அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரித் தோழர்களில் சிலருக்குச் சொந்தமான ஒட்டகம் ஒன்று இருந்தது. அதனைக் கொண்டு அவர்கள் விவசாயத்திற்குத் தண்ணீர் இறைப்பார்கள். ஒரு நாள் அந்த ஒட்டகம் அவர்களுக்கு அடங்க மறுத்து அதன் முதுகை அவர்கள் பயன்படுத்த தடை செய்தது. எனவே அன்சாரித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது. அதனைக் கொண்டு நாங்கள் விவசாயத்திற்குத் தண்ணீர் இறைப்போம். அது எங்களுக்கு அடங்க மறுத்துவிட்டது. மேலும், அதன் முதுகை அதற்குப் பயன்படுத்த எங்களுக்குத் தடை செய்துவிட்டது” என்று குறிப்பிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “எழுங்கள்” என்று கூறினார்கள். எனவே அவர்களும் அவர்களுடன் எழுந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தினுள் நுழைந்தார்கள். அந்த ஒட்டகம் ஒருபுறம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதை நோக்கி நடந்தார்கள். அப்போது அன்சாரித் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது வெறிபிடித்த நாயைப் போலாகிவிட்டது. அது உங்களைத் தாக்கக்கூடும் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று குறிப்பிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “அதனால் எனக்கு எந்தத் தீங்கும் இல்லை” என்று கூறினார்கள். ஒட்டகம் நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், அவர்களை நோக்கி வந்தது. இறுதியில் அவர்களின் முன்னால் சிரம் பணிந்து விழுந்தது. அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது அறிவு இல்லாத ஓர் உயிரினம். நாங்கள் அறிவார்ந்தவர்கள். நாங்கள் உங்களுக்காகச் சிரம் பணியவே அதிகம் தகுதியானவர்கள்” என்று குறிப்பிட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எந்தவொன்றும் எந்தவொன்றுக்கும் சிரம் பணிவது தகாததாகும். ஒருவேளை எந்தவொன்றும் எந்தவொன்றுக்கும் சிரம் பணியலாம் என்று இருந்திருந்தால், தன் கணவனின் உரிமை மிகப் பெரியது என்பதால் ஒரு பெண் தன் கணவனுக்குச் சிரம் பணியுமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்” என்று குறிப்பிட்டார்கள்.
(bazzar-6452: 6452)حَدَّثنا محمد بن معاوية البغدادي بن مالج الأنماطي ثقة، حَدَّثنا خَلَفُ بْنُ خَلِيفَةَ , عَنْ حَفْصٍ، عَن أَنَسٍ، قَالَ:
كَانَ بَعِيرٌ لِنَاسٍ مِنَ الأَنْصَارِ كَانُوا يَسْنُونَ عَلَيْهِ وَإِنَّهُ اسْتَصْعَبَ عَلَيْهِمْ وَمَنَعَهُمْ ظَهْرَهُ فَجَاءَتِ الأَنْصَارُ إِلَى النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا رَسولَ اللهِ إِنَّهُ كَانَ لَنَا جَمَلٌ نُسْنِي عَلَيْهِ وَإِنَّهُ اسْتَصْعَبَ عَلَيْنَا وَمَنَعَنَا ظَهْرَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأَصْحَابِهِ: قُومُوا فَقَامُوا مَعَهُ، فَجَاءَ إِلَى حائطٍ، والجملُ فِي ناحيةٍ، فَجَاءَ يَمْشِي نَحْوَهُ قَالُوا: يَا رَسولَ اللهِ قَدْ صَارَ كَالْكَلْبِ وَإِنَّا نَخَافُ عَلَيْكَ مِنُه، أَوْ نَخَافُ عَلَيْكَ صَوْلَتَهُ قَالَ: لَيْسَ عَلَيَّ مِنْهُ بَأْسٌ فَلَمَّا رَآهُ الْجَمَلُ جَاءَ الْجَمَلُ يَسِيرُ حَتَّى خَرَّ سَاجِدًا بَيْنَ يَدَيْهِ فَقَالَ أَصْحَابُهُ: يَا رَسولَ اللهِ هَذِهِ بَهِيمَةٌ لَا تَعْقِلُ، وَنَحْنُ نَعْقِلُ، نَحْنُ أَحَقُّ أَنْ نَسْجُدَ لَكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا يَصْلُحُ شَيْءٌ أَنْ يَسْجُدَ لِشَيْءٍ، وَلَوْ صَلُحَ لِشَيْءٍ أَنْ يَسْجُدَ لِشَيْءٍ لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا مِنْ عِظَمِ حَقِّهِ عَلَيْهَا.
وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُهُ يُرْوَى بِهَذَا اللَّفْظِ، عَن أَنَس إلاَّ بِهَذَا الإِسْنَادِ وَحَفْصُ ابْنُ أَخِي أَنَسٍ فَلا نَعْلَمُ حَدَّثَ عَنْهُ إِلَّا خَلَفُ بن خليفة.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-6452.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1989.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . பஸ்ஸார் இமாம்
2 . முஹம்மத் பின் முஆவியா-இப்னு மாலிஜ், அல்அன்மாதீ
3 . கலஃப் பின் கலீஃபா
4 . ஹஃப்ஸ் பின் உமர்
5 . அனஸ் (ரலி)
3 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முஹம்மத் பின் முஆவியா —> கலஃப் பின் கலீஃபா —> ஹஃப்ஸ் பின் உமர் —> அனஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6452, குப்ரா நஸாயீ-9102, …
- ஹுஸைன் பின் முஹம்மத் —> கலஃப் பின் கலீஃபா —> ஹஃப்ஸ் பின் உமர் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-12614, …
மேலும் பார்க்க: திர்மிதீ-1159.
சமீப விமர்சனங்கள்