தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7563

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒருவர் ஆட்டை அறுப்பதற்காக அதைப் படுக்க வைத்துக் கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) இப்பிராணியைப் பலமுறை கொல்வதை நீ நாடுகிறாயா? இதை நீ படுக்கவைப்பதற்கு முன்பாகவே உன் கத்தியை நீ கூர்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இது புகாரியின் நிபந்தனைக்குட்பட்ட சரியான ஹதீஸ்; எனினும் (புகாரி, முஸ்லிம் ஆகிய) இருவரும் இதனைப் பதிவு செய்யவில்லை.

(ஹாகிம்: 7563)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ هَانِئٍ، ثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى الشَّهِيدِ، رَحِمَهُ اللَّهُ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ الْعَائِشِيُّ، ثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ رَجُلًا أَضْجَعَ شَاةً يُرِيدُ أَنْ يَذْبَحُهَا وَهُوَ يَحُدُّ شَفْرَتَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتُرِيدُ أَنْ تُمِيتَهَا مَوْتَاتٍ هَلَّا حَدَدْتَ شَفْرَتَكَ قَبْلَ أَنْ تُضْجِعَهَا»

هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الْبُخَارِيِّ وَلَمْ يُخَرِّجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7563.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7626.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்

2 . முஹம்மத் பின் ஸாலிஹ் பின் ஹானிஃ

3 . யஹ்யா பின் முஹம்மத் பின் யஹ்யா-அஷ்ஷஹீத் (அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக!)

4 . அப்துர்ரஹ்மான் பின் முபாரக்-அல்ஆயிஷீ

5 . ஹம்மாத் பின் ஸைத்

6 . ஆஸிம் பின் ஸுலைமான்-அல்அஹ்வல்

7 . இக்ரிமா (இப்னு அப்பாஸ் அவர்களின் அடிமை)

8 . அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)


1 . இந்தச் செய்தியை ஆஸிம் பின் ஸுலைமான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸைத், அப்துர்ரஹீம் பின் ஸுலைமான் ஆகிய இரு பலமானவர்கள் இதை, ஆஸிம் பின் ஸுலைமான் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக (இக்ரிமா அவர்களுக்கும், நபி-ஸல்-அவர்களுக்கும் இடையில் நபித்தோழரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைக் கூறி) அறிவித்துள்ளனர்.

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11916, ஹாகிம்-7563.

2 . இந்தச் செய்தியை ஆஸிம் பின் ஸுலைமான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மஃமர் அவர்கள் மட்டும் முர்ஸலாக (இக்ரிமா அவர்களுக்கும், நபி-ஸல்-அவர்களுக்கும் இடையில் நபித்தோழரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைக் கூறாமல்) அறிவித்துள்ளார்.

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-8608.


التاريخ الكبير لابن أبي خيثمة – السفر الثالث – ط الفاروق (1/ 325):
1194- سَمِعْتُ يَحْيَى بْن مَعِيْن يَقُولُ: ‌إذا ‌حدثك ‌مَعْمَر ‌عَنِ ‌العراقيين فخَفْه؛ إِلا عَنِ الزُّهْرِيّ، وابن طاووس؛ فإن حديثه عنهما مستقيم، فأما أهل الكوفة والبصرة فلا، وما عمل في حديث الأعمش شيئا.


تهذيب التهذيب (4/ 126):
وقال ابن أبي خيثمة: سمعت يحيى بن معين يقول: ‌إذا ‌حدثك ‌معمر ‌عن ‌العراقيين فخالفه إلا عن الزهري وابن طاوس؛ فإن حديثه عنهما مستقيم، فأما أهل الكوفة وأهل البصرة فلا، وما عمل في حديث الأعمش شيئا.

3 . மஃமர் அவர்கள் (மிகப் பலமானவர்தான் என்றாலும் இவர்) ஈராக்வாசிகளிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் (தவறு இருக்கும் என்பதால்) நீ அதற்கு மாறு செய். ஆனால் இவர் ஸுஹ்ரீ, இப்னு தாவூஸ் ஆகியோரிடமிருந்து அறிவிக்கும் செய்திகளைத் தவிர. இவை சரியானவை. ஆனால் இவர் கூஃபா, பஸராவாசிகளிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் அவ்வாறல்ல என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் கூறியதாக அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அபூகைஸமா கூறியுள்ளார்.

(நூல்கள்: தாரீகுல் கபீர்-இப்னு அபூகைஸமா-1194, தஹ்தீபுத் தஹ்தீப்-4/126)

ஆஸிம் பின் ஸுலைமான் பஸராவிலும் கூஃபாவிலும் வாழ்ந்தவர் ஆவார். இவரிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸைத் பஸராவாசி ஆவார். அப்துர்ரஹீம் பின் ஸுலைமான் கூஃபாவாசி ஆவார்.

எனேவே இது சரியான செய்தியாகும்.


2 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11916, அல்முஃஜமுல் அவ்ஸத்-3590, ஹாகிம்-7563, 7570, குப்ரா பைஹகீ-19141,


மேலும் பார்க்க: முஸ்லிம்-3955.

2 comments on Hakim-7563

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.