Author: Farook

Muslim-4038

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4038. இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம் “எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றி வைப்பது வெறுக்கப்பட்டது எனத் தாங்கள் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா- ரலி) அவர்களிடம் கேட்டீர்கள்?” என்று வினவினேன். அதற்கு அவர்கள் “ஆம்; நான் “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! எந்தப் பாத்திரங்களில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் தம் இல்லத்தாராகிய எங்களிடம் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்கள் என்று விடையளித்தார்கள்” என்றார்கள்.

(அறிவிப்பாளர் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

“மண்சாடியையும் சுட்ட களிமண் பாத்திரத்தையும் ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட வில்லையா?” என நான் அஸ்வத் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அஸ்வத் (ரஹ்) அவர்கள்,

قُلْتُ لِلْأَسْوَدِ: هَلْ سَأَلْتَ أُمَّ الْمُؤْمِنِينَ عَمَّا يُكْرَهُ أَنْ يُنْتَبَذَ فِيهِ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَخْبِرِينِي عَمَّا نَهَى عَنْهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُنْتَبَذَ فِيهِ، قَالَتْ: «نَهَانَا أَهْلَ الْبَيْتِ أَنْ نَنْتَبِذَ فِي الدُّبَّاءِ، وَالْمُزَفَّتِ»، قَالَ: قُلْتُ لَهُ: أَمَا ذَكَرَتِ الْحَنْتَمَ وَالْجَرَّ؟ قَالَ: إِنَّمَا أُحَدِّثُكَ بِمَا سَمِعْتُ، أَؤُحَدِّثُكَ مَا لَمْ أَسْمَعْ؟


Muslim-4037

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4037. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்டவாறு இடம்பெற்றுள்ளது. அப்ஸர் பின் அல்காசிம் (ரஹ்) மற்றும் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடைசெய்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

Book : 36


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُنْتَبَذَ فِي الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ» هَذَا حَدِيثُ جَرِيرٍ، وَفِي حَدِيثِ عَبْثَرٍ، وَشُعْبَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ


Muslim-4036

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4036. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் தூதுக்குழுவினரிடம், “சுரைக்காய் குடுவை, மண் சாடி (ஹன்த்தம்), பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உங்களுக்குத் தடைவிதிக்கிறேன். வேண்டுமானால், தோல் பைகளில் (அனுமதிக்கப்பட்ட பானங்களை) அருந்திக்கொள்க. அதன் வாய்ப்பகுதியில் சுருக்கிட்டுக்கொள்க” என்று கூறினார்கள்.

“ஹன்த்தம்” என்பது, கழுத்துப் பகுதி துண்டிக்கப்பட்ட தோல் பை ஆகும்.

Book : 36


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِوَفْدِ عَبْدِ الْقَيْسِ: «أَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ وَالْمُقَيَّرِ وَالْحَنْتَمُ وَالْمَزَادَةُ الْمَجْبُوبَةُ، وَلَكِنِ اشْرَبْ فِي سِقَائِكَ وَأَوْكِهِ»


Muslim-4035

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4035. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தார் பூசப்பட்ட பாத்திரம், “ஹன்த்தம்”, பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் “ஹன்த்தம் என்பது என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “சுட்ட களிமண்ணாலான பச்சைநிறச் சாடிகள்” என்று பதிலளித்தார்கள்.

Book : 36


«أَنَّهُ نَهَى عَنِ الْمُزَفَّتِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ»، قَالَ: قِيلَ لِأَبِي هُرَيْرَةَ: مَا الْحَنْتَمُ؟ قَالَ: «الْجِرَارُ الْخُضْرُ»


Muslim-4034

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4034. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைவிதித்தார்கள்.

இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுரைக்காய் குடுவையில் பானங்களை ஊற்றிவைக்காதீர்கள். தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் ஊற்றிவைக்காதீர்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “மண்சாடிகளையும் தவிர்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

Book : 36


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ أَنْ يُنْتَبَذَ فِيهِ»

– قَالَ: وَأَخْبَرَهُ أَبُو سَلَمَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَنْتَبِذُوا فِي الدُّبَّاءِ، وَلَا فِي الْمُزَفَّتِ»، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: «وَاجْتَنِبُوا الْحَنَاتِمَ»


Muslim-4033

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

தார் பூசப்பட்ட பாத்திரம், சுரைக்காய் குடுவை, மண் சாடி, பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைப்பதற்கு விதிக்கப்பெற்றிருந்த தடையும், பின்னர் அச்சட்டம் காலாவதியாக்கப் பட்டதும், போதையூட்டக்கூடியதாக மாறாத வரை எல்லாப் பாத்திரங்களும் தற்போது அனுமதிக்கப்பட்டவையே என்பது பற்றிய விளக்கமும்.

