நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு ஆட்சியாளர் மரணித்து கருத்துவேறுபாடு ஏற்படும். அப்போது மதீனாவைச் சேர்ந்த ஒரு மனிதர் (மஹ்தீ என்பவர்) மக்காவுக்கு வெருண்டோடுவார். மக்காவாசிகளில் சிலர் அவர் விரும்பாத நிலையிலும் அவரை கஅபாவிற்கு இழுத்துக் கொண்டுவந்து ருக்னு, மகாம் இப்ராஹீமுக்கு இடையில் அவரிடம் ஆட்சிபிரமாணம் (பைஅத்) செய்வார்கள்.
இவருக்கு எதிராக சிரியாவிலிருந்து ஒரு படை அனுப்பப்படும். என்றாலும் அது மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையே உள்ள சமவெளியில் புதையுண்டுபோய்விடும். இதை மக்கள் கண்டபிறகு சிரியா மற்றும் ஈராக்கிலுள்ள நல்ல மனிதர்களும் ருக்னு, மகாம் இப்ராஹீமுக்கு இடையில் அவரிடம் ஆட்சிபிரமாணம் (பைஅத்) செய்வார்கள்.
பிறகு குறைஷிக் குலத்திலிருந்து ஒருவர் அவருக்கு எதிராக கிளம்புவார். அவரின் தாய்வழி மாமன்கள் கல்ப் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். (அவருக்கு உதவியாக கல்ப் கூட்டத்தாரைச் சேர்ந்த அவரின் தாய்வழி மாமன்கள் இருப்பார்கள்). இவர் மஹ்தீ என்பவருக்கு எதிராக (கல்ப் கூட்டத்தாரின்) படையை அனுப்புவார். இந்தக் கல்ப் கூட்டத்தாரின் படையை மஹ்தீ தோல்வியுறச் செய்து அவர்களின் சொத்துக்களை போர்ச் செல்வங்களாக பெறுவார். அவற்றை மக்களுக்கு பங்கிடுவார். அந்தப் பங்கில் கலந்துக் கொள்ளாதவர்கள் நட்டவாளிகளே!.
பிறகு, அவர் உலகம் முழுவதும் இஸ்லாத்தை நிலைநாட்டியும், நபியின் வழிமுறைப்படியும் 7 வருடங்கள் ஆட்சிச் செய்வார். பிறகு அவர் மரணித்துவிட அவருக்கு முஸ்லிம்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தி அடக்கம் செய்வார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
ஹிஷாம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர், “மஹ்தீ என்பவரின் ஆட்சிக் காலம் 9 வருடம் என்றும்; வேறு சிலர் 7 வருடம்” என்றும் அறிவித்துள்ளனர்.
(அபூதாவூத்: 4286)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ، عَنْ صَاحِبٍ لَهُ، عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«يَكُونُ اخْتِلَافٌ عِنْدَ مَوْتِ خَلِيفَةٍ، فَيَخْرُجُ رَجُلٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ هَارِبًا إِلَى مَكَّةَ، فَيَأْتِيهِ نَاسٌ مِنْ أَهْلِ مَكَّةَ فَيُخْرِجُونَهُ وَهُوَ كَارِهٌ، فَيُبَايِعُونَهُ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ، وَيُبْعَثُ إِلَيْهِ بَعْثٌ مِنْ أَهْلِ الشَّامِ، فَيُخْسَفُ بِهِمْ بِالْبَيْدَاءِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ، فَإِذَا رَأَى النَّاسُ ذَلِكَ أَتَاهُ أَبْدَالُ الشَّامِ، وَعَصَائِبُ أَهْلِ الْعِرَاقِ، فَيُبَايِعُونَهُ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ، ثُمَّ يَنْشَأُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ أَخْوَالُهُ كَلْبٌ، فَيَبْعَثُ إِلَيْهِمْ بَعْثًا، فَيَظْهَرُونَ عَلَيْهِمْ، وَذَلِكَ بَعْثُ كَلْبٍ، وَالْخَيْبَةُ لِمَنْ لَمْ يَشْهَدْ غَنِيمَةَ كَلْبٍ، فَيَقْسِمُ الْمَالَ، وَيَعْمَلُ فِي النَّاسِ بِسُنَّةِ نَبِيِّهِمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيُلْقِي الْإِسْلَامُ بِجِرَانِهِ فِي الْأَرْضِ، فَيَلْبَثُ سَبْعَ سِنِينَ، ثُمَّ يُتَوَفَّى وَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ»
قَالَ أَبُو دَاوُدَ: قَالَ بَعْضُهُمْ عَنْ هِشَامٍ: «تِسْعَ سِنِينَ»، وَقَالَ بَعْضُهُمْ: «سَبْعَ سِنِينَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3737.
Abu-Dawood-Shamila-4286.
Abu-Dawood-Alamiah-3737.
Abu-Dawood-JawamiulKalim-3739.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . முஹம்மத் பின் முஸன்னா
3 . முஆத் பின் ஹிஷாம்
4 . ஹிஷாம் பின் ஸன்பர்
5 . கதாதா
6 . ஸாலிஹ் பின் அபூமர்யம் (அபுல்கலீல்)
7 . அபுல்கலீல் என்பவரின் தோழர்
8 . உம்மு ஸலமா (ரலி)
இந்தச் செய்தி, கதாதா (ரஹ்) அவர்கள் வழியாக 6 வகையான அறிவிப்பாளர்தொடர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 3 இவரிடமிருந்து மஃமர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் செய்திகளாகும்.
