தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4806

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆமிர் குலத்தார் குழுவுடன் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நாங்கள், “நீங்கள் எங்கள் ஸய்யித்-தலைவர்” என்றோம். அதற்கு அவர்கள், “ஸய்யித் வளமும், உயர்வும் கொண்ட அல்லாஹ் ஒருவனே” என்றார்கள். “சிறப்பாலும் செல்வாக்காலும் எங்களுள் சிறந்தவர் நீங்கள்” என்றோம். அதற்கு அவர்கள், “உங்களுடைய கூற்றைக் கூறுங்கள். அல்லது அதன் ஒரு பகுதியைக் கூறுங்கள். ஷைத்தான் உங்களை இழுத்துச் செல்ல வேண்டாம்” என்றார்கள்.

(அபூதாவூத்: 4806)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ، حَدَّثَنَا أَبُو مَسْلَمَةَ سَعِيدُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ مُطَرِّفٍ، قَالَ: قَالَ أَبِي:

انْطَلَقْتُ فِي وَفْدِ بَنِي عَامِرٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقُلْنَا: أَنْتَ سَيِّدُنَا، فَقَالَ: «السَّيِّدُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى» قُلْنَا: وَأَفْضَلُنَا فَضْلًا وَأَعْظَمُنَا طَوْلًا، فَقَالَ: «قُولُوا بِقَوْلِكُمْ، أَوْ بَعْضِ قَوْلِكُمْ، وَلَا يَسْتَجْرِيَنَّكُمُ الشَّيْطَانُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4172.
Abu-Dawood-Shamila-4806.
Abu-Dawood-Alamiah-4172.
Abu-Dawood-JawamiulKalim-4174.




இந்த ஹதீஸின் கருத்து:

ஆமிர் குலத்தார் வரம்பு மீறி புகழ்ந்ததால் அவர்களை கண்டிக்கும் விதமாக “சில புகழ் வார்த்தைகள் மக்களின் வழக்கத்தில் இருக்கும். இவற்றில் சிலவை வரம்பு மீறி புகழும் வார்த்தைகளாகவும் இருக்கலாம். இதை கூறுவதால் ஷைத்தான் உங்களை வழிகெடுத்துவிடுவான். எனவே இதில் கவனமாக இருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . முஸத்தத் பின் முஸர்ஹத்

3 . பிஷ்ர் பின் முஃபள்ளல்

4 . ஸயீத் பின் யஸீத்-அபூமஸ்லமா

5 . முன்திர் பின் மாலிக்-அபூநள்ரா

6 . முதர்ரிஃப் பின் அப்துல்லாஹ்

7 . அப்துல்லாஹ் பின் ஷிக்கீர்-அவரது தந்தை


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45346-முன்திர் பின் மாலிக்-அபூநள்ரா அவர்கள் புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    அறிஞர்களின் பலமான அறிவிப்பாளர் ஆவார். இவரை பெரும்பாலான அறிஞர்கள் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் பலமானவர்; தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார். இவ்வாறே தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்களும் கூறியுள்ளார்.
  • இவரிடமிருந்து பலமானவர்கள் அறிவிப்பவை சரியானவை என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/241, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-8/93, தஹ்தீபுத் தஹ்தீப்-4/154, தக்ரீபுத் தஹ்தீப்-1/971)

அபூநள்ரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் யஸீத் அவர்கள் பலமானவர் என்பதால் இதில் பிரச்சனை இல்லை. நாம் பார்த்தவரை அனைவரும் பலமானவர்கள். வேறு குறை இல்லை.


இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் புகாரி-2549 இன் விளக்கத்தில் இந்தச் செய்தியை பலரும் சரியான செய்தி என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

فتح الباري لابن حجر (5/ 179)
وَمَا ذَكَرَهُ الْمُصَنِّفُ يَحْتَاجُ إِلَى تَأْوِيلِ الْحَدِيثِ الْوَارِدِ فِي النَّهْيِ عَنْ إِطْلَاقِ السَّيِّدِ عَلَى الْمَخْلُوقِ وَهُوَ فِي حَدِيثِ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ عَنْ أَبِيهِ عِنْدَ أَبِي دَاوُدَ وَالنَّسَائِيِّ وَالْمُصَنِّفِ فِي الْأَدَبِ الْمُفْرَدِ وَرِجَالُهُ ثِقَاتٌ وَقَدْ صَحَّحَهُ غَيْرُ وَاحِدٍ وَيُمْكِنُ الْجَمْعُ بِأَنْ يُحْمَلَ النَّهْيُ عَنْ ذَلِكَ عَلَى إِطْلَاقِهِ عَلَى غَيْرِ الْمَالِكِ وَالْإِذْنُ بِإِطْلَاقِهِ عَلَى الْمَالِكِ وَقَدْ كَانَ بَعْضُ أَكَابِرِ الْعُلَمَاءِ يَأْخُذُ بِهَذَا وَيَكْرَهُ أَنْ يُخَاطِبَ أَحَدًا بِلَفْظِهِ أَوْ كِتَابَتِهِ بِالسَّيِّدِ وَيَتَأَكَّدُ هَذَا إِذَا كَانَ الْمُخَاطَبُ غَيْرَ تَقِيٍّ فَعِنْدَ أَبِي دَاوُدَ وَالْمُصَنِّفِ فِي الْأَدَبِ مِنْ حَدِيثِ بُرَيْدَةَ مَرْفُوعًا لَا تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدًا الْحَدِيثَ وَنَحْوُهُ عِنْدَ الْحَاكِمِ

புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் குறிப்பிடும் புகாரி-2549 ஆவது ஹதீஸின் காரணமாக “ஒருவரை ‘ஸய்யித்’ (தலைவர்) என்று அழைக்ககூடாது” என்று வந்துள்ள ஹதீஸை விளக்கவேண்டிய தேவையேற்பட்டுவிட்டது.

அந்த ஹதீஸ், முதர்ரிஃப் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. இதை அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோரும், புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் தனது அல்அதபுல் முஃபரத் எனும் நூலிலும் பதிவு செய்துள்ளனர். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள்; பலர் இதை சரியானது என்று கூறியுள்ளனர்.

இந்த இருவேறுபட்ட ஹதீஸ்களை, பின்வருமாறு ஒருங்கிணைக்கலாம்:

1 . ‘ஸய்யித்’ என்று அழைப்பதற்கான தடை, ஒருவரிடம் அடிமையாக இல்லாதபோது பொருந்தும்; ஒரு அடிமை தனது எஜமானனை அவ்வாறு அழைப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தான் சில மூத்த அறிஞர்கள் யாரையும் எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ ‘ஸய்யித்’ என்று அழைப்பதை விரும்பவில்லை.

குறிப்பாக, அழைக்கப்படுபவர் இறையச்சம் இல்லாதவராக இருந்தால், இந்தத் தடை இன்னும் வலுப்பெறுகிறது. அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
மற்றும் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் அல்அதபுல் முஃப்ரத் எனும் நூல்களில் புரைதா (ரலி) வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸில், “ஒரு நயவஞ்சகனை ‘ஸய்யித்’ என்று அழைக்காதீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதே கருத்தை ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களின் நூலிலும் காணலாம். பார்க்க: அபூதாவூத்-4977.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-5/179)


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முதர்ரிஃப் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, அல்அதபுல் முஃப்ரத்-211, அபூதாவூத்-4806, குப்ரா நஸாயீ-, …


  • யஸீத் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி)

பார்க்க: …


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.