1590. முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (உஹதுப் போரில்) உமது சகோதரர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! என்றும் “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும் கூறினார்கள்.
சிலர் உமது கணவரும் (முஸ்அப் பின் உமைர்-ரலி) கொல்லப்பட்டு விட்டார் என்று கூறினர். அதற்கு அவர்கள், (அவரின் பிரிவால்) நான் கவலையடைகிறேன் என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பெண்ணிடம் கணவனுக்கு மற்றவர்களுக்கில்லாத தனி மதிப்பு (அந்தஸ்து) உள்ளது என்று கூறினார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَحْشٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَمْنَةَ بِنْتِ جَحْشٍ،
أَنَّهُ قِيلَ لَهَا: قُتِلَ أَخُوكِ، فَقَالَتْ: رَحِمَهُ اللَّهُ، وَإِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، قَالُوا: قُتِلَ زَوْجُكِ، قَالَتْ: وَاحُزْنَاهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلزَّوْجِ مِنَ الْمَرْأَةِ لَشُعْبَةً، مَا هِيَ لِشَيْءٍ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1590.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1579.
إسناد ضعيف فيه عبد الله بن عمر العدوي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் உமர் என்பவர் பலவீனமானவர். மேலும் இதில் வரும் இஸ்ஹாக் பின் முஹம்மது அல்ஃபர்வீ என்பவர் சில அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
ضعيف عابد
تقريب التهذيب: (1 / 528)
وقال الدارقطني : ضعيف ، وقد روى عنه البخاري ، ويوبخونه في هذا
تهذيب التهذيب: (1 / 127)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : இப்னு மாஜா-1590 , ஹாகிம்-6906 , குப்ரா பைஹகீ-7132 ,
சமீப விமர்சனங்கள்