தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-20633

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

…அபூஜுரை (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் கிராமப்புறவாசிகளில் ஒரு கூட்டத்தினர் ஆவோம். எனவே, அல்லாஹ் எங்களுக்குப் பயன் தரும் ஒரு சில விஷயங்களை எங்களுக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

“நல்லறங்களில் எதனையும் நீங்கள் அற்பமாகக் கருதாதீர்கள். உங்களிடம் தண்ணீர் கேட்கும் ஒருவரின் பாத்திரத்தில் உங்கள் வாளியிலிருந்து ஒரு கை அளவு ஊற்றுவதானாலும் சரியே! அல்லது உங்கள் சகோதரருடன் முகம் மலர்ந்து பேசினாலும் சரியே! (அதையும் நீங்கள் செய்யுங்கள்.)

உங்கள் கீழாடையைத் தரையில் இழுபடும்படி ஆக்குவதைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், அது பெருமையின் காரணமாகச் செய்யப்படுவதாகும். பெருமையை அல்லாஹ் விரும்பமாட்டான்.

ஓர் ஆள், உன்னில் அவன் அறிந்திருக்கும் குறையைச் சொல்லி உன்னை ஏசினால், நீ அவனில் அறிந்திருக்கும் குறையைச் சொல்லி அவனை ஏசாதே. ஏனெனில், அதன் நன்மை உனக்குரியதாகும்; அதன் பாவம் அதைச் சொன்னவனுக்குரியதாகும்.”

(முஸ்னது அஹ்மத்: 20633)

حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا سَلَّامُ بْنُ مِسْكِينٍ، عَنْ عَقِيلِ بْنِ طَلْحَةَ، حَدَّثَنَا أَبُو جُرَىٍّ الْهُجَيْمِيُّ، قَالَ:

أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا قَوْمٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ، فَعَلِّمْنَا شَيْئًا يَنْفَعُنَا اللَّهُ بِهِ، قَالَ: «لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ الْمُسْتَسْقِي، وَلَوْ أَنْ تُكَلِّمَ أَخَاكَ وَوَجْهُكَ إِلَيْهِ مُنْبَسِطٌ، وَإِيَّاكَ وَتَسْبِيلَ الْإِزَارِ، فَإِنَّهُ مِنَ الْخُيَلَاءِ، وَالْخُيَلَاءُ لَا يُحِبُّهَا اللَّهُ وَإِنْ امْرُؤٌ سَبَّكَ بِمَا يَعْلَمُ فِيكَ، فَلَا تَسُبَّهُ بِمَا تَعْلَمُ فِيهِ، فَإِنَّ أَجْرَهُ لَكَ، وَوَبَالَهُ عَلَى مَنْ قَالَهُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20633.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


6 . அகீல் பின் தல்ஹா அவர்களின் அறிவிப்புகள்:

  • ஸல்லாம் பின் மிஸ்கீன் —> அகீல் பின் தல்ஹா —> ஜாபிர் பின் ஸுலைம் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-20633, 20634, தக்ரீஜ் தாரீக்-493, அல்ஆஹாத்-1181, குப்ரா நஸாயீ-9616, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-3370, அல்ஃபவாஇத்-அபூபக்ர் ஷாஃபிஈ-344, இப்னு ஹிப்பான்-522, அல்முஃஜமுல் கபீர்-6383, அத்துஆ-தப்ரானீ-2057, அம்ஸாலுல் ஹதீஸ்-அபுஷ்ஷைக்-235, முஸ்னத் ஷிஹாப்-935,


மேலும் பார்க்க: அபூதாவூத்-4084.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.