தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-6741

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தின் இரு கூட்டத்தினரை அல்லாஹ் நரகத்திலிருந்து பாதுகாப்பான்.

1 . ஒரு கூட்டம் இந்தியாவுடன் போர் செய்யும்.
2 . மற்றொன்று மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களுடன் இருக்கும்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி ஸவ்பான் (ரலி) வழியாக இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ அவர்கள் மட்டுமே இந்தச் செய்தியை (தனித்து) அறிவித்துள்ளார்.

(almujam-alawsat-6741: 6741)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي زُرْعَةَ، نَا هِشَامُ بْنُ عَمَّارٍ، نَا الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ الْبَهْرَانِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْوَلِيدِ الزُّبَيْدِيِّ، عَنْ لُقْمَانَ بْنِ عَامِرٍ الْوَصَّابِيِّ، عَنْ عَبْدِ الْأَعْلَى بْنِ عَدِيٍّ الْبَهْرَانِيِّ، عَنْ ثَوْبَانَ، مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«عِصَابَتَانِ مِنْ أُمَّتِي أَحْرَزَهُمَا اللَّهُ مِنَ النَّارِ: عِصَابَةٌ تَغْزُو الْهِنْدَ، وَعِصَابَةٌ تَكُونُ مَعَ عِيسَى ابْنِ مَرْيَمَ»

لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ ثَوْبَانَ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ، تَفَرَّدَ بِهِ: الزُّبَيْدِيُّ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-6741.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-6916.




இந்தச் செய்தியின் விளக்கம்:

இதில் கூறப்படும் இரு கூட்டத்தினரில் மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களுடன் இருக்கும் கூட்டத்தினர் மறுமை நாளின் நெருக்கத்தின் போது உள்ளவர்கள் என்று புரிந்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்தியாவுடன் போர் செய்யும் கூட்டம் என்று பொதுவாக கூறப்பட்டிருப்பதால் இவர்கள் எந்தக் காலத்தில் உள்ளவர்கள் என்று நாம் குறிப்பிட்டுக் கூறமுடியாது.

(சிலர் இந்தக் கூட்டத்தினர் முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 44 இல் இந்தியாவின் சிந்து சமவெளிப் பகுதிக்கு படையெடுத்து வந்த முஹல்லப் பின் அபூஸுஃப்ரா வின் படையினர் என்றும், வேறு சிலர் முஹம்மத் பின் காஸிம் என்றும், வேறு சிலர் கடைசிக் காலத்தில் வரும் மஹ்தீ அவர்களின் படை என்றும் கூறியுள்ளனர்)


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . முஹம்மத் பின் அபூஸுர்ஆ-முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான்

3 . ஹிஷாம் பின் அம்மார்

4 . ஜர்ராஹ் பின் மலீஹ்

5 . முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ

6 . லுக்மான் பின் ஆமிர்

7 . அப்துல்அஃலா பின் அதீ அல்பஹ்ரானீ

8 . ஸவ்பான் (ரலி)


தப்ரானீ இமாம் அவர்கள்,

  • இந்தச் செய்தி ஸவ்பான் (ரலி) வழியாக இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ அவர்கள் மட்டுமே இந்தச் செய்தியை (தனித்து) அறிவித்துள்ளார் (என்று கூறியுள்ளார்)

தப்ரானீ அவர்கள் கூறிய முதல் பகுதி தவறு என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். காரணம் ஜர்ராஹ் பின் மலீஹ் அவர்களிடமிருந்து ஸுலைமான் பின் அப்துர்ரஹ்மான் என்பவரும் அறிவித்துள்ளார். இவ்வாறே பகிய்யது பின் வலீத் வழியாக வேறு வகையான அறிவிப்பாளர்தொடரும் வந்துள்ளது.


ஆய்வின் சுருக்கம்:

  • தாரீகுல் கபீர்-6/72 இல் வரும் செய்தியின் அடிப்படையில் இந்தச் செய்தி சரியானதாகும்.
  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10138-ஜர்ராஹ் பின் மலீஹ், ராவீ-34752-லுக்மான் பின் ஆமிர் ஆகியோர் ஸதூக்-நடுத்தரமானவர்கள் என்பதால் இது ஹஸன் தர செய்தியாகும்…
  • பகிய்யது பின் வலீதும் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார். இவர் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் என்பதால் இவரின் செய்தியின் அனைத்து தலைமுறையிலும் (அதாவது இவரின் ஆசிரியர் முதல் இறுதிவரை) ஸிமாஃ-நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்…
  • இவர் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் என்ற விமர்சனம் சரியானதல்ல என்று கூறி இவர் தன் ஆசிரியரின் பெயரை தெளிவாக குறிப்பிட்டு, அவர் பலமானவராக இருந்து, அவரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்தாலே போதும் என்று வேறு சில அறிஞர்கள் கூறியுள்ளனர்…(இவர்களின் கருத்தின் பிரகாரம் பகிய்யது பின் வலீத் வழியாக வரும் செய்தியும் சரியானதாகும்)

பார்க்க: பகிய்யது பின் வலீத்.


விரிவான தகவல்:

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களை குறிப்பிட்ட அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் தாரீகுல் கபீரில் வரும் அறிவிப்பாளர்தொடரைக் குறிப்பிட்டு இது பலமான அறிவிப்பாளர்தொடர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-1934)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20952-அப்துல்அஃலா பின் அதீ அல்பஹ்ரானீ அவர்களின் நிலையைப் பற்றி புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ஆகியோர் எதுவும் குறிப்பிடவில்லை.
  • அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், ஹரீஸ் பின் உஸ்மான் அவர்களின் ஆசிரியர்கள் அனைவரும் பலமானவர்கள் என்று கூறியுள்ளார். அப்துல்அஃலா அவர்களிடமிருந்து ஹரீஸ் பின் உஸ்மான் அறிவித்துள்ளார் என்பதால் இவர் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்களின் பார்வையில் பலமானவர் ஆவார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
    இறப்பு ஹிஜ்ரி 628
    வயது: 66
    அவர்கள், இவரின் நிலை அறியப்படவில்லை என்று கூறியுள்ளார்.
  • தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவர் பலமானவர் என்றே முடிவு செய்துள்ளனர்.

