கவ்வாத் பின் ஜுபைர்(ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘மர்ருள்ளஹ்ரான்’ எனும் இடத்தில் தங்கியிருந்தோம். அப்போது நான் எனது கூடாரத்திலிருந்து வெளியே வந்தபோது, சில பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தனர். எனவே, நான் மீண்டும் கூடாரத்திற்குச் சென்று, எனது பெட்டியிலிருந்து ஒரு நல்ல ஆடையை எடுத்து அணிந்துகொண்டு வந்து, அவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கூடாரத்திலிருந்து வெளியே வந்தார்கள். என்னைப் பார்த்ததும், “அபூ அப்துல்லாஹ்வே! இவர்களுடன் உன்னை உட்கார வைத்தது எது?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் நான் திடுக்கிட்டுப் போனேன்; எனக்குப் பேச்சு வரவில்லை. உடனே (சமாளிப்பதற்காக), “அல்லாஹ்வின் தூதரே! எனது ஒட்டகம் ஒன்று மிரண்டு ஓடிவிட்டது. அதைக் கட்டுவதற்கு ஒரு கயிறைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினேன்.
அதைக் கேட்டுவிட்டு நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள், நானும் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் தமது மேலாடையை என்னிடம் கொடுத்துவிட்டு, ‘அராக்’ மரங்களுக்குள் (இயற்கை உபாதையைக் கழிக்க) சென்றார்கள். மரங்களின் பசுமைக்கு இடையே அவர்களின் முதுகின் வெண்மை தெரிவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் தமது தேவையை முடித்துவிட்டு, வுழூச் செய்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். அவர்களின் தாடியிலிருந்து தண்ணீர் மார்பில் சொட்டிக் கொண்டிருந்தது.
அப்போது அவர்கள், “அபூ அப்துல்லாஹ்வே! மிரண்டு ஓடிய உமது ஒட்டகம் என்ன ஆனது?” என்று கேட்டார்கள். பின்னர் நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். பயணத்தின்போது அவர்கள் என்னைக் கடக்கும்போதெல்லாம், “அபூ அப்துல்லாஹ்வே! உம்மீது சாந்தி நிலவட்டும். மிரண்டு ஓடிய அந்த ஒட்டகம் என்ன ஆனது?” என்று கேட்காமல் இருக்கவில்லை.
இதைக் கண்ட நான் (வெட்கத்தினால்) அவசரமாக மதீனாவிற்குச் சென்றேன். பள்ளிவாசலுக்குச் செல்வதையும், நபி (ஸல்) அவர்களுடன் அமர்வதையும் தவிர்த்து வந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, பள்ளிவாசல் ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும் ஒரு நேரத்தைப் பார்த்து, அங்கு சென்று தொழத் தொடங்கினேன். அப்போது எதிர்பாராதவிதமாக நபி (ஸல்) அவர்கள் தமது அறையிலிருந்து வெளியே வந்து, சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அவர்கள் என்னை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக நான் எனது தொழுகையை நீட்டினேன். அப்போது அவர்கள், “அபூ அப்துல்லாஹ்வே! நீர் விரும்பும் வரை நீட்டித் தொழுதுகொள்ளும். நீர் தொழுகையை முடிக்கும் வரை நான் இங்கிருந்து நகரப்போவதில்லை” என்று கூறினார்கள்.
அப்போது நான் என் மனதிற்குள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்று அல்லாஹ்வின் தூதரிடம் மன்னிப்புக் கேட்டு, அவர்களின் உள்ளத்தைத் தெளிவுபடுத்திவிடுவேன்” என்று உறுதிகொண்டேன். நான் தொழுகையை முடித்ததும் அவர்கள், “அபூ அப்துல்லாஹ்வே! உம்மீது சாந்தி நிலவட்டும். மிரண்டு ஓடிய அந்த ஒட்டகம் என்ன ஆனது?” என்று (மீண்டும்) கேட்டார்கள்.
