அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தொடர்ந்து பாவமன்னிப்புக் கோரி வந்தால் அவருக்கு ஏற்பட்ட எல்லா வகையான நெருக்கடிகளிலிருந்தும் வெளியேற அல்லாஹ் வழியை ஏற்படுத்துவான். மேலும் எல்லா வகையான கவலைகளிலிருந்தும் விடுதலையளிப்பான். மேலும் அவர் நினைத்துப் பார்க்காத வகையில் பொருளாதாரத்தை வழங்குவான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(அபூதாவூத்: 1518)حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُصْعَبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ حَدَّثَهُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ حَدَّثَهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ، جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا، وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1518.
Abu-Dawood-Alamiah-1297.
Abu-Dawood-JawamiulKalim-1300.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . ஹிஷாம் பின் அம்மார்
3 . வலீத் பின் முஸ்லிம்
4 . ஹகம் பின் முஸ்அப்
5 . முஹம்மத் பின் அலீ
6 . அலீ பின் அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
7 . அப்துல்லாஹ் பின் அப்பாஸ்-இப்னு அப்பாஸ் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13811-ஹகம் பின் முஸ்அப் என்பவர் பற்றி இவர் அறியப்படாதவர் என்று அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் கூறியுள்ளனர். - இவரை பலமானவர்களின் பட்டியலில் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார். மேலும் தனது மஜ்ரூஹீன் எனும் நூலில் விமர்சிக்கப்பட்டவர்களின் பட்டியலிலும் குறிப்பிட்டுவிட்டு, இவர் சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார். இவைகள் ஏற்கத் தகுந்தவை அல்ல. எனவே இவரின் செய்திகளை அடையாளம் காட்டுவதற்காக குறிப்பிடலாமே தவிர இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். - இப்னு தாஹிர் அவர்கள், இவரை பலவீனமானவர் என்றும் முன்கருல் ஹதீஸ் என்றும் கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/128, தஹ்தீபுல் கமால்-7/135, தஹ்தீபுத் தஹ்தீப்-1/469, தக்ரீபுத் தஹ்தீப்-1/264)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள் அனைத்திலும் விமர்சனம் இருப்பதால் இது பலவீனமான செய்தியாகும்.
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-2234 , இப்னு மாஜா-3819 , அபூதாவூத்-1518 , குப்ரா நஸாயீ-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-7677 , குப்ரா பைஹகீ-,
2 . ஹஸன் பின் அலீ (ரலி)
3 . அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப் (ரலி)
4 . ஜஃபர் பின் நுஸ்தூர்
சமீப விமர்சனங்கள்