நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமான ஒரு நாளின் அரைப் பொழுது, அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வின் முன்னால் மக்கள் (விசாரணைக்காக) நிற்பார்கள். ஆனால், இறைநம்பிக்கையாளர்களுக்கு அந்த நாள், சூரியன் மறைவதற்காகக் கீழ்நோக்கிச் சென்று மறையும் நேரம் போல் எளிதாகிவிடும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(abi-yala-6025: 6025)حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ خَالِدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ مِقْدَارَ نِصْفِ يَوْمٍ مِنْ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ، فَيَهُونُ ذَلِكَ الْيَوْمُ عَلَى الْمُؤْمِنِ كَتَدَلِّي الشَّمْسِ لِلْغُرُوبِ إِلَى أَنْ تَغْرُبَ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-6025.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-5977.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அலீ-அபூயஃலா இமாம்
2 . இஸ்மாயீல் பின் அப்துல்லாஹ் பின் காலித்
3 . வலீத் பின் முஸ்லிம்-அபுல்அப்பாஸ்
4 . அப்துர்ரஹ்மான் பின் அம்ர்-அவ்ஸாஈ இமாம்
5 . யஹ்யா பின் அபூகஸீர்
6 . அபூஸலமா
7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47830-வலீத் பின் முஸ்லிம் பலமானவர்; தத்லீஸ் தஸ்வியத் செய்பவர். இந்த அறிவிப்பாளர்தொடரில் தனது ஆசிரியரான அவ்ஸாஈ அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்துள்ளார்.
- இவ்வாறே அவ்ஸாஈ அவர்கள் தனது ஆசிரியரான யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக இப்னு ஹிப்பான்-7333 இல் உள்ளது. எனவே வலீத் அவர்களின் தத்ஸீஸ் தஸ்வியத் குறை இதில் இல்லை.
- மேலும் ராவீ-48324-யஹ்யா பின் அபூகஸீர் பலமானவர்; தத்லீஸ் செய்பவர். இந்த அறிவிப்பாளர்தொடரில் தனது ஆசிரியரான அபூஸலமா அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்துள்ளார்.
எனவே இதில் தத்லீஸ் இல்லை. மேலும் இந்தச் செய்தி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் நிபந்தனைப்படி உள்ள செய்தி என்றும் ஹதீஸ்துறை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் மட்டுமே இதில் இடம்பெறும் “50 ஆயிரத்தில் பாதி அளவு” என்ற கருத்தை ஃகரீப்-அரிதானது கருத்து என்றும், வேறுசில ஹதீஸ்களுக்கு முரணாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-2817) – அந்தச் செய்திகள்….
என்றாலும் மறுமைநாளின் அளவு 50 ஆயிரம் ஆண்டுகள் தான் என்றாலும் “அந்நாளில் சொர்க்கவாசிகள் அழகிய தங்குமிடத்திலும், சிறந்த ஓய்விடத்திலும் இருப்பார்கள். (அல்குர்ஆன்: 25:24) என்ற வசனத்தில் “சிறந்த ஓய்விடம்” என்பதைக் குறிக்க – مَقِيلًا – என்ற வார்த்தை கூறப்பட்டுள்ளது. இது மதிய ஓய்வைக் குறிக்கும் என்பதின்படி சொர்க்கவாசிகள் அந்த நாளின் பகலிலேயே சொர்க்கம் சென்றுவிடுவர் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
வேறு சில செய்திகளின் அடிப்படையில் “காஃபிர்கள் விசாரணைக்காக மறுமை நாளில் 50 ஆயிரம் வருடங்கள் நிறுத்தப்படுவார்கள்” என்றும் சில அறிஞர்கள் கூறியுள்ளனர்…
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6025, ஃபவாஇத் இப்னு துஹைம்-13, இப்னு ஹிப்பான்-7333, ஃபவாஇத் தம்மாம்-930, தாரீகு திமிஷ்க்-6582,
- ஃபவாஇத் இப்னு துஹைம்-13.
فوائد ابن دحيم (بترقيم الشاملة آليا):
13 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ دُحَيْمٍ، ثنا أَبِي، وَهِشَامٌ، قالا: نا الْوَلِيدُ، حَدَّثَنِي الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ مِقْدَارَ نِصْفِ يَوْمٍ مِنْ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ، يُهَوِّنُ اللَّهُ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِ كَتَدَلِّي الشَّمْسِ لِلْغُرُوبِ إِلَى أَنْ تَغْرُبَ»
- ஃபவாஇத் தம்மாம்-930.
فوائد تمام (1/ 365)
930 – حَدَّثَنَا أَبُو بَكْرٍ يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ الْعَبْدَرِيُّ، ثنا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ زِيَادِ بْنِ مِهْرَانَ الرَّازِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الْجَمَّالُ، ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ} [المطففين: 6] «مِقْدَارُ نِصْفِ يَوْمٍ يَكُونُ ذَلِكَ الْيَوْمُ عَلَى الْمُؤْمِنِ كَتَدَلِّي الشَّمْسِ لِلْغُرُوبِ»
- தாரீகு திமிஷ்க்-6582.
تاريخ دمشق لابن عساكر (8/ 416):
أخبرنا أبو محمد السيدي أنا أبو عثمان البحيري أنا أبو عمرو بن حمدان أنا أبو يعلى المصلي نا إسماعيل بن عبد الله بن خالد نا الوليد بن مسلم نا الأوزاعي عن يحيى بن أبي كثير نا أبو سلمة عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال يقوم الناس لرب العالمين مقدار نصف يوم خمسين ألف سنة فيهون ذلك اليوم على المؤمن كتدلي الشمس للغروب إلى أن تغرب
2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்அஹ்வால்-இப்னு அபித்துன்யா-201,
الأهوال لابن أبي الدنيا (ص: 168)
201 – دثنا هَارُونُ، دثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، دثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ دَرَّاجٍ أَبِي السَّمْحِ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: «يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ يَوْمَ الْقِيَامَةِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارَاهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ»
அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வின் முன்னால் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமான ஒரு நாளின் அளவுக்கு, மக்கள் (விசாரணைக்காக) நிற்பார்கள்.
அறிவிப்பவர்: அபுல்ஹைஸம் (ரஹ்)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு அபுத்துன்யா
2 . ஹாரூன் பின் மஃரூஃப்
3 . வலீத் பின் முஸ்லிம்-அபுல்அப்பாஸ்
4 . இப்னு லஹீஆ
5 . தர்ராஜ் பின் ஸம்ஆன்-தர்ராஜ் அபுஸ்ஸம்ஹ்
6 . ஸுலைமான் பின் அம்ர்-அபுல்ஹைஸம்
7 . அபூஸயீத் (ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24059-தர்ராஜ் பின் ஸம்ஆன்-தர்ராஜ் அபுஸ்ஸம்ஹ் பற்றி சிலர் முன்கருல் ஹதீஸ் என்று விமர்சித்துள்ளனர். சிலர், இவர் அபுல்ஹைஸம் —> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்திகளில் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளனர்.
பார்க்க: தர்ராஜ் பின் ஸம்ஆன்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1803,
சமீப விமர்சனங்கள்