(நூல்கள்: அல்காஷிஃப்-3/221, தஹ்தீபுத் தஹ்தீப்-2/465, தக்ரீபுத் தஹ்தீப்-1/562)


  • முஸ்தஃபா அல்அதவீ அவர்கள், அப்துல்அஃலா பின் அதீ அவர்களைப் பற்றியும், லுக்மான் பின் ஆமிர் அவர்களைப் பற்றியும் சில அறிஞர்கள் கூறியுள்ள தகவல் படி இந்தச் செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளார். (ஆனால் இது சரியான நிலைப்பாடு அல்ல)

(நூல்: ஸில்ஸிலதுல் ஃபவாஇத்-12/239)


1 . இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஜர்ராஹ் பின் மலீஹ் —> முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ —> லுக்மான் பின் ஆமிர் —> அப்துல்அஃலா —> ஸவ்பான் (ரலி) 

பார்க்க: தாரீகுல் கபீர்-6/72, அல்ஜிஹாத்-இப்னு அபூஆஸிம்-2/665, அல்முஃஜமுல் அவ்ஸத்-6741, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1851, குப்ரா பைஹகீ-18600, தாரீகு திமிஷ்க்-52/248,


  • தாரீகுல் கபீர்-6/72.

التاريخ الكبير للبخاري (6/ 72 ت المعلمي اليماني):
سُلَيْمَانُ حَدَّثَنَا الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ حَدَّثَنَا الزَّبِيدِيُّ عَنْ لُقْمَانَ بْنِ عَامِرٍ عَنْ عبد الاعلى ابن عدى البهرانى عن ثوبان رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم: عِصَابَتَانِ مِنْ أُمَّتِي أَحْرَزَهُمَا اللَّهُ مِنَ النَّارِ عِصَابَةٌ تَغْزُو الْهِنْدَ وَعِصَابَةٌ مَعَ عِيسَى بْنِ مريم عليه الصلاة والسلام.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . ஸுலைமான் பின் அப்துர்ரஹ்மான்?

3 . ஜர்ராஹ் பின் மலீஹ்

4 . முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ

5 . லுக்மான் பின் ஆமிர்

6 . அப்துல்அஃலா பின் அதீ அல்பஹ்ரானீ

7 . ஸவ்பான் (ரலி)


  • அல்ஜிஹாத்-இப்னு அபூஆஸிம்-2/665.

الجهاد لابن أبي عاصم (2/ 665)
288 – حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ الْبَهْرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الزُّبَيْدِيُّ، عَنْ لُقْمَانَ بْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ الْأَعْلَى الْبَهْرَانِيِّ، عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عِصَابَتَانِ مِنْ أُمَّتِي أَحْرَزَهُمَا اللَّهُ مِنَ النَّارِ، عِصَابَةٌ تَغْزُو الْهِنْدَ، وَعِصَابَةٌ تَكُونُ مَعَ عِيسَى ابْنِ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ وَعَلَى عِيسَى»


  • முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1851.

مسند الشاميين للطبراني (3/ 89)
1851 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي زُرْعَةَ الدِّمَشْقِيُّ، ثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثَنَا الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ، عَنِ الزُّبَيْدِيِّ ح وَحَدَّثَنَا خَيْرُ بْنُ عَرَفَةَ، ثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، ثَنَا بَقِيَّةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ، عَنِ الزُّبَيْدِيِّ، حَدَّثَنِي لُقْمَانُ بْنُ عَامِرٍ، حَدَّثَنِي عَبْدُ الْأَعْلَى بْنُ عَدِيٍّ الْبَهْرَانِيُّ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” عِصَابَتَانِ مِنْ أُمَّتِي أَحْرَزَهُمَا اللَّهُ مِنَ النَّارِ: عِصَابَةٌ تَغْزُو الْهِنْدَ، وَعِصَابَةٌ تَكُونُ مَعَ عِيسَى ابْنِ مَرْيَمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “


  • தாரீகு திமிஷ்க்-52/248.

تاريخ دمشق لابن عساكر (52/ 248):
أخبرنا أبو الأعز قراتكين بن الأسعد أنبأنا أبو محمد الجوهري أنبأنا أبو بكر محمد ابن عبد الله بن محمد بن صالح الأبهري حدثنا أبو عبد الله حامد (5) بن محمد اليحاوي (6) بدمشق حدثنا هشام بن عمار حدثنا الجراح بن مليح البهراني حدثنا محمد بن الوليد الزبيدي عن لقمان (7) بن عامر الأنصاري عن عبد الملك بن عدي البهرني عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم (8) عن رسول الله صلى الله عليه وسلم قال ‌عصابتان ‌من ‌أمتي ‌أجارهما ‌الله ‌من ‌النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم


  • பகிய்யது பின் வலீத் —> அப்துல்லாஹ் பின் ஸாலிம், அபூபக்ர் பின் வலீத் —> முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ —> லுக்மான் பின் ஆமிர் —> அப்துல்அஃலா —> ஸவ்பான் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-22396, ஜுஸ்வு அபூஅரூபா-, குப்ரா நஸாயீ-4369, நஸாயீ-3175, தஹ்தீபுல் கமால்-,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: நஸாயீ-3173.

1 comment on Almujam-Alawsat-6741

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.