தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4977

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நயவஞ்சகனை “ஸய்யித்-தலைவர்” என்று அழைக்காதீர்கள். ஏனெனில், அவன் தலைவனாக இருந்தால், நீங்கள் உங்கள் இறைவனுக்குக் கோபத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.

அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)

(அபூதாவூத்: 4977)

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدٌ، فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّدًا فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ عَزَّ وَجَلَّ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4325.
Abu-Dawood-Shamila-4977.
Abu-Dawood-Alamiah-4325.
Abu-Dawood-JawamiulKalim-4327.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . உபைதுல்லாஹ் பின் உமர் பின் மைஸரா

3 . முஆத் பின் ஹிஷாம்

4 . ஹிஷாம் அத்தஸ்துவஈ-(முஆதின் தந்தை)

5 . கதாதா பின் திஆமா

6 . அப்துல்லாஹ் பின் புரைதா

7 . புரைதா பின் ஹுஸைப் (ரலி)-(அப்துல்லாஹ்வின் தந்தை)


التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل (4/ 12):
قَالَ أَبو عَبد اللهِ: ‌ولا ‌يُعرف ‌سماع ‌قَتادة ‌من ‌ابْن ‌بُريدة، ولا ابْن بُريدة من سُليمان.

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34194-கதாதா அவர்கள் அப்துல்லாஹ் பின் புரைதா அவர்களிடம் ஹதீஸை நேரடியாக கேட்டுள்ளாரா? என்பது அறியப்படவில்லை என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் கபீர்-4/12)


மேலும் கதாதா அவர்களின் இறப்பு ஹிஜ்ரி 117. இவர் பஸரா,மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர் வாஸித் நகரங்களுக்கு சென்றுள்ளார். அப்துல்லாஹ் பின் புரைதா அவர்களின் இறப்பு ஹிஜ்ரி 115. இவர் பஸராவாசி. இருவருக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்திருப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. என்றாலும் கதாதா அவர்கள் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் உள்ளது என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

இதை இப்னு புரைதா அவர்களிடமிருந்து உக்பா பின் அப்துல்லாஹ் என்ற பலவீனமானவரும் அறிவித்துள்ளார். இதனால் தான் கதாதா அவர்களின் இந்த அறிவிப்பில் ஸிமாஃ – நேரடியாக கேட்டேன் என்பது போன்ற வார்த்தைகள் இருப்பது அவசியம் என்ற தேவை ஏற்படுகிறது.


இந்தச் செய்தியை முன்திரீ, ஈராக்கீ, நவவீ,பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற அறிஞர்கள் சரியானது என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: தர்ஃகீப்-3/579, தக்ரீஜ் இஹ்யா-3/162, அல்அத்கார்-நவவீ-1/449, ஸஹீஹா-371, 1389)


1 . இந்தக் கருத்தில் புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • கதாதா —> இப்னு புரைதா —> புரைதா (ரலி)

பார்க்க: … அஹ்மத்- 22939, அல்அதபுல் முஃப்ரத்- 760, அபூதாவூத்-4977, முஸ்னத் பஸ்ஸார்- 4382, குப்ரா நஸாயீ- 10002, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்- 5987, …


  • உக்பா பின் அப்துல்லாஹ் —> இப்னு புரைதா —> புரைதா (ரலி)

பார்க்க: ஹாகிம்-7865,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4806,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.