تاريخ ابن معين – رواية الدوري (4/ 193):
3913 – سَمِعت يحيى يَقُول قَالَ معمر جَلَست إِلَى قَتَادَة وَأَنا صَغِير
التاريخ الكبير لابن أبي خيثمة – السفر الثالث – ط الفاروق (1/ 327):
1203 – وَسَمِعْتُ يَحْيَى بْنَ مَعِيْن يَقُولُ: قَالَ مَعْمَر: جلستُ إِلَى قَتَادَة وأنا صغير فلم أحفظ أسانيده
மஃமர் அவர்களே, நான் சிறுவனாக இருந்தபோது கதாதா அவர்களிடம் ஹதீஸைக் கேட்டேன் என்பதால் அவர் அறிவித்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர்தொடர்களை சரியாக மனனமிடவில்லை என்று கூறியுள்ளதாக இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்கள்: தாரீகு இப்னு மயீன்-4/193, அத்தாரீகுல் கபீர்-இப்னு அபூகைஸமா-1/327)
எனவே இந்த 3 அறிவிப்பாளர்தொடர்கள் பலவீனமானவையாகும்.
4 . அபுல்கலீல் அவர்களுக்கும், உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கும் இடையில் முஜாஹித் அவர்கள் கூறப்பட்டுவரும் செய்தியை அறிவிக்கும் அபூஹிஷாம் அர்ரிஃபாயீ பலவீனமானவர் என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
போன்ற சில அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
5 . அபுல்கலீல் அவர்களுக்கும், உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் அவர்கள் கூறப்பட்டுவரும் செய்தியை அறிவிக்கும் இம்ரான் பின் தாவர் பற்றி சிலர் விமர்சித்துள்ளனர்.
6 . அபுல்கலீல் அவர்களுக்கும், உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கும் இடையில் அறியப்படாத மனிதர் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடரில் வேறு விமர்சனம் இல்லை என்பதால் இதுவே மஹ்ஃபூல் ஆகும். இவ்வாறு கதாதா அவர்களிடமிருந்து ஹிஷாம் அத்தஸ்துவாஈ அவர்கள் அறிவித்திருப்பதைப் போன்றே ஹம்மாம் பின் யஹ்யா அவர்களும் அறிவித்துள்ளார்.
எனவே அறியப்படாத மனிதர் இடம்பெற்றிருப்பதால் இது பலவீனமான செய்தியாகும்.
1 . இந்தக் கருத்தில் உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹிஷாம் பின் ஸன்பர் அத்தஸ்துவாஈ —> கதாதா —> அபுல்கலீல் —> அபுல்கலீல் என்பவரின் தோழர் —> உம்மு ஸலமா (ரலி)
பார்க்க: அஹ்மத்-26689 , அபூதாவூத்-4286 , 4287 , முஸ்னத் அபீ யஃலா-6940 ,
- இம்ரான் பின் தாவர் (இம்ரான் அல்கத்தான்-அபுல்அவ்வாம்-அல்அம்மீ, அல்பஸரீ) —> கதாதா —> அபுல்கலீல் —> அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் —> உம்மு ஸலமா (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37223 , அபூதாவூத்-4288 , அல்முஃஜமுல் கபீர்-656 , 930 , அல்முஃஜமுல் அவ்ஸத்-9459 , ஹாகிம்-8328 ,
- ஹிஷாம் —> கதாதா —> அபுல்கலீல் —>முஜாஹித் —> உம்மு ஸலமா (ரலி)
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6940 , இப்னு ஹிப்பான்-6757 ,
- மஃமர் —> கதாதா (ரஹ்)—> நபி (ஸல்)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21693 ,
- மஃமர் —> கதாதா —> முஜாஹித் —> உம்மு ஸலமா (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-931 , அல்முஃஜமுல் அவ்ஸத்-1153 ,
- மஃமர் —> கதாதா —> முஜாஹித் —> கலீல் அல்லது அபுல்கலீல் —> உம்மு ஸலமா (ரலி)
பார்க்க: அல்ஃபிதன்-அத்தானீ-595.
السنن الواردة في الفتن للداني (5/ 1083)
595 – حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ مُجَاهِدٍ، عَنِ الْخَلِيلِ أَوْ أَبِي الْخَلِيلِ – عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: «يَكُونُ اخْتِلَافٌ عِنْدَ مَوْتِ خَلِيفَةٍ فَيَخْرُجُ رَجُلٌ مِنْ بَنِي هَاشِمٍ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَيُبَايِعُونَهُ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ يُجَهَّزُ إِلَيْهِ جَيْشٌ مِنَ الشَّامِ حَتَّى إِذَا كَانُوا بِالْبَيْدَاءِ خُسِفَ بِهِمْ، فَتَأْتِيهِ عَصَائِبُ الْعِرَاقِ وَأَبْدَالُ الشَّامِ، ثُمَّ يَنْشَأُ رَجُلٌ بِالشَّامِ أَخْوَالُهُ كَلْبٌ فَيُجَهِّزُ إِلَيْهِمْ جَيْشًا فَيَهْزِمُهُمُ اللَّهُ، وَتَكُونُ الدَّائِرَةُ عَلَيْهِمْ وَذَلِكَ يَوْمُ كَلْبٍ، وَالْخَائِبُ مَنْ خَابَ مِنْ غَنِيمَةِ كَلْبٍ، فَتُسْتَخْرَجُ الْكُنُوزُ وَتُقْسَمُ الْأَمْوَالُ وَيُلْقَى الْإِسْلَامُ بِجِرَانِهِ إِلَى الْأَرْضِ يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ»
இதனுடன் தொடர்புடைய சரியான செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-5523 , 5527 , …
சமீப விமர்சனங்கள்