தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-875

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் பர்ளுத் தொழுகைக்கு முன் தொழுத தொழுகைகளைப் பற்றி (விளக்கமாக) நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “யாரால் அதனை முழுமையாகச் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

பின்னர் பின்வருமாறு கூறினார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியன் நடுவானிலிருந்து சாயும்போது இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். மேலும், பகலின் நடுப்பகுதிக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் இறுதியில் ஸலாம் கூறுவார்கள்.

(நஸாயி: 875)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ قَالَ:

سَأَلْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّهَارِ قَبْلَ الْمَكْتُوبَةِ قَالَ: مَنْ يُطِيقُ ذَلِكَ؟ ثُمَّ أَخْبَرَنَا قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي حِينَ تَزِيغُ الشَّمْسُ رَكْعَتَيْنِ، وَقَبْلَ نِصْفِ النَّهَارِ أَرْبَعَ رَكَعَاتٍ يَجْعَلُ التَّسْلِيمَ فِي آخِرِهِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-865.
Nasaayi-Shamila-875.
Nasaayi-Alamiah-865.
Nasaayi-JawamiulKalim-865.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்

2 . முஹம்மத் பின் முஸன்னா

3 . முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான்

4 . ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான்

5 . அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ

6 . ஆஸிம் பின் ளம்ரா

7 . அலீ பின் அபூதாலிப் (ரலி)


இந்தச் செய்தியை ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் சுருக்கமாக அறிவித்துள்ளார்.


முழுமையான செய்தியை பார்க்க: அஹ்மத்-650.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.