தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-8623

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு மூன்று தடவையும், இரண்டாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு இரண்டு தடவையும், மூன்றாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு ஒரு தடவையும் பாவமன்னிப்பு கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(bazzar-8623: 8623)

حَدَّثنا مُحَمد بن عَبد الرحيم، قَال: حَدَّثنا خلف بن الوليد، قَال: حَدَّثنا أَيُّوبُ بْنُ عُتبة، عَن يَحْيَى بْنِ أَبِي كثير، عَن أبي سَلَمَة، عَن أبي هُرَيرة؛

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم استغفر للصف الأول ثلاثًا وللثاني مَرَّتَيْنِ وللثالث مرة.

وهذا الحديث قد رواه غير أيوب، عَن يَحيى فخالف أيوب في روايته فرواه هشام، عَن يَحيى عن خالد بن معدان عن العرباض، ورواه شيبان، عَن يَحيى عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ جُبَير بْنِ نفير عن العرباض عَنِ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-8623.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8696-அய்யூப் பின் உத்பா என்பவர் மிக பலவீனமானவர் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/206)

  • மேலும் மற்ற பலமான செய்திக்கு மாற்றமாக இந்த செய்தியில் “தொழுகையில் மூன்றாவது வரிசையில் இருப்போருக்கும் நபி (ஸல்) அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டார்கள் என்று கூடுதலாக வந்திருப்பதால் இது முன்கர் என்ற தரத்தை அடைகிறது.

2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8623 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8819 ,

மேலும் பார்க்க: இப்னு மாஜா-996 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.