யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நோக்கிப் படைகளை அனுப்பி வைத்தபோது, யஸீத் பின் அபூஸுஃப்யான் அவர்களுடன் நடந்து சென்றார்கள். யஸீத் (ரலி) அவர்கள் அந்தப் படைகளின் ஒரு பகுதிக்குத் தலைவராக இருந்தார்கள்.
அப்பொழுது யஸீத் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “ஒன்று நீங்கள் சவாரி செய்யுங்கள், இல்லையேல் நான் (சவாரியிலிருந்து) இறங்கிக் கொள்கிறேன்” என்று சொன்னார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “நீர் இறங்க வேண்டியதில்லை, நானும் சவாரி செய்யப் போவதில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் பாதையில் நான் எடுத்து வைக்கும் இந்த அடிகள் மூலம் நற்கூலியை நாடி நான் நடக்கிறேன்” என்று கூறினார்கள்.
பின்னர் (அபூபக்ர்-ரலி அவர்கள்) யஸீத் (ரலி) அவர்களிடம், “நீங்கள் சில கூட்டத்தாரைச் சந்திப்பீர்கள். அவர்கள் தங்களை அல்லாஹ்வுக்காகவே (வணக்கத்தில்) ஈடுபடுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்கள். அவர்கள் தங்களை எதற்காக ஈடுபடுத்திக் கொண்டதாகக் கருதுகிறார்களோ, அதற்காக அவர்களை விட்டுவிடுங்கள்.
மேலும், சில கூட்டத்தாரைச் சந்திப்பீர்கள். அவர்கள் தங்கள் தலையின் நடுப்பகுதியிலுள்ள முடிகளைச் சுத்தமாக நீக்கியிருப்பார்கள். அவர்கள் நீக்கிய அந்தப் பகுதியை வாளால் வெட்டுங்கள். (அதாவது, அவர்களை எதிர்த்துப் போரிடுங்கள்).
மேலும், நான் உங்களுக்குப் பத்து விஷயங்களைப் பற்றி உபதேசம் செய்கிறேன். அவைகள்:
1 . “(போரில்) பெண்களைக் கொல்லாதீர்கள்.
2 . சிறுவர்களைக் கொல்லாதீர்கள்.
3 . முதியவர்களைக் கொல்லாதீர்கள்.
4 . பயன் தரும் மரங்களை வெட்டாதீர்கள்.
5 . வளமாக உள்ள எதையும் அழிக்காதீர்கள்.
6 . உண்பதற்காக அன்றி ஆடு, ஒட்டகம் ஆகியவற்றை அறுக்காதீர்கள்.
7 . பேரீச்ச மரங்களை எரிக்காதீர்கள்.
8 . நீரால் மூழ்கடிக்கவும் செய்யாதீர்கள்.
9 . மோசடி செய்யாதீர்கள்.
10 . அற்பக் கோழையாகி விடாதீர்கள்” என்று கூறினார்கள்.
وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ،
أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ بَعَثَ جُيُوشًا إِلَى الشَّامِ، فَخَرَجَ يَمْشِي مَعَ يَزِيدَ بْنِ أَبِي سُفْيَانَ، وَكَانَ أَمِيرَ رُبْعٍ مِنْ تِلْكَ الأَرْبَاعِ، فَزَعَمُوا أَنَّ يَزِيدَ قَالَ لأَبِي بَكْرٍ: إِمَّا أَنْ تَرْكَبَ، وَإِمَّا أَنْ أَنْزِلَ، فَقَالَ أَبُو بَكْرٍ: مَا أَنْتَ بِنَازِلٍ، وَمَا أَنَا بِرَاكِبٍ، إِنِّي أَحْتَسِبُ خُطَايَ هَذِهِ فِي سَبِيلِ اللهِ، ثُمَّ قَالَ لَهُ: إِنَّكَ سَتَجِدُ قَوْمًا زَعَمُوا أَنَّهُمْ حَبَّسُوا أَنْفُسَهُمْ لِلَّهِ، فَذَرْهُمْ وَمَا زَعَمُوا أَنَّهُمْ حَبَّسُوا أَنْفُسَهُمْ لَهُ، وَسَتَجِدُ قَوْمًا فَحَصُوا عَن أَوْسَاطِ رُؤُوسِهِمْ مِنَ الشَّعَرِ، فَاضْرِبْ مَا فَحَصُوا عَنهُ بِالسَّيْفِ، وَإِنِّي مُوصِيكَ بِعَشْرٍ: لاَ تَقْتُلَنَّ امْرَأَةً، وَلاَ صَبِيًّا، وَلاَ كَبِيرًا هَرِمًا، وَلاَ تَقْطَعَنَّ شَجَرًا مُثْمِرًا، وَلاَ تُخَرِّبَنَّ عَامِرًا، وَلاَ تَعْقِرَنَّ شَاةً، وَلاَ بَعِيرًا، إِلاَّ لِمَأْكَلَةٍ، وَلاَ تَحْرِقَنَّ نَحْلاً، وَلاَ تُغَرِّقَنَّهُ، وَلاَ تَغْلُلْ، وَلاَ تَجْبُنْ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-858.
