அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில்) ஒரு ஆட்டையே குர்பானி கொடுத்து வந்தோம். ஒருவர் தன் சார்பாகவும், தன் குடும்பத்தார் சார்பாகவும் அதை அறுப்பார். அதன் பிறகு மக்கள் (அதிகமான எண்ணிக்கையில் குர்பானி கொடுத்து) பெருமையடிக்கத் தொடங்கினர். அதுவே (இப்போது) பெருமையடிக்கும் செயலாக மாறிவிட்டது.
அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)
(முஅத்தா மாலிக்: 1396)وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن عُمَارَةَ بْنِ صَيَّادٍ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ أَخْبَرَهُ، أَنَّ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ أَخْبَرَهُ قَالَ:
كُنَّا نُضَحِّي بِالشَّاةِ الْوَاحِدَةِ يَذْبَحُهَا الرَّجُلُ عَنهُ، وَعَن أَهْلِ بَيْتِهِ، ثُمَّ تَبَاهَى النَّاسُ بَعْدُ، فَصَارَتْ مُبَاهَاةً.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-921.
Muwatta-Malik-Shamila-1396.
Muwatta-Malik-Alamiah-921.
Muwatta-Malik-JawamiulKalim-1018.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . யஹ்யா பின் யஹ்யா-அல்லைஸீ (3. பலமானவர்).
3 . உமாரா பின் அப்துல்லாஹ் பின் ஸய்யாத் (3. பலமானவர்).
4 . அதாஉ பின் யஸார்-அல்ஹிலாலீ (3. பலமானவர்).
5 . அபூஅய்யூப் (ரலி)-அல்அன்ஸாரீ (1. நபித்தோழர்).
1 . இந்தக் கருத்தில் அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- உமாரா பின் அப்துல்லாஹ் —> அதாஉ பின் யஸார் —> அபூஅய்யூப் (ரலி)
பார்க்க: மாலிக்-1396, இப்னு மாஜா-3147, திர்மிதீ-1505, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,
- உமாரா பின் அப்துல்லாஹ் —> அபூஅய்யூப் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,
- மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் —> ஸுஹ்ரீ —> அதாஉ பின் யஸீத் —> அபூஅய்யூப் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-,
2 . ஹுதைஃபா பின் அஸீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-3148.
…
சமீப விமர்சனங்கள்