தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-572

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

“(மறுமை நாளின் அளவில்) பாதி நாளை இந்த சமுதாயம் கடந்துவிடுவதை அல்லாஹ் இயலாததாக ஆக்கிவிடமாட்டான். (யுகமுடிவு நாளின் நெருக்கத்தில்) ஷாம் நாட்டினர் ஒரு மனிதரின் தலைமையிலும், அவரின் குடும்பத்தின் தலைமையிலும் ஒன்றுப்படுவதை நீ கண்டால் கான்ஸ்டாண்டிநோபிள் வெற்றிக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸஅலபா (ரலி)

அறிவிப்பாளர் முஆவியா பின் ஸாலிஹ் அவர்கள், இந்த செய்தியை சிலநேரம் நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும், சிலநேரம் அபூ ஸஅலபா (ரலி) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளார்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 572)

حَدَّثَنَا بَكْرُ بْنُ سَهْلٍ، ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، ثنا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ثَعْلَبَةَ، رَفَعَهُ مُعَاوِيَةُ مَرَّةً، وَلَمْ يَرْفَعْهُ أُخْرَى

«إِنَّ اللهَ لَا يُعْجِزُ هَذِهِ الْأُمَّةَ مِنْ نِصْفِ يَوْمٍ وَإِذَا رَأَيْتَ الشَّامَ مَائِدَةَ رَجُلٍ وَأَهْلِ بَيْتِهِ فَعِنْدَ ذَلِكَ تُفْتَحُ الْقُسْطَنْطِينِيَّةُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-572.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-18050.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பக்ர் பின் ஸஹ்ல் பலவீனமானவர் என நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்களும், சுமாரானவர் என தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் அவர்களும் கூறியுள்ளனர்.
  • இந்த செய்தி நபி (ஸல்) அவர்களின் சொல்லாக வந்திருப்பது தவறு என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியுள்ளார். (நூல்: தாரீகுல் கபீர் 2/250)
  • எனவே இது மவ்கூஃபான செய்தி.

மேலும் பார்க்க: அஹ்மத்-17734.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.