பாடம்:
கீழாடையை (தரையின்) கீழே படுமாறு அணிவது குறித்து வந்துள்ளவை.
அபூஜுரை-ஜாபிர் பின் ஸுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நான் ஒரு மனிதரைப் பார்த்தேன். மக்கள் அவரது கருத்தைக் கேட்டு நடக்கிறார்கள். அவர் எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். நான் (சிலரிடம்) , ‘இவர் யார்?’ என்று கேட்டேன். ‘இவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்’ என்று அவர்கள் கூறினார்கள்.
(பிறகு) நான், ‘அஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ் (அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும்)’ என்று இரண்டு முறை கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அஸ்ஸலாமு அலைக்க என்று கூறாதே. ஏனெனில் அது இறந்தவர்களுக்கு ஸலாம் கூறும் முறையாகும். ஸலாமுன் அலைக்க (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறு!” என்றார்கள்.
நான், ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர். அந்த அல்லாஹ் எப்படிப்பட்டவன் எனில், உனக்குத் துன்பம் ஏற்பட்டு அவனை நீ அழைத்தால் அதை அவன் நீக்குவேன். (புற்பூண்டுகள், செடி கொடிகள், தாவரங்கள் முளைக்காமல்) வறட்சி ஏற்படும்போது நீ அவனை அழைத்தால், (மழையை தந்து) அவற்றை உனக்காக மீண்டும் வளரச் செய்வான். பாலைவனத்தில் அல்லது வெட்டவெளியில் உன் ஒட்டகம் தொலைந்து போய் அவனை அழைத்தால், அதை உனக்குத் திருப்பிக் கொடுப்பான்’ என்றார்கள்.
நான், ‘எனக்கு உபதேசம் செய்யுங்கள்’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “நீ யாரையும் திட்டாதே” என்றார்கள். அதன் பிறகு நான் எந்த ஒரு மனிதரையோ, அடிமையையோ, ஒட்டகத்தையோ, ஆட்டையோ திட்டவில்லை.
மேலும் நபி (ஸல்) அவர்கள், “சிறிய நன்மையாக இருந்தாலும் அதை அலட்சியப்படுத்தாதே. உன் சகோதரனிடம் பேசும்போது உன் முகத்தை மலர்ச்சியாக வைத்திரு. அதுவும் ஒரு வகையான நன்மை.
உன் ஆடையை பாதி கால் வரை உயர்த்து. அது முடியாவிட்டால் கரண்டை வரை உயர்த்து. ஆடையை கீழே படும்படி விட்டுவிடாதே. ஏனெனில் அது பெருமையின் அடையாளம். அல்லாஹ் பெருமையை விரும்புவதில்லை.
ஒரு மனிதன் உன்னைத் திட்டினாலும், உனது குறைகளைச் சுட்டிக் காட்டினாலும், நீ அவனிடம் பார்த்த குறைகளைக் கூறாதே. ஏனெனில் அதன் விளைவு அவனைச் சாரும்” என்றார்கள்.
(அபூதாவூத்: 4084)بَابُ مَا جَاءَ فِي إِسْبَالِ الْإِزَارِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي غِفَارٍ، حَدَّثَنَا أَبُو تَمِيمَةَ الْهُجَيْمِيُّ – وَأَبُو تَمِيمَةَ اسْمُهُ طَرِيفُ بْنُ مُجَالِدٍ – عَنْ أَبِي جُرَيٍّ جَابِرِ بْنِ سُلَيْمٍ، قَالَ:
رَأَيْتُ رَجُلًا يَصْدُرُ النَّاسُ عَنْ رَأْيِهِ، لَا يَقُولُ شَيْئًا إِلَّا صَدَرُوا عَنْهُ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
قُلْتُ: عَلَيْكَ السَّلَامُ يَا رَسُولَ اللَّهِ، مَرَّتَيْنِ، قَالَ: ” لَا تَقُلْ: عَلَيْكَ السَّلَامُ، فَإِنَّ عَلَيْكَ السَّلَامُ تَحِيَّةُ الْمَيِّتِ، قُلْ: السَّلَامُ عَلَيْكَ
قَالَ: قُلْتُ: أَنْتَ رَسُولُ اللَّهِ؟ قَالَ: «أَنَا رَسُولُ اللَّهِ الَّذِي إِذَا أَصَابَكَ ضُرٌّ فَدَعَوْتَهُ كَشَفَهُ عَنْكَ، وَإِنْ أَصَابَكَ عَامُ سَنَةٍ فَدَعَوْتَهُ، أَنْبَتَهَا لَكَ، وَإِذَا كُنْتَ بِأَرْضٍ قَفْرَاءَ – أَوْ فَلَاةٍ – فَضَلَّتْ رَاحِلَتُكَ فَدَعَوْتَهُ، رَدَّهَا عَلَيْكَ»،
قَالَ: قُلْتُ: اعْهَدْ إِلَيَّ، قَالَ: «لَا تَسُبَّنَّ أَحَدًا» قَالَ: فَمَا سَبَبْتُ بَعْدَهُ حُرًّا، وَلَا عَبْدًا، وَلَا بَعِيرًا، وَلَا شَاةً،
قَالَ: «وَلَا تَحْقِرَنَّ شَيْئًا مِنَ الْمَعْرُوفِ، وَأَنْ تُكَلِّمَ أَخَاكَ وَأَنْتَ مُنْبَسِطٌ إِلَيْهِ وَجْهُكَ إِنَّ ذَلِكَ مِنَ الْمَعْرُوفِ،
وَارْفَعْ إِزَارَكَ إِلَى نِصْفِ السَّاقِ، فَإِنْ أَبَيْتَ فَإِلَى الْكَعْبَيْنِ، وَإِيَّاكَ وَإِسْبَالَ الْإِزَارِ، فَإِنَّهَا مِنَ المَخِيلَةِ، وَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمَخِيلَةَ،
وَإِنِ امْرُؤٌ شَتَمَكَ وَعَيَّرَكَ بِمَا يَعْلَمُ فِيكَ، فَلَا تُعَيِّرْهُ بِمَا تَعْلَمُ فِيهِ، فَإِنَّمَا وَبَالُ ذَلِكَ عَلَيْهِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3562.
