நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் பரஸி, வல்ஜுனூனி, வல்ஜுதாமி, வமின் ஸய்யிஇல் அஸ்காம்” என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.
(துஆவின் பொருள்: அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிழும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(அபூதாவூத்: 1554)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ:
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ البَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1329.
Abu-Dawood-Shamila-1554.
Abu-Dawood-Alamiah-1329.
Abu-Dawood-JawamiulKalim-1332.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . மூஸா பின் இஸ்மாயீல்
3 . ஹம்மாத் பின் ஸலமா
4 . கதாதா பின் திஆமா
5 . அனஸ் (ரலி)
الجامع في الجرح والتعديل (3/ 246):
وقال يعقوب بن سفيان: حدثني محمد (ابن عبد الرحيم) قال: سمعت عليًّا قال: أصحاب قتادة ثلاثة: سعيد وهشام وشعبة، فأما سعيد فأتقنهم، وأما هشام فأكثرهم، وأما شعبة فأعلمهم بما سمع. وقال: ليس بعد هؤلاء أحدٌ مثل همام من كتابه. “المعرفة والتاريخ” 2/ 140.
…
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- கதாதா —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-13004, அபூதாவூத்-1554, நஸாயீ-5493, …
ஆய்வுக்காக: البَسْطُ التَّام لتدليس قَتَادَةَ.
இதில் கூறப்படும் சில ஆய்வுத் தகவல்:
1 . மேற்கண்ட செய்தியை கதாதா அவர்களின் முக்கிய மாணவர்களான ஹிஷாம், ஸயீத் பின் அபூஅரூபா,பிறப்பு ஹிஜ்ரி 69
இறப்பு ஹிஜ்ரி 156
வயது: 87
ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஆகியோர் அறிவிக்கவில்லை.
2 . கதாதா தத்லீஸ் செய்பவர். இவர் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளை புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அறிஞர்கள் பதிவு செய்திருந்தாலும் அதிலும் ஸிமாஃ வை, அல்லது வேறு சான்றை பார்க்க வேண்டும்.
3 . கதாதா அவர்களிடமிருந்து மஃமர் அறிவிக்கும் செய்திகளை பெரும்பாலான அறிஞர்கள் விமர்சித்திருந்தாலும் அது சரியல்ல. மஃமர் அவர்கள் இதை கதாதா அவர்களிடமிருந்து முர்ஸலாக அதாவது அனஸ் (ரலி) அவர்களை கூறாமல் அறிவித்துள்ளார்.
شرح علل الترمذي (2/ 697):
وقال البرديجي: ـ أيضاً ـ: (أحاديث) شعبة، عن قتادة، عن أنس عن النبي صلى الله عليه وسلم كلها صحاح، وكذلك سعيد بن أبي عروبة، وهشام الدستوائي، إذا اتفق هؤلاء الثلاثة على الحديث فهو صحيح وإذا اختلفوا في حديث واحد، فإن القول فيه قول رجلين من الثلاثة، فإذا اختلف الثلاثة توقف عن الحديث، وإذا انفرد واحد من الثلاثة في حديث نظر فيه: فإن كان لا يعرف من الحديث إلا من طريق الذي رواه كان منكراً.
وأما أحاديث قتادة، التي يرويها الشيوخ، مثل حماد بن سلمة، وهمام، وأبان، والأوزاعي، فينظر في الحديث: فإن (كان) الحديث يحفظ من غير طريقهم عن النبي صلى الله عليه وسلم، وعن أنس بن مالك، من وجه آخر، لم (يدفع) ، وإن كان لا يعرف عن أحد عن النبي صلى الله عليه وسلم ولا من طريق عن أنس إلا من رواية هذا الذي ذكرت لك كان منكراً. انتهى.
பர்தீஜி எனும் அறிஞர் கூறுகிறார்:
ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் கதாதா —> அனஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்திகள் அனைத்தும் சரியானவை. இவ்வாறே கதாதா அவர்களிடமிருந்து ஸயீத் பின் அபூஅரூபா,பிறப்பு ஹிஜ்ரி 69
இறப்பு ஹிஜ்ரி 156
வயது: 87
ஹிஷாம் அத்தஸ்துவாஈ ஆகியோர் அறிவிக்கும் செய்திகளும் சரியானவை.
இந்த மூவரும் ஒரு ஹதீஸில் ஒத்துப்போனால், அது ஸஹீஹ் ஆகும். ஒரு ஹதீஸில் இவர்கள் கருத்து வேறுபாடு கொண்டால், மூவரில் இருவரின் கூற்று ஏற்றுக்கொள்ளப்படும். மூவரும் கருத்து வேறுபாடு கொண்டால், அந்த ஹதீஸை நிறுத்திவைக்க வேண்டும்.
இந்த மூவரில் ஒருவர் மட்டும் ஒரு ஹதீஸை அறிவித்தால், அதை ஆய்வு செய்யவேண்டும். அந்த ஹதீஸ் அவர் வழியாக மட்டுமே வந்திருந்தால் அது முன்கர் ஆகும்.
கதாதா அவர்களிடமிருந்து ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாம் பின் யஹ்யா, அபான், அவ்ஸாஈ போன்றோர் அறிவிக்கும் செய்திகளையும் ஆய்வு செய்ய வேண்டும். இவை வேறு நபித்தோழரிடமிருந்தோ அல்லது இவர்கள் இடம்பெறாத வேறு அறிவிப்பாளர்தொடரில் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து வந்திருந்தால் சரி ஏற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் இவை முன்கர் ஆகும்.
…
சமீப விமர்சனங்கள்