தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1502

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் (செய்து அல்லாஹ்வைத்) துதிக்கும் போது அதை வலது கை விரல்களால் எண்ணி செய்வதை பார்த்தேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(எனது ஆசிரியர்களான) உபைதுல்லாஹ் பின் உமர், முஹம்மது பின் குதாமா ஆகியோரில் முஹம்மது பின் குதாமா அவர்கள் (மட்டுமே) “வலதுகை (விரல்களால்)” என்று அறிவித்தார்.

(அபூதாவூத்: 1502)

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، وَمُحَمَّدُ بْنُ قُدَامَةَ، فِي آخَرِينَ، قَالُوا: حَدَّثَنَا عَثَّامٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ:

«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»،

قَالَ ابْنُ قُدَامَةَ: بِيَمِينِهِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1502.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1286.




இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.

(விரிவான செய்தியை பார்க்க: திர்மிதீ-3410)


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . உபைதுல்லாஹ் பின் உமர் பின் மைஸரா, 3 . முஹம்மத் பின் குதாமா

4 . அஸ்ஸாம் பின் அலீ

5 . அஃமஷ்

6 . அதாஉ பின் ஸாயிப்

7 . ஸாயிப் பின் மாலிக்

8 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


…இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) அவர்கள், கூஃபாவை சேர்ந்தவர். பஸராவிற்கு இரண்டாவது முறை சென்ற பின் இறுதி காலத்தில் மூளை குழம்பியவர் என்றாலும் அஃமஷ் (ரஹ்) கூஃபாவை சேர்ந்தவர் என்பதால், அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) மூளை குழம்புவதற்கு முன் செவியேற்றுள்ளார் என்பதால் இது சரியான செய்தி…


இந்தச் செய்தியை அஸ்ஸாம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலரும் வலதுகை விரல்களால் என்று அறிவிக்கவில்லை. முஹம்மது பின் குதாமா மட்டுமே அறிவித்துள்ளார்…


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1502, திர்மிதீ-3411, நஸாயீ-1355, குப்ரா நஸாயீ-1280, முஸ்னத் பஸ்ஸார்-2406, இப்னு ஹிப்பான்-843, அல்முஃஜமுல் அவ்ஸத்-7035, 8568, ஹாகிம்-2005, 2006, குப்ரா பைஹகீ-3027, 3367, 3368,


2 . யுஸைரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3583.


3 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மன் இஸ்முஹூ அதாஃ-, குப்ரா பைஹகீ-,

பெயர் தவறு.


4 . ஸஅத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5272, திர்மிதீ-3410,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.