Muwatta-Malik-Shamila-1292.
Muwatta-Malik-Alamiah-858.
Muwatta-Malik-JawamiulKalim-949.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . யஹ்யா பின் யஹ்யா-அல்லைஸீ
2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம்-மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.பின் அனஸ்
3 . யஹ்யா பின் ஸயீத்-அல்அன்ஸாரீ (ரஹ்)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48293-யஹ்யா பின் ஸயீத்-அல்அன்ஸாரீ அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் மட்டுமே ஹதீஸைக் கேட்டுள்ளார். மற்ற நபித்தோழர்களிடம் நேரடியாக ஹதீஸைக் கேட்டதாக நான் அறியவில்லை என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் கூறியுள்ளார்.
تهذيب التهذيب (4/ 361):
قلت: قال ابن المديني في العلل: لا أعلمه سمع من صحابي غير أنس.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/301)
இவரின் வேறு சில ஹதீஸ்கள் தாபிஈ —> நபித்தோழர் என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளன. இவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக இதைக்கேட்கவில்லை. எனவே இது முர்ஸல் அல்லது முஃளல் என்ற தரத்தில் உள்ளதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் இவைகள் முர்ஸல், முன்கதிஃ யாக உள்ளவை என்றும், இவற்றில் ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்களின் முர்ஸலான செய்தி மற்றவைகளை விட மிகப் பலமானது என்றும், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் இந்தச் செய்தியை முன்கர் என்று கூறியிருந்தாலும் இதற்கு காரணம் தெரியவில்லை. அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இது ஸுஹ்ரீ அவர்களின் ஹதீஸாக வந்திருப்பது முன்கர்-தவறு என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் கூறியதாக விளங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: மஃரிஃபதுஸ் ஸுனன் வல்ஆஸார்-18079)
1 . இந்தக் கருத்தில் யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
- மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர். இப்னு ஜுரைஜ், இப்னு ஃபுளைல் —> யஹ்யா பின் சயீத் —> அபூபக்ர் (ரலி)
பார்க்க: மாலிக்-1292, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-9375, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-33121, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-18131, 18148,
- அப்துல்லாஹ் பின் உபைதா —> அபூபக்ர் (ரலி)
பார்க்க: ஸுனன் ஸயீத்-2383,
- யஹ்யா பின் அபூமுதீஃ —> அபூபக்ர் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-33134,
- கைஸ் —> அபூபக்ர் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-19522,
- ஸுஹ்ரீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூபக்ர் (ரலி)
பார்க்க: அல்அம்வால்-759, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-1111, 6135, குப்ரா பைஹகீ-18125, 18126,
- உர்வா பின் ஸுபைர் —> அபூபக்ர் (ரலி)
பார்க்க: குப்ரா பைஹகீ-16849,
- மஃமர் —> அபூஇம்ரான் —> அபூபக்ர் (ரலி)
பார்க்க: குப்ரா பைஹகீ-18132, 18152,
