தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-24

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 13

இரவில் பாத்திரத்தில் சிறுநீர் கழித்து அதை தன் அருகில் வைத்துக் கொள்பவர் (காலையில் வெளியில் கொட்டி விடவேண்டும்)

நபி (ஸல்) அவர்களின் கட்டிலுக்கு அடியில் மரப்பாத்திரம் ஒன்று (வைக்கப்பட்டு) இருக்கும். அதில் அவர்கள், இரவில் சிறுநீர் கழிப்பார்கள்.

அறிவிப்பவர்: உமைமா பின்த் ருகையா (ரலி)

(அபூதாவூத்: 24)

13 – بَابٌ فِي الرَّجُلِ يَبُولُ بِاللَّيْلِ فِي الْإِنَاءِ ثُمَّ يَضَعُهُ عِنْدَهُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ حُكَيْمَةَ بِنْتِ أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ، عَنْ أُمِّهَا، أَنَّهَا قَالَتْ:

«كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدَحٌ مِنْ عِيدَانٍ تَحْتَ سَرِيرِهِ، يَبُولُ فِيهِ بِاللَّيْلِ»


Abu-Dawood-Tamil-22.
Abu-Dawood-TamilMisc-22.
Abu-Dawood-Shamila-24.
Abu-Dawood-Alamiah-22.
Abu-Dawood-JawamiulKalim-22.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13870-ஹுகைமா பின்த் உமைமா பற்றி, இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இமாம் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் யாராலும் அறியப்படாத நபர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-8663)

  • இமாம் இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
    இறப்பு ஹிஜ்ரி 774
    வயது: 74
    அவர்கள் இந்த ஹதீஸைக் குறிப்பிட்டுவிட்டு அதன் கீழ் இந்தச் செய்தி சரியானதல்ல என்று கூறியுள்ளார். நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாத நபரைக் கொண்டதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அமைந்துள்ளது.

நூல்: அல்ஃபுசூல், பாகம்: 1, பக்கம்: 307

  • மேலும் இமாம் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இந்த ஹதீஸைச் சரி என்று சொன்னதாகவும் ஹுகைமா பின்த் உமைமா நம்பகமானவர் என்று சொன்னதாகவும் சிலர் தவறான தகவலைக் கூறியுள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு தற்காலத்தில் உள்ளவர்கள் இந்த ஹதீஸ் சரியானது என்று வாதிடுகின்றனர். ஆனால் இமாம் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் எந்த ஒரு இடத்திலும் ஹுகைமா பின்த் உமைமா நம்பகமானவர் என்றோ, அவர் இடம்பெற்றுள்ள மேற்கண்ட செய்தி சரியானது என்றோ நற்சான்று அளிக்கவில்லை. இதை இமாம் இப்னுல் கத்தான் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

(நூல்: பயானுல் வஹ்மி வல்ஈஹாம், பாகம்: 5, பக்கம்: 516)

எனவே இது பலவீனமான செய்தியாகும்.


1 . இந்தக் கருத்தில் உமைமா பின்த் ருகையா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . பார்க்க: அபூதாவூத்-24 , நஸாயீ-32 , குப்ரா நஸாயீ-31 , இப்னு ஹிப்பான்-1426 , ஹாகிம்-593 , குப்ரா பைஹகீ-481 ,

2 . அல்முஃஜமுல் கபீர்-477 , 527 , குப்ரா பைஹகீ-13406 ,

2 . உம்மு அய்மன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-230 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.