் தேடிப்பார்க்கவும், அது கிடைக்கவிட்டால் c-1425. என்று தேடிப்பார்க்கவும். இந்த எண்கள் பெரும்பாலும் குதுபுஸ்ஸித்தா-6 ஹதீஸ்நூல்களில் முஸ்லிம் தவிர்த்து உள்ள மற்ற 5 நூல்களுக்கு பொருந்தும்.