- யஸீத் பின் அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அபூபக்ர் (ரலி)
பார்க்க: குப்ரா பைஹகீ-18149,
- இப்னு இஸ்ஹாக் —> ஸாலிஹ் பின் கைஸான் —> அபூபக்ர் (ரலி)
பார்க்க: குப்ரா பைஹகீ-18150,
மஃரிஃபதுஸ் ஸுனன் வல்ஆஸார்-,
معرفة السنن والآثار (13/ 249)
18076 – أَخْبَرَنَاهُ أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، أَخْبَرَنَا أَبُو عَمْرٍو السُّلَمِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللَّهُ عَنْهُ بَعَثَ جُيُوشًا إِلَى الشَّامِ، فَخَرَجَ يَمْشِي مَعَ يَزِيدَ بْنِ أَبِي سُفْيَانَ، وَكَانَ أَمِيرَ رُبْعٍ مِنْ تِلْكَ الْأَرْبَاعِ، فَزَعَمُوا أَنَّ يَزِيدَ قَالَ لِأَبِي بَكْرٍ الصِّدِّيقِ: إِمَّا أَنْ تَرْكَبَ، وَإِمَّا أَنْ أَنْزِلَ، فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ: مَا أَنْتَ بِنَازِلٍ، وَمَا أَنَا بِرَاكِبٍ، إِنِّي أَحْتَسِبُ خُطَايَ هَذِهِ فِي سَبِيلِ اللَّهِ، ثُمَّ قَالَ: ” إِنَّكَ سَتَجِدُ قَوْمًا زَعَمُوا أَنَّهُمْ حَبَسُوا أَنْفُسَهُمْ لِلَّهِ فَذَرْهُمْ وَمَا زَعَمُوا أَنَّهُمْ حَبَسُوا أَنْفُسَهُمْ لَهُ، وَسَتَجِدُ قَوْمًا فَحَصُوا عَنْ أَوْسَاطِ رُءُوسِهِمْ مِنَ الشَّعْرِ، فَاضْرِبْ مَا فَحَصُوا عَنْهُ بِالسَّيْفِ، وَإِنِّي مُوصِيكَ بِعَشْرٍ: لَا تَقْتُلَنَّ امْرَأَةً، وَلَا صَبِيًّا، وَلَا كَبِيرًا هَرِمًا، وَلَا تَقْطَعَنَّ شَجَرًا مُثْمِرًا، وَلَا تُخَرِّبَنَّ عَامِرًا، وَلَا تَعْقِرَنَّ شَاةً وَلَا بَعِيرًا إِلَّا لِمَأْكَلَةٍ، وَلَا تَحْرِقَنَّ نَخْلًا وَلَا تُغْرِقَنَّهُ، وَلَا تَغْلُلْ، وَلَا تَجْبُنْ “
18077 – وَبِمَعْنَاهُ رَوَاهُ صَالِحُ بْنُ كَيْسَانَ، وَأَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، وَيَزِيدُ بْنُ أَبِي مَالِكٍ الشَّامِيُّ، عَنْ أَبِي بَكْرٍ، وَكُلُّ ذَلِكَ مُنْقَطِعٌ
18078 – وَرَوَاهُ ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي بَكْرٍ
18079 – فَهَذَا وَإِنْ كَانَ أَيْضًا مُنْقَطِعًا، فَمَرَاسِيلُ ابْنِ الْمُسَيِّبِ أَقْوَى مِنْ مَرَاسِيلِ غَيْرِهِ، إِلَّا أَنَّ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ كَانَ يَقُولُ: هَذَا حَدِيثٌ مُنْكَرٌ وَلَمْ أَقِفْ عَلَى الْمَعْنَى الَّذِي لِأَجْلِهِ أَنْكَرَهُ، وَكَانَ ابْنُهُ عَبْدُ اللَّهِ يَزْعُمُ أَنَّهُ كَانَ يُنْكِرُ أَنْ يَكُونَ ذَلِكَ مِنْ حَدِيثِ الزُّهْرِيِّ، وَاللَّهُ أَعْلَمُ
18080 – وَفِي كُلِّ هَذِهِ الرِّوَايَاتِ ذَكَرَ الشَّيْخَ الْكَبِيرَ، فَإِنْ كَانَ يَتْبَعُ أَبَا بَكْرٍ فِي الرُّهْبَانِ فَلْيَدْفَعْهُ أَيْضًا فِي الْكَبِيرِ وَحَدِيثُ دُرَيْدِ بْنِ الصِّمَّةِ يُشْبِهُ أَنْ يَكُونَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا لَمْ يُنْكِرْ قَتْلَهُ لِمَا كَانَ فِيهِ مِنْ رَأْيِ الْحَرْبِ وَتَدْبِيرِ الْقِتَالِ
18081 – وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعْنَى مَا رُوِيَ عَنْ أَبِي بَكْرٍ، وَأَسَانِيدُهُ غَيْرُ قَوِيَّةٍ
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-4031, 3014,
சமீப விமர்சனங்கள்