தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-1733

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையான தொழுகைகளில் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதும்போது பிஸ்மில்லாஹ்வை சத்தமிட்டு ஓதுவார்கள். மேலும் ஃபஜ்ரு தொழுகையிலும், வித்ருத் தொழுகையிலும் குனூத் ஓதுவார்கள். மக்கள் ஒன்றுகூடும் அரஃபாவின் ஃபஜ்ர் தொழுகையின் இறுதியில் கூடுதல் தக்பீர் கூறுவதை ஆரம்பித்து அய்யாமுத் தஷ்ரீக்குடைய இறுதி நாளின் அஸர் தொழுகையில் தக்பீர் கூறுவதை முடிப்பார்கள்”…

அறிவிப்பவர்கள்: அலீ (ரலி), அம்மார் பின் யாஸிர் (ரலி)

(daraqutni-1733: 1733)

ثنا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا الْمُحَارِبِيُّ الْكُوفِيُّ , ثنا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْوَاحِدِ , ثنا سَعِيدُ بْنُ عُثْمَانَ , حَدَّثَنِي عَمْرُو بْنُ شِمْرٍ , عَنْ جَابِرٍ , عَنْ أَبِي الطُّفَيْلِ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ , وَعَمَّارِ بْنِ يَاسِرٍ , أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

يَجْهَرُ فِي الْمَكْتُوبَاتِ بِـ {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] فِي فَاتِحَةِ الْقُرْآنِ , وَيَقْنُتُ فِي صَلَاةِ الْفَجْرِ وَالْوِتْرِ , وَيُكَبِّرُ فِي دُبُرِ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ غَدَاةَ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ آخِرَ أَيَّامِ التَّشْرِيقِ يَوْمَ دَفْعَةِ النَّاسِ الْعُظْمَى


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1733.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1522.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32335-அம்ர் பின் ஷிம்ர், ராவீ-9987-ஜாபிர் பின் யஸீத் போன்றோர் பொய்யர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்கள் ஆவர்.

(நூல்: லிஸானுல் மீஸான்-5809, தஹ்தீபுத் தஹ்தீப்-1/283)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.