அதற்கு நான், “உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பி வைத்தவன் மீது சத்தியமாக! நான் இஸ்லாத்தை ஏற்றது முதல் அந்த ஒட்டகம் ஒருபோதும் மிரண்டு ஓடியதே இல்லை (அதாவது அன்று நான் பொய் சொன்னேன்)” என்று கூறினேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உமக்கு அருள் புரியட்டும்” என்று மூன்று முறை கூறினார்கள். அதன் பிறகு அதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் என்னிடம் கேட்டதில்லை.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 4146)حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَالِدٍ الْمِصِّيصِيُّ، ثنا دَاوُدُ بْنُ مَنْصُورٍ الْقَاضِي، ثنا جَرِيرُ بْنُ حَازِمٍ، ح وَحَدَّثَنَا أَبُو غَسَّانَ أَحْمَدُ بْنُ سَهْلٍ الْأَهْوَازِيُّ، ثنا الْجَرَّاحُ بْنُ مَخْلَدٍ، ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، ثنا أَبِي، قَالَ: سَمِعْتُ زَيْدَ بْنَ أَسْلَمَ، يُحَدِّثُ، أَنَّ خَوَّاتَ بْنَ جُبَيْرٍ، قَالَ:
نَزَلْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ الظَّهْرَانِ، قَالَ: فَخَرَجْتُ مِنْ خِبَائِي فَإِذَا أَنَا بِنِسْوَةٍ يَتَحَدَّثْنَ، فَأَعْجَبْنَنِي، فَرَجَعْتُ فَاسْتَخْرَجْتُ عَيْبَتِي، فَاسْتَخْرَجْتُ مِنْهَا حُلَّةً فَلَبِسْتُهَا وَجِئْتُ فَجَلَسْتُ مَعَهُنَّ، وَخَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ قُبَّتِهِ فَقَالَ: «أَبَا عَبْدِ اللهِ مَا يُجْلِسُكَ مَعَهُنَّ؟» ، فَلَمَّا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هِبْتُهُ واخْتَلَطْتُ، قُلْتُ: يَا رَسُولَ اللهِ جَمَلٌ لِي شَرَدَ، فَأَنَا أَبْتَغِي لَهُ قَيْدًا فَمَضَى وَاتَّبَعْتُهُ، فَأَلْقَى إِلَيَّ رِدَاءَهُ وَدَخَلَ الْأَرَاكَ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ مَتْنِهِ فِي خَضِرَةِ الْأَرَاكِ، فَقَضَى حَاجَتَهُ وَتَوَضَّأَ، فَأَقْبَلَ وَالْمَاءُ يَسِيلُ مِنْ لِحْيَتِهِ عَلَى صَدْرِهِ – أَوْ قَالَ: يَقْطُرُ مِنْ لِحْيَتِهِ عَلَى صَدْرِهِ – فَقَالَ: «أَبَا عَبْدِ اللهِ مَا فَعَلَ شِرَادُ جَمَلِكَ؟» ، ثُمَّ ارْتَحَلْنَا فَجَعَلَ لَا يَلْحَقُنِي فِي الْمَسِيرِ إِلَّا قَالَ: «السَّلَامُ عَلَيْكَ أَبَا عَبْدِ اللهِ مَا فَعَلَ شِرَادُ ذَلِكَ الْجَمَلِ؟» ، فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ تَعَجَّلْتُ إِلَى الْمَدِينَةِ، واجْتَنَبْتُ الْمَسْجِدَ وَالْمُجَالَسَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا طَالَ ذَلِكَ تَحَيَّنْتُ سَاعَةَ خَلْوَةِ الْمَسْجِدِ، فَأَتَيْتُ الْمَسْجِدَ فَقُمْتُ أُصَلِّي، وَخَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَعْضِ حِجْرِهِ فَجْأَةً فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ وطَوَّلْتُ رَجَاءَ أَنْ يَذْهَبَ ويَدَعُنِي فَقَالَ: «طَوِّلْ أَبَا عَبْدِ اللهِ مَا شِئْتَ أَنْ تُطَوِّلَ فَلَسْتُ قَائِمًا حَتَّى تَنْصَرِفَ» ، فَقُلْتُ فِي نَفْسِي: وَاللهِ لَأَعْتَذِرَنَّ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ولَأُبْرِئْنَ صَدْرَهُ، فَلَمَّا قَالَ: «السَّلَامُ عَلَيْكَ أَبَا عَبْدِ اللهِ مَا فَعَلَ شِرَادُ ذَلِكَ الْجَمَلِ؟» فَقُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا شَرَدَ ذَلِكَ الْجَمَلُ مُنْذُ أَسْلَمَ، فَقَالَ: «رَحِمَكَ اللهُ» ثَلَاثًا ثُمَّ لَمْ يُعِدْ لِشَيْءٍ مِمَّا كَانَ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-4146.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
مجمع الزوائد ومنبع الفوائد (9/ 401):
رَوَاهُ الطَّبَرَانِيُّ مِنْ طَرِيقَيْنِ، وَرِجَالُ أَحَدِهِمَا رِجَالُ الصَّحِيحِ، غَيْرَ الْجَرَّاحِ بْنِ مَخْلَدٍ وَهُوَ ثِقَةٌ.
…
تخريج أحاديث الإحياء = المغني عن حمل الأسفار (ص1021):
أخرجه الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة زيد بن أسلم عَن خَوَّات بن جُبَير مَعَ اخْتِلَاف وَرِجَاله ثِقَات، وَأدْخل بَعضهم بَين زيد وَبَين خَوَّات: ربيعَة بن عَمْرو.
…
منتهى رغبات السامعين في عوالي أحاديث التابعين (ص85 بترقيم الشاملة آليا):
رَوَى النَّضْرُ بْنُ طَاهِرٍ ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مُسْهِرٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ أَبِيهِ ، عَنْ رَبِيعَةَ بْنِ عُمَرَ ، وَالدِّيلِيِّ ، عَنْ خَوَّاتٍ بَعْضًا مِنْ آخِرِ الْحَدِيثِ
…
சமீப விமர்சனங்கள்