Abu-Dawood-Shamila-4084.
Abu-Dawood-Alamiah-3562.
Abu-Dawood-JawamiulKalim-3564.
இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். மேலும் இதன் அறிவிப்பாளர்தொடர்களும் பலவகைகளாக வந்துள்ளன.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . முஸத்தத்
3 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்கத்தான்
4 . அபூகிஃபார்-முஸன்னா பின் ஸயீத்
5 . அபூதமீமா-தரீஃப் பின் முஜாலித்
6 . அபூஜுரை-ஜாபிர் பின் ஸுலைம் (ரலி)
…
1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் ஸுலைம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
1 . அபூகிஃபார் அவர்களின் அறிவிப்புகள்:
- அபூகிஃபார் —> அபூதமீமா —> ஜாபிர் பின் ஸுலைம் (ரலி)
பார்க்க: முஸ்னத் இப்னு அபீ ஷைபா-792, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-24822, 25708, 26574, அபூதாவூத்-4084, 5209, திர்மிதீ-2722, அல்ஆஹாத்-1183, 1184, குப்ரா நஸாயீ-9615, 10077, அல்குனா-தூலாபீ-1/200, 374, 1569, மஸாவில் அக்லாக்-23, 48, 101, அத்துஆ-தப்ரானீ-2060, அல்முஃஜமுல் கபீர்- 6386, 6387, அல்ஆதாப்-பைஹகீ-124, குப்ரா பைஹகீ-21093, ஷுஅபுல் ஈமான்-7689, 7717, 8494,
2 . காலித் அல்ஹத்தாஃ அவர்களின் அறிவிப்புகள்:
- காலித் —> அபூதமீமா —> ஒரு நபித்தோழர்
பார்க்க: திர்மிதீ-2721.
3 . ஸயீத் ஜுரைரீ அவர்களின் அறிவிப்புகள்:
- ஸயீத் ஜுரைரீ —> அபுஸ்ஸலீல் —> அபூதமீமா —> அபூதமீமாவின் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதர்
பார்க்க: அஹ்மத்-15955.
4 . ஸைத் பின் ஹிலால் அவர்களின் அறிவிப்புகள்:
- ஸைத் பின் ஹிலால் —> அபூதமீமா —> ஸுலைம் பின் ஜாபிர் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-6388.
5 . குர்ரா பின் காலித் அவர்களின் அறிவிப்புகள்:
- குர்ரா பின் காலித் —> குர்ரா பின் மூஸா —> ஜாபிர் பின் ஸுலைம் (ரலி)
பார்க்க: குப்ரா நஸாயீ-9612.
6 . அகீல் பின் தல்ஹா அவர்களின் அறிவிப்புகள்:
- ஸல்லாம் பின் மிஸ்கீன் —> அகீல் பின் தல்ஹா —> ஜாபிர் பின் ஸுலைம் (ரலி)
பார்க்க: அஹ்மத்-20633.
7 . யூனுஸ் பின் உபைத் அவர்களின் அறிவிப்புகள்:
யூனுஸ் பின் உபைத் —> அபீதா-உபைதா-அபூகிதாஷ் (அப்து ரப்பிஹ்) —> ஜாபிர் பின் ஸுலைம் (ரலி)
பார்க்க: அஹ்மத்-20632.
8 . அப்துஸ்ஸலாம் அவர்களின் அறிவிப்புகள்:
- அப்துஸ்ஸலாம் —> அபீதா-உபைதா-அபூகிதாஷ் (அப்து ரப்பிஹ்) —> ஜாபிர் பின் ஸுலைம் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-6384.
9 . ஸஹ்ம் பின் முஃதமிர் அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: குப்ரா நஸாயீ-9614.
10 . இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
அவர்களின் அறிவிப்புகள்:
இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
—> ஜாபிர் பின் ஸுலைம் (ரலி)
பார்க்க: அஸ்ஸமத்-இப்னு அபித்துன்யா-166, தம்முல் ஃகீபா-இப்னு அபித்துன்யா-28, தக்ரீஜ் தாரீக்-492, அக்லாகுன் நபீ-அபுஷ்ஷைக்-765,
…
சமீப விமர்சனங்கள்