இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அய்ஸார் பின் ஹுரைஸின் அறிவிப்புகள்.
யார் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை நிறைவேற்றி, ஹஜ் செய்து, நோன்பு நோற்று, இன்னும் விருந்தினரை உபசரிக்கின்றாரோ அவர் சுவனம் புகுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 12692)الْعَيْزَارُ بْنُ حُرَيْثٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ غَنَّامٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، قَالَا: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ح، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ قَالَ: ثنا أَبِي، قَالَا: ثنا حُبَيِّبِ بْنِ حَبِيبٍ أَخُو حَمْزَةَ الزَّيَّاتُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْعَيْزَارِ بْنِ حُرَيْثٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ أَقَامَ الصَّلَاةَ، وَآتَى الزَّكَاةَ، وَحَجَّ الْبَيْتَ، وَصَامَ رَمَضَانَ، وَقَرَى الضَّيْفَ دَخَلَ الْجَنَّةَ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-12692.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-12530.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11176-ஹுபைய்யிப் பின் ஹபீப் அஸ்ஸய்யாத் பலவீனமானவர் என அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1373)
- பலமான அறிவிப்பாளர்கள் வழியாக மற்றவர்கள்அறிவிக்காத செய்திகளை அறிவித்துள்ளார் என இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-532)
- மேலும் இந்த செய்தியை அபூ இஸ்ஹாக் அவர்களிடமிருந்து ஹுபைய்யிப் பின் ஹபீப் அஸ்ஸய்யாத் மட்டுமே நபியவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். ஆனால் அபூ இஸ்ஹாக் வழியாக, பலமான அறிவிப்பாளரான மஃமர் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே அறிவிக்கின்றார். எனவே நம்பகமானவர்களுக்கு முரணாக பலவீனமானவர் அறிவிப்பதினால் இந்தச் செய்திக்கு ”முன்கர்” என்றும் நம்பகமானவர்களின் அறிவிப்பு ”மஃரூஃப்” என்றும் கூறப்படும்.
மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21453 .
சமீப விமர்சனங்கள்