அலி (ரலி) அவர்கள் கூறியதாவது:
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.
- ஒருவர் ஆய்வு செய்து நீதியில் தவறிழைத்தவர். இவர் நரகத்தில் புகுவார்.
- ஒருவர் உண்மையை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல் அநீதமாக தீர்ப்பளித்தவர். இவரும் நரகத்தில் புகுவார்.
- ஒருவர் ஆய்வு செய்து சரியாக தீர்ப்பளித்தவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.
அறிவிப்பவர் : கதாதா (ரஹ்)
(musannaf-abdur-razzaq-21599: 21599)أخبرنا عبد الرزاق، عَنْ مَعْمَرٍ، عَن قَتَادَةَ، أَنَّ عَلِيًّا، قَالَ:
الْقُضَاةُ ثَلاَثَةٌ: قَاضٍ اجْتَهَدَ فَأَخْطَأَ فَهُوَ فِي النَّارِ، وَقَاضٍ رَأَى الْحَقَّ فَقَضَى بِغَيْرِهِ فَهُوَ فِي النَّارِ، وَقَاضٍ اجْتَهَدَ فَأَصَابَ فَهُوَ فِي الْجَنَّةِ.
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-21599.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் கதாதா (ரஹ்) அவர்கள், அலி (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை. அலி (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 40 ல் இறந்துவிட்டார்கள். கதாதா (ரஹ்) ஹிஜ்ரி 60 க்கு பின் பிறந்தார். வேறு அறிவிப்பாளர்தொடரில் பார்க்கும் போது இடையில் விடுபட்டவர் அபுல்ஆலியா என்று தெரிகிறது. பார்க்க : இப்னுஅபீஷைபா-22963 .
இது மவ்கூஃபான செய்தி. சில ஹதீஸ்கலை அறிஞர்கள் அலி (ரலி) அவர்கள் இதை கூறவில்லை என்று கூறியுள்ளனர்…
…
2 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- மஃமர் —> கதாதா —> அலீ (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21599 ,
- ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
—> கதாதா —> அபுல்ஆலியா —> அலீ (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-22963 , குப்ரா பைஹகீ-20675 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-3573 .
சமீப விமர்சனங்கள்