4033. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைவிதித்தார்கள்.

இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸஹ்ரீ (ரஹ்) அவர்கள் லைஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.

Book : 36


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ أَنْ يُنْبَذَ فِيهِ»


Muslim-4032

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4032. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சச் செங்காய்களும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்கப்படுவதற்கும் பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது.

Book : 36


«قَدْ نُهِيَ أَنْ يُنْبَذَ الْبُسْرُ وَالرُّطَبُ جَمِيعًا، وَالتَّمْرُ وَالزَّبِيبُ جَمِيعًا»


Muslim-4031

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4031. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சச் செங்காய்களும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதற்கும் பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊற வைக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது.

Book : 36


«قَدْ نُهِيَ أَنْ يُنْبَذَ الْبُسْرُ وَالرُّطَبُ جَمِيعًا، وَالتَّمْرُ وَالزَّبِيبُ جَمِيعًا»


Muslim-4030

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4030. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்று சேர்(த்து ஊறவை)க்கப்படுவதற்கும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சம் பழங்களும் ஒன்றுசேர்த்து ஊற வைக்கப்படுவதற்கும் தடைவிதித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (யமன் நாட்டிலுள்ள) “ஜுரஷ்”வாசிகளுக்குப் பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் எனத் தடைசெய்து கடிதம் எழுதினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் கலந்து ஊறவைக்க வேண்டாம்” என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சம் பழங்களையும் பேரீச்சம் பழங்களையும் கலந்து ஊறவைப்பது பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.

Book : 36


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُخْلَطَ التَّمْرُ وَالزَّبِيبُ جَمِيعًا، وَأَنْ يُخْلَطَ الْبُسْرُ وَالتَّمْرُ جَمِيعًا، وَكَتَبَ إِلَى أَهْلِ جُرَشَ يَنْهَاهُمْ عَنْ خَلِيطِ التَّمْرِ وَالزَّبِيبِ»

وحَدَّثَنِيهِ وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ يَعْنِي الطَّحَّانَ، عَنْ الشَّيْبَانِيِّ، بِهَذَا الْإِسْنَادِ فِي التَّمْرِ وَالزَّبِيبِ، وَلَمْ يَذْكُرِ الْبُسْرَ وَالتَّمْرَ


Muslim-4029

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4029. அ. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “பேரீச்சம் பழங்களையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும், உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் பேரீச்சச் செங்காய்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும் தடைசெய்தார்கள். “(வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஊறவைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆ அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும், (அவ்வாறே) நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் பேரீச்சம் பழங்களையும் (ஒன்றாகச் சேர்த்து) ஊறவைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்கள். “(வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக ஊறவைக்கப்படலாம்”என்று கூறினார்கள். -இந்த

أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ خَلِيطِ التَّمْرِ وَالْبُسْرِ، وَعَنْ خَلِيطِ الزَّبِيبِ وَالتَّمْرِ، وَعَنْ خَلِيطِ الزَّهْوِ وَالرُّطَبِ، وَقَالَ: «انْتَبِذُوا كُلَّ وَاحِدٍ عَلَى حِدَتِهِ»

– وحَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ هَذَا الْحَدِيثِ

– حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو كُرَيْبٍ، وَاللَّفْظُ لِزُهَيْرٍ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ أَبِي كَثِيرٍ الْحَنَفِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الزَّبِيبِ وَالتَّمْرِ، وَالْبُسْرِ وَالتَّمْرِ، وَقَالَ: «يُنْبَذُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى حِدَتِهِ»

– وحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أُذَيْنَةَ وَهُوَ أَبُو كَثِيرٍ الْغُبَرِيُّ، حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِمِثْلِهِ


Next Page » « Previous Page