தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-1283

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

ஆடையில் மூக்குச் சிந்துதல்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள், தன்னுடைய ஆடையை எடுத்து அதில் மூக்கைச் சிந்திவிட்டு, “ஆஹா! அபூஹுரைரா, பருத்தி ஆடை கொண்டு மூக்கைச் சிந்தும் நிலைக்கு வந்துவிட்டாரே!” என்று கூறினார்.
மேலும், “நான் ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்கும் மிம்பருக்கும் (உரைமேடைக்கும்) இடையே மயங்கி விழுந்து கிடப்பேன். அப்போது மக்கள், ‘இவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது’ என்பார்கள். ஆனால், எனக்கு இருந்தது பசி மட்டுமே” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்)

(al-adabul-mufrad-1283: 1283)

بَابُ مَنِ امْتَخَطَ فِي ثَوْبِهِ

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ،

أَنَّهُ تَمَخَّطَ فِي ثَوْبِهِ ثُمَّ قَالَ: بَخٍ بَخٍ، أَبُو هُرَيْرَةَ يَتَمَخَّطُ فِي الْكَتَّانِ، رَأَيْتُنِي أُصْرَعُ بَيْنَ حُجْرَةِ عَائِشَةَ وَالْمِنْبَرِ، يَقُولُ النَّاسُ: مَجْنُونٌ، وَمَا بِي إِلَّا الْجُوعُ


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-1283.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-14941.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.