பாடம்:
ஒருவர், தனது தேவையை நிறைவேற்றியவருக்கு அன்பளிப்பு வழங்குதல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தனது சகோதரரர் ஒருவருக்காக பரிந்துரைச் செய்ததால் அவர் தரும் அன்பளிப்பை இவர் ஏற்றுக்கொண்டால், இவர் வட்டியின் வாசல்களில் மிகப்பெரும் ஒரு வாசலை வந்தடைந்தவராவார்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
(அபூதாவூத்: 3541)بَابٌ فِي الْهَدِيَّةِ لِقَضَاءِ الْحَاجَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عُمَرَ بْنِ مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ شَفَعَ لِأَخِيهِ بِشَفَاعَةٍ، فَأَهْدَى لَهُ هَدِيَّةً عَلَيْهَا فَقَبِلَهَا، فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنْ أَبْوَابِ الرِّبَا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3541.
Abu-Dawood-Alamiah-3074.
Abu-Dawood-JawamiulKalim-3077.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அம்ர்
3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்
4 . உமர் பின் மாலிக்
5 . உபைதுல்லாஹ் பின் அபூஜஃபர்
6 . காலித் பின் அபூஇம்ரான்
7 . காஸிம் பின் அப்துர்ரஹ்மான்
8 . அபூஉமாமா (ரலி)
- 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-27602-உபைதுல்லாஹ் பின் அபூஜஃபர் என்பவர் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், இவர் சிறிது பலவீனமானவர் என்று கூறியதாக சிலர் அறிவித்துள்ளனர். வேறு சிலர் சுமாரானவர் என்று கூறியதாக அறிவித்துள்ளனர். - இவரை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
போன்ற மற்றவர்களும் ஆதாரமாக ஏற்றுள்ளனர். - அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், இவரை பலவீனமானவர் என்று கூறியதாக குறிப்பிட்ட தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவர் பலவீனமானவர் அல்ல என்று கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் பலவீனமானவர் என்று விமர்சித்தவர்கள் காரணத்தைக் குறிப்பிடவில்லை என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/310, தஹ்தீபுல் கமால்-19/18, அல்இக்மால்-9/7, அல்காஷிஃப்-3/347, தஹ்தீபுத் தஹ்தீப்-3/6, தக்ரீபுத் தஹ்தீப்-1/636, லிஸானுல் மீஸான்-9/365)
- 2 . மேலும் இதில் வரும் ராவீ-34002-காஸிம் பின் அப்துர்ரஹ்மான் அவர்களை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். மேலும் இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று (அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
போன்ற) சிலர் விமர்சித்திருந்தாலும் அதற்கு காரணம் இவரிடமிருந்து அறிவித்த பலவீனமானவர்கள் தான் என்றும் கூறியுள்ளனர். - இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் பலமானவர்கள் என்றால் அதில் குறையில்லை என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றாலும் அதிகமாக அரிதான செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/113, தஹ்தீபுல் கமால்-23/383, தஹ்தீபுத் தஹ்தீப்-3/414, தக்ரீபுத் தஹ்தீப்-1/792)
இதனடிப்படையில் இந்த இரண்டு அறிவிப்பாளர்கள் நடுத்தரமானவர்கள் என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.
அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ-2567 போன்ற நூல்களில் வரும் செய்தியின் அடிப்படையில் இதை (ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்ற) சிலர் பலவீனமான செய்தி என்று கூறியுள்ளனர்.
அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், அந்தச் செய்தி பரிந்துரை அல்லாத காரியங்களில் கிடைக்கும் உதவிக்காக அன்பளிப்பு செய்யலாம் என்பதைக் குறிக்கிறது. இந்தச் செய்தி பரிந்துரை காரியங்களில் அன்பளிப்பு பெறுவது வட்டி போன்றது என்ற கருத்தை தருகிறது என்று குறிப்பிட்டு இரண்டு செய்திகளுக்கும் முரண் இல்லை என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-2465)
வேறு சிலர் பரிந்துரை செய்த காரியம் இவர் மீது கடமையானது என்றால் அல்லது அந்தக் காரியம் தடைசெய்யப்பட்டது என்றால் அதற்கு அன்பளிப்பு பெறுவது தவறு என்றும், அந்தக் காரியம் அனுமதிக்கப்பட்டவை என்ற வகையில் இருந்தால் அதற்கு அன்பளிப்பு பெறுவது நஸாயீ-2567 இல் வரும் செய்தியின் அடிப்படையில் கூடும் என்றும் கூறியுள்ளனர்.
(தகவல்: من شفع لأخيه شفاعة)
காஸிம் பின் அப்துர்ரஹ்மான் வழியாக அறிவிப்பவர்களையும், இவரின் வழியாக வரும் அனைத்து செய்திகளையும் ஆய்வு செய்து பார்க்கும்போது இவரைப் பற்றி விமர்சித்தவர்களின் கருத்துக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று தெரிகிறது.
(நூல்: روايات الإمام القاسم بن عبد الرحمن الشامي في الميزان)
1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- காலித் பின் அபூஇம்ரான் —> காஸிம் பின் அப்துர்ரஹ்மான் —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: அஹ்மத்-22251, அபூதாவூத்-3541, முஸ்னத் ரூயானீ-, அல்முஃஜமுல் கபீர்-, அத்துஆ-தப்ரானீ-, அல்அமாலீ-ஷஜரீ-,
- அலீ பின் யஸீத் —> காஸிம் பின் அப்துர்ரஹ்மான் —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: முஸ்னத் ரூயானீ-, அல்முஃஜமுல் கபீர்-,
2 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-14666.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: நஸாயீ-2567,
அஸ்ஸலாமு அலைக்கும்
ஏழு வானங்களையும், ஏழு பூமிகளையும் தராசின் ஒரு தட்டிலும், லாஇலாஹ இல்லல்லாஹ்வை மற்றொரு தட்டிலும் வைத்தால், லாஇலாஹஇல்லல்லாஹ்வுடைய தட்டுதான் கனத்தால் கீழே தாழ்ந்துவிடும். (நூல்: தர்ஃகீப்)
இந்த ஹதீஸின் தரம்?
அஸ்ஸலாமு அலைக்கும்.
பார்க்க: அஹ்மத்-6583.
வ அலைக்கும் ஸலாம்
இந்த எண்ணில் அந்த ஹதீஸ் இல்லை சகோ ?
அரபியில் உள்ளது. இன்ஷா அல்லாஹ் தமிழாக்கம் செய்கிறேன்.