அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
அப்போது பாவமன்னிப்புக் கேட்பவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். பாவத்தை நினைத்து மனம் வருந்துபவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். விரோதம் கொண்டவர்களுக்கு அவர்கள் (விரோதத்திலிருந்து) வெளியேறும் வரை அது அவர்களுக்கு மறுக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
(almujam-alawsat-7419: 7419)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، نَا رَوْحُ بْنُ حَاتِمٍ أَبُو غَسَّانَ، نَا الْمِنْهَالُ بْنُ بَحْرٍ، نَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الرُّبَيِّعِ، ثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«تُعْرَضُ الْأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، فَمِنْ مُسْتَغْفِرٍ فَيُغْفَرُ لَهُ، وَمِنْ تَائِبٍ فَيُتَابُ عَلَيْهِ، وَيُرَدُّ أَهْلُ الضَّغَائِنِ لِضَغَائِنِهِمْ حَتَّى يَتُوبُوا»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ الرُّبَيِّعِ إِلَّا الْمِنْهَالُ بْنُ بَحْرٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7419.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7615.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45503-மின்ஹால் பின் பஹ்ர் பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் பலமானவர் என்றும், உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் இவரின் ஹதீஸ்களில் விமர்சனம் உள்ளது என்றும், இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவரிடம் பலவீனம் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1638, லிஸானுல் மீஸான்-7944, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-8/42)
- இந்த செய்தியை இமாம் முன்திரீ, ஹைஸமீ போன்றோர் சரியானது என்று கூறியுள்ளனர். என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், இதை விமர்சித்து கதீப் பக்தாதீ அவர்கள் இந்த செய்தியை மின்ஹால் பின் பஹ்ர் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹிலால் பின் அலாஉ மட்டுமே நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். அலீ பின் இப்ராஹீம், இப்னு அபூருபய்யிஃ போன்றோர் ஜாபிர் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளனர் என்று கூறியிருப்பதால் இந்த செய்தியின் இரண்டாவது பகுதி பலவீனமானது என்பதே சரி என்று கூறியுள்ளார். - மேலும் இதில் வரும் ராவீ-42856-அபுஸ்ஸுபைர்-முஹம்மது பின் முஸ்லிம் தத்லீஸ் செய்பவர் என்று சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தியில் அபுஸ்ஸுபைர் அவர்கள், ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை.
( நூல்: அள்ளயீஃபா-6825, தல்கீஸுல் முதஷாபிஹ் ஃபிர்ரஸ்ம்-1/47)
5 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7419 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-747 .
சமீப விமர்சனங்கள்