தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-1020

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1020. கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதன் மீது உட்காருவதையும்; அதன் மீது தொழுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஸயீத் (ரலி)

أبو سعيد الخدري

இறப்பு: ஹிஜ்ரி 74, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸஃத் பின் மாலிக் பின் ஸினான்

தந்தை பெயர்: மாலிக் பின் ஸினான்

வம்சம்: அன்ஸாரீ, அல்கஸ்ரஜீ

புனைப்பெயர்: அபூ ஸயீத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 74, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஸயீத் அல்குத்ரீ ரலி அவர்களின் இயற்பெயர் ஸஃத் பின் மாலிக் பின் ஸினான் ஆகும். இவர் அன்ஸாரீ, அல்கஸ்ரஜீ கோத்திரத்தைச் சேர்ந்தவர். மதீனாவில் பிறந்த இவர், ஹிஜ்ரி 74 இல் மதீனாவிலேயே மரணமடைந்தார்.

உஹத் போரில் பங்கேற்க சிறுவராக இருந்ததால் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அகழ் போர் மற்றும் பைஅத்துர் ரிழ்வான் ஆகியவற்றில் பங்கேற்றார். மதீனாவின் முஃப்தியாகவும் பணியாற்றினார்.

இவர் 1170 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), மாலிக் பின் ஸினான், கதாதா பின் அன்னுஃமான், அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான், அலீ பின் அபூ தாலிப், ஸைத் பின் ஸாபித், அபூ கதாதா பின் ரப்ஈ, அப்துல்லாஹ் பின் ஸலாம், உஸைத் பின் ஹுளைர் பின் ஸம்மாக், இப்னு அப்பாஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துர்ரஹ்மான் பின் அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸைனப் பின்த் கஅப் பின் அஜ்ரா அல்அன்ஸாரிய்யா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸைத் பின் ஸாபித், ஸயீத் பின் அல்முஸய்யிப், தாரிக் பின் ஷிஹாப், அபுத் துஃபைல், அதா பின் அபூ ரபாஹ், அதா பின் யஸார், முஜாஹித் பின் ஜப்ர்

வேறு பெயர்கள்: அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸஃத் பின் மாலிக் பின் ஸினான்


ஆதாரம்: muslimscholars.info (38) · Should verify


حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ:

«نَهَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْنَى عَلَى الْقُبُورِ، أَوْ يُقْعَدَ عَلَيْهَا، أَوْ يُصَلَّى عَلَيْهَا»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-1020.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-1007.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ காஸிம் பின் முகைமிரா பலமானவர் தான் என்றாலும், இவர் எந்த நபித்தோழரிடமும் நேரடியாக ஹதீஸைக் கேட்டதாக நாம் கேள்விப்படவில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகு இப்னு மயீன்-3/430, தஹ்தீபுத் தஹ்தீப்-3/421, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/414)

  • எனவே சிலர் இந்த அறிவிப்பாளர்தொடரை சரியானது என்று கூறியிருந்தாலும் முன்கதிஃ என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-1564 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1768 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.