தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-1733

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

1733. “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையான தொழுகைகளில் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதும்போது பிஸ்மில்லாஹ்வை சத்தமிட்டு ஓதுவார்கள். மேலும் ஃபஜ்ரு தொழுகையிலும், வித்ருத் தொழுகையிலும் குனூத் ஓதுவார்கள். மக்கள் ஒன்றுகூடும் அரஃபாவின் ஃபஜ்ர் தொழுகையின் இறுதியில் கூடுதல் தக்பீர் கூறுவதை ஆரம்பித்து அய்யாமுத் தஷ்ரீக்குடைய இறுதி நாளின் அஸர் தொழுகையில் தக்பீர் கூறுவதை முடிப்பார்கள்”…

அறிவிப்பவர்கள்: (ரலி), அம்மார் பின் யாஸிர் (ரலி)

அலீ (ரலி)

அலீ பின் அபூதாலிப்-அல்ஹாஷிமீ (ரலி) – Ali ibn Abi Talib

இறப்பு: ஹிஜ்ரி 40, கூஃபா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அலீ பின் அபூதாலிப் பின் அப்துல்முத்தலிப் பின் ஹாஷிம்

தந்தை பெயர்: அபூதாலிப் பின் அப்துல்முத்தலிப்

வம்சம்: குரைஷீ, ஹாஷிமீ

புனைப்பெயர்: அபூ ஹஸன், அபூ துராப், அமீருல் முஃமினீன்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 23, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 40, கூஃபா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் புனித தலமான கஅபாவில் பிறந்த ஒரே நபர் ஆவார். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வீட்டிலேயே வளர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்தபோது, இஸ்லாத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர்களில் அவர்களும் ஒருவர்.

அவர்கள் இஸ்லாத்தின் நான்காவது கலீஃபாவாக இருந்தார்கள். ஹிஜ்ரி 40 இல் கூஃபாவில் ஷஹீதாக்கப்பட்டார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபாத்திமா பின்த் முஹம்மத், அல்மிக்ஃதாத் பின் அல்அஸ்வத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹஸன் பின் அலீ பின் அபூதாலிப், ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப், இப்னு மஸ்ஊத், அல்-பரா பின் ஆஸிப், அபூ ஹுரைரா, அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ, ஸஃபீனா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அப்துல்லாஹ் பின் ஜஃபர்

வேறு பெயர்கள்: அலீ, அபூ ஹஸன், அபூ துராப், அமீருல் முஃமினீன்


ஆதாரம்: muslimscholars.info (5) · Should verify


ثنا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا الْمُحَارِبِيُّ الْكُوفِيُّ , ثنا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْوَاحِدِ , ثنا سَعِيدُ بْنُ عُثْمَانَ , حَدَّثَنِي عَمْرُو بْنُ شِمْرٍ , عَنْ جَابِرٍ , عَنْ أَبِي الطُّفَيْلِ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ , وَعَمَّارِ بْنِ يَاسِرٍ , أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

يَجْهَرُ فِي الْمَكْتُوبَاتِ بِـ {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] فِي فَاتِحَةِ الْقُرْآنِ , وَيَقْنُتُ فِي صَلَاةِ الْفَجْرِ وَالْوِتْرِ , وَيُكَبِّرُ فِي دُبُرِ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ غَدَاةَ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ آخِرَ أَيَّامِ التَّشْرِيقِ يَوْمَ دَفْعَةِ النَّاسِ الْعُظْمَى


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1733.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1522.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32335-அம்ர் பின் ஷிம்ர், ராவீ-9987-ஜாபிர் பின் யஸீத் பின் ஹாரிஸ் ஆகியோரை ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர், இவர்கள் பொய்யர்கள் என்றும், இவர்களின் செய்திகளை எழுதக்கூடாது என்றும்; வேறு சிலர், இவர்கள் முன்கருல் ஹதீஸ் என்றும்; வேறு சிலர், இவர்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்றும்; விடப்பட்டவர்கள் என்றும் விமர்சித்துள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/239, 2/497, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/226, 2/324, லிஸானுல் மீஸான்-5809, தஹ்தீபுத் தஹ்தீப்-1/283, தக்ரீபுத் தஹ்தீப்-1/192)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.