தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-3963

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

: “வித்ரு தொழுகை ஐந்து அல்லது மூன்று அல்லது ஒரு ரக்அத் ஆகும். அது தொழ முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)

 

இதன் வாசக அமைப்பு, ஸயீத் பின் ஸுலைமான் என்பவரின் அறிவிப்பின்படி உள்ளதாகும்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 3963)

حَدَّثَنَا مُعَاذُ بْنُ الْمُثَنَّى، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، ثنا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ ح، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ قَالَا:، ثنا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الْوِتْرُ خَمْسٌ، أَوْ ثَلَاثٌ، أَوْ وَاحِدَةٌ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِئْ إِيمَاءً»

«وَاللَّفْظُ لِحَدِيثِ بْنِ سُلَيْمَانَ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-3963.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-3865.




إسناده حسن رجاله ثقات عدا محمد بن يحيى الوراق وهو صدوق حسن الحديث ، وسفيان بن الحسين الواسطي وهو صدوق يخطئ

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுஃயான் பின் ஹுஸைன், நம்பகமானவர் என்றாலும், முஹம்மது பின் ஷிஹாப் ஸுஹ்ரீயிடமிருந்து அறிவிக்கும் செய்தி பலவீனமானது என ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…

பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4633 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.