பாடம்:
மறுமை நாளில் விரிவான கேள்வி கணக்கிற்கு உட்படுத்தப்படமாட்டாதவர்களுக்கு நடக்கும் விசாரணை பற்றிய குறிப்பு.
4412. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இறைவா! என்னிடம் எளிய முறையில் விசாரணை செய்வாயாக!’ என்று பிரார்த்திப்பதை நான் செவியுற்றேன். நான், ‘இறைத்தூதரே! எளிய முறை விசாரணை என்பது யாது?’ என்று கேட்டேன்.”
அதற்கு அவர்கள், “(ஒருவருடைய) தீமைகளைப் பார்த்துவிட்டு, அவற்றை மன்னித்து விடுவதாகும். மறுமை நாளில் விசாரிக்கப்பட்ட எவரேனும் (அதன் மூலமாகத்) தண்டிக்கப்பட்டால் அவர் அழிந்துவிட்டார்” என்று கூறினார்கள்.
மேலும், “இறைநம்பிக்கையாளரை தீண்டும் முள் தைப்பது உட்பட அவரைத் தீண்டும் எத்தகைய துன்பமும் அவருடைய தீமைகளுக்குப் பரிகாரமாகவே அமைகிறது” (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்).
ذِكْرُ وَصْفِ الْعَرْضِ الَّذِي يَكُونُ فِي الْقِيَامَةِ لِمَنْ لَمْ يُنَاقَشُ عَلَى أَعْمَالِهِ.
أَخبَرنا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدثنا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدثنا جَرِيرٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ حَمْزَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
سَمِعْتُ رَسُولَ اللهِ صَلى الله عَلَيه وسَلم، يَقُولُ: اللهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ قَالَ: أَنْ يَنْظُرَ فِي سَيِّئَاتِهِ وَيَتَجَاوَزَ لَهُ عَنْهَا، إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَوْمَئِذٍ هَلَكَ، وَكُلُّ مَا يُصِيبُ الْمُؤْمِنَ يُكَفِّرُ عَنْهُ مِنْ سَيِّئَاتِهِ، حَتَّى الشَّوْكَةُ تَشُوكُهُ.
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-4412.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்