தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7865

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், நயவஞ்சகனை “ஸய்யிதே-தலைவரே” என்று அழைத்தால் அவர் தனது இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டார்.

அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் சரியானது. ஆனால் இதை புகாரியும் முஸ்லிமும் தங்கள் நூல்களில் பதிவு செய்யவில்லை.


 

(ஹாகிம்: 7865)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرَوَيْهِ الْبَزَّازُ، بِبَغْدَادَ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، ثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى الْأَشْيَبُ، ثَنَا عُقْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَصَمُّ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا قَالَ الرَّجُلُ لِلْمُنَافِقِ يَا سَيِّدُ فَقَدْ أَغْضَبَ رَبَّهُ تَبَارَكَ وَتَعَالَى»

هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7865.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7934.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்

2 . முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அம்ரவைஹ்-அபூஅப்துல்லாஹ்-அல்பஸ்ஸார்.

3 . முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் ஜஅஃபர்

4 . ஹஸன் பின் மூஸா-அல்அஷ்யப்

5 . உக்பா பின் அப்துல்லாஹ்-அல்அஸம்

6 . அப்துல்லாஹ் பின் புரைதா

7 . புரைதா பின் ஹுஸைப் (ரலி)-(அப்துல்லாஹ்வின் தந்தை)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28629-உக்பா பின் அப்துல்லாஹ்-அல்அஸம் என்பவரை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    ஃபல்லாஸ், அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இதற்கு காரணம் இவர் அந்தளவுக்கு நினைவாற்றல் உள்ளவர் அல்ல என்பதாகும்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸாலிஹ் அவர்கள் மட்டுமே இவரை பலமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/314, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/488, தஹ்தீபுத் தஹ்தீப்-3/124, தக்ரீபுத் தஹ்தீப்-1/684)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


மேலும் பார்க்க: அபூதாவூத்-4977.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.