பாடம்:
ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக எனத் துவங்கும் துஆவை தொழுகையின் ஆரம்ப துஆவாக கருதக்கூடியவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தொழ நின்றால் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறிய பின், “ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக, வ தபாரகஸ்முக, வ தஆலா ஜத்துக வலா இலாஹ ஃகைருக” என ஓதுவார்கள்.
(பொருள்: இறைவா நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன் பெயர் பாக்கியமானது. உன் வல்லமை உயர்ந்துள்ளது. உன்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை)
பிறகு, “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று மூன்று தடவையும், “அல்லாஹு அக்பர், கபீரா” என்று மூன்று தடவையும் கூறுவார்கள். பிறகு, “அஊது பில்லாஹிஸ் ஸமீஇல் அலீமி மினஷ் ஷைத்தானிர்ரஜீம், மின் ஹம்ஸிஹீ, வ நஃப்கிஹீ, வ நஃப்ஸிஹீ”என்று கூறி குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள்.
(பொருள்: விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும், அவனின் ஊசலாட்டத்தை விட்டும், அவன் வழிகெடுக்கும் பெருமையை விட்டும், கவிதையை விட்டும் யாவற்றையும் செவியேற்பவனும், அறிந்தவனுமான அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத்தேடுகிறேன்.) …
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
சில அறிஞர்கள் இந்தச் செய்தி, அலீ பின் அலீ —> ஹஸன் பஸரீ (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்திருப்பதே உண்மையாகும் என்று கூறியுள்ளனர். எனவே மேற்கண்ட செய்தியை மவ்ஸூலாக அறிவித்திருப்பது ஜஃபர் பின் ஸுலைமான் அவர்களின் தவறாகும்.
(அபூதாவூத்: 775)بَابُ مَنْ رَأَى الِاسْتِفْتَاحَ بِسُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ
حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ مُطَهَّرٍ، حَدَّثَنَا جَعْفَرٌ، عَنْ عَلِيِّ بْنِ عَلِيٍّ الرِّفَاعِيِّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ كَبَّرَ، ثُمَّ يَقُولُ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرَكَ»، ثُمَّ يَقُولُ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ» ثَلَاثًا، ثُمَّ يَقُولُ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا» ثَلَاثًا، «أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ، وَنَفْخِهِ، وَنَفْثِهِ»، ثُمَّ يَقْرَأُ،
قَالَ أَبُو دَاوُدَ: وَهَذَا الْحَدِيثُ، يَقُولُونَ هُوَ عَنْ عَلِيِّ بْنِ عَلِيٍّ، عَنِ الْحَسَنِ مُرْسَلًا الْوَهْمُ مِنْ جَعْفَرٍ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-775.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-657.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . அப்துஸ்ஸலாம் பின் முதஹ்ஹர்
3 . ஜஃபர் பின் ஸுலைமான்
4 . அலீ பின் அலீ
5 . அபுல்முதவக்கில்-அலீ பின் தாவூத்
6 . அபூஸயீத் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-30252-அலீ பின் அலீ என்பவர் பற்றி வகீஉ பின் ஜர்ராஹ், இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். முஹம்மது பின் அப்துல்லாஹ், அபூஸுர்ஆ போன்றோர் பலமானவர் எனக் கூறியுள்ளனர். - அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
பஸ்ஸார், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றோர் சுமாரானவர் எனக் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/184)
- யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.இவரை குறை கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் அதிகம் தவறிழைப்பவர் என்றும், பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் இவர் பலமானவர் அல்ல என்றும் கூறியுள்ளார். - இந்த ஹதீஸ் சரியானதல்ல என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறினாலும் இந்த அறிவிப்பாளரை நல்லவர் எனக் கூறியுள்ளார். - இவர் கத்ரியா (விதியை மறுக்கும்) கத்ரியா போன்ற மாறுபட்ட கொள்கையில் உள்ளவர் என்பதற்காக நம்பகமான எவரது ஹதீஸும் நிராகரிக்கப்படாது. பல கத்ரியாக்களின் ஹதீஸ்கள் புகாரி முஸ்லிமில் கூட உள்ளன.கொள்கையுடவர் என்பதால் சிலர் இவரை பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்.
- இவர் பலவீனமானவர் என்று சொல்பவர்கள் அதற்கான காரணத்தைக் கூறாததாலும் அதிகமான அறிஞர்கள் நம்பகமானவர் எனக் கூறியுள்ளதாலும் இவர் நம்பகமானவர் என்று சிலர் கூறுகின்றனர். (இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.விமர்சனம் செய்வதில் கடும் போக்கு கொண்டவர் என்பதால் மற்றவர்கள் பலமானவர் என்று கூறியிருப்பதால் இவரின் விமர்சனம் சரியானதல்ல என்று சிலர் கூறுகின்றனர்)…..
…
…நூல்: இர்வாஉல் கலீல்-341…
1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-11473, 11657, தாரிமீ-1275, இப்னு மாஜா-804, அபூதாவூத்-775, திர்மிதீ-242, குப்ரா நஸாயீ-, நஸாயீ-899, 900, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-, …
2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-776.
3 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
4 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
5 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
6 . வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
8 . ஹகம் பின் உமைர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
9 . அபூபக்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
10 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
11 . உஸ்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
12 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
13 . ஹஸன் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
14 . ஜுபைர் பின் முத்இம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
இதனுடன் தொடர்புள்ள செய்திகள்:
பார்க்க: புகாரி-744,
https://youtu.be/mEowr8KkHYM?list=TLPQMjMwODIwMjO1BGRXVRwjpw&t=142
https://onlinepj.in/index.php/prayers/prayers-1/prayers-laws/thozukaiyin-aarmbathu
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்ஹம்துலில்லாஹ். நாம் பார்த்தவரை மேற்கண்ட செய்தி சரியானது என்றே முடிவு செய்திருந்தோம். ஜஸாகல்லாஹு கைரா.
«أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ، وَنَفْخِهِ، وَنَفْثِهِ»
தமிழாக்கம் கூறவும்
மேற்கூறிய ஹதீஸ் ஸஹீஹின் தரத்தில் உள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்தச் செய்தியில் இடம்பெறும் அலீ பின் அலீ அவர்களைப் பற்றிய விமர்சனத்தின்படி ஆரம்பத்தில் பலவீனமான செய்தி என்றும், பிறகு அவரைப் பற்றிய விமர்சனம் சரியல்ல என்பதின்படி சரியான செய்தி என்றும் ஒரு கருத்து இருந்தது. என்றாலும் இதில் வேறு சில விமர்சனம் உள்ளது என்பதால் இன்ஷா அல்லாஹ் பிறகு தரம் பதிவிடுகிறோம்.