அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள். இருபத்தி மூன்றாம் நாள் இரவில், இந்த இரவில் நம்முடன் தொழ விரும்புபவர்கள் நம்முடன் நின்று தொழலாம் என்று கூறினார்கள். அப்போது மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை (எங்களுக்குத்) தொழுகை நடத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபோது குதைபா ( ரலி) அவர்களும் பின்தொடர்ந்து செல்ல நானும், குதைபா ( ரலி) அவர்களுடன் நடந்து சென்று “அல்லாஹ்வின் தூதரே! மீதமுள்ள இந்த இரவு முழுதும் எங்களுக்கு தொழுகை நடத்துங்களேன்! என்று கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஒரு மனிதர், இமாம் தொழுகை நடத்தி திரும்பி செல்லும் வரை அவருடன் தொழுதாலே போதும், அவருக்கு அந்த இரவு முழுதும் நின்று வணங்கிய நன்மை எழுதப்படும்” என்று கூறினார்கள்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 111)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ رَاهَوَيْهِ، ثنا أَبِي، ثنا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، ثنا وَاقِدُ بْنُ سُلَيْمَانَ، ثنا عُثْمَانُ بْنُ عَطَاءٍ الْخُرَاسَانِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ قَالَ:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، فَلَمَّا أَنْ كَانَ لَيْلَةُ ثَلَاثٍ وَعِشْرِينَ قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَقُومَ مَعَنَا هَذِهِ اللَّيْلَةَ فَلْيَقُمْ مَقَامِي، حَتَّى انْقَضَى ثُلُثُ اللَّيْلِ» ، ثُمَّ انْصَرَفَ فَمَشَيْتُ مَعَهُ إِلَى قُتَيْبَةَ فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ، لَوْ قُمْتَ بِنَا هَذِهِ اللَّيْلَةَ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِحَسْبِ امْرِئٍ أَنْ يَقُومَ مَعَ الْإِمَامَ حَتَّى يَنْصَرِفَ يُحْسَبُ لَهُ قِيَامُ لَيْلَةٍ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-111.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-14556.
إسناد ضعيف فيه عثمان بن عطاء الخراساني وهو ضعيف الحديث
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உஸ்மான் பின் அதா பலவீனமானவர். வாகித் பின் ஸுலைமான் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான
அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க :/
சமீப விமர்சனங்கள்