தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1497

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔

பாடம்:

ஜனாஸாத் தொழுகையில் (ஜனாஸாவுக்கு) துஆ செய்வது பற்றி வந்துள்ளவை.

1497. “இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify


بَابُ مَا جَاءَ فِي الدُّعَاءِ فِي الصَّلَاةِ عَلَى الْجِنَازَةِ

حَدَّثَنَا أَبُو عُبَيْدٍ مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ الْمَدِينِيِّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْحَرَّانِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ، فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1497.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1486.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ–இப்னு இஸ்ஹாக் தத்லீஸ் செய்பவர் என்றாலும் இப்னு ஹிப்பான்- 3077 இல் ராவீ–முஹம்மது பின் இப்ராஹீமிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கும் வார்த்தையுடன் அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.
  • இப்னு இஸ்ஹாக் அவர்கள் இதை தனித்து அறிவித்துள்ளார். இந்தக் கருத்து முன்கரானது அல்ல; அதாவது மற்றவர்கள் அறிவிக்காத புதிய சட்டம் உள்ள செய்தி அல்ல. எனவே இது ஹஸன் தரமாகும்.

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1497 , அபூதாவூத்-3199 , முஸ்னத் பஸ்ஸார்-7830 , 8560 , இப்னு ஹிப்பான்-3076 , 3077 , குப்ரா பைஹகீ-6964 ,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3201 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.