தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-20766

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

20766. அபூஅஸீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள், “நாங்கள் எவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை தொழுவது?” என்று கேட்டனர். அதற்கு ஒருவர், “குழு குழுவாக உள்ளே நுழையுங்கள்” என்று கூறினார்கள். எனவே, மக்கள் இந்த வாசல் வழியாக நுழைந்து, அவர்களுக்கு ஜனாஸாத் தொழுதுவிட்டு, மற்றொரு வாசல் வழியாக வெளியேறிச் சென்றனர்.

நபி (ஸல்) அவர்களின் உடல் அவர்களின் மண்ணறையின் பக்கவாட்டுக் குழியில் வைக்கப் பட்டபோது, முஃகீரா (ரலி) அவர்கள், ‘அவர்களின் இரு கால்களில் சரிசெய்யப்படாத ஏதோ ஒன்று மீதமுள்ளது’ என்று கூறினார்கள். அதற்கு மற்றவர்கள், ‘நீர் உள்ளே சென்று அதைச் சரிசெய்வீராக’ என்றனர். உடனே அவர் உள்ளே சென்று, தனது கையை நுழைத்து அவர்களின் இரு பாதங்களையும் தொட்டு சரி செய்து விட்டு, ‘என் மீது மண்ணைச் சேருங்கள்’ என்றார். உடனே அவர்கள் அவர்களின் இருகால் நடுப்பகுதி வரை (மண்) அடையும் வரை மண்ணைச் சேர்த்தார்கள். பின்னர் அவர் வெளியேறி வந்து, ‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மிகவும் பிந்தைய தொடர்புடையவனாக இருக்கிறேன் (அதாவது அவர்களின் உடலை இறுதியாகத் தொட்டவனாய் இருக்கிறேன்)’ என்று கூறிவந்தார்கள்.


(அபூஅஸீப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொண்டவர் என்று பஹ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்)

(முஸ்னது அஹ்மத்: 20766)

حَدِيثُ أَبِي عَسِيبٍ

حَدَّثَنَا بَهْزٌ، وَأَبُو كَامِلٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عِمْرَانَ يَعْنِي الْجَوْنِيَّ، عَنْ أَبِي عَسِيبٍ، أَوْ أَبِي عَسِيمٍ، قَالَ بَهْزٌ: إِنَّهُ شَهِدَ الصَّلَاةَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

قَالُوا: كَيْفَ نُصَلِّي عَلَيْهِ؟ قَالَ: «ادْخُلُوا أَرْسَالًا أَرْسَالًا» ، قَالَ: «فَكَانُوا يَدْخُلُونَ مِنْ هَذَا الْبَابِ فَيُصَلُّونَ عَلَيْهِ، ثُمَّ يَخْرُجُونَ مِنَ الْبَابِ الْآخَرِ» ، قَالَ: ” فَلَمَّا وُضِعَ فِي لَحْدِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ الْمُغِيرَةُ: قَدْ بَقِيَ مِنْ رِجْلَيْهِ شَيْءٌ لَمْ يُصْلِحُوهُ، قَالُوا: فَادْخُلْ فَأَصْلِحْهُ، فَدَخَلَ، وَأَدْخَلَ يَدَهُ فَمَسَّ قَدَمَيْهِ، فَقَالَ: أَهِيلُوا عَلَيَّ التُّرَابَ، فَأَهَالُوا عَلَيْهِ التُّرَابَ، حَتَّى بَلَغَ أَنْصَافَ سَاقَيْهِ، ثُمَّ خَرَجَ، فَكَانَ يَقُولُ أَنَا أَحْدَثُكُمْ عَهْدًا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-19838.
Musnad-Ahmad-Shamila-20766.
Musnad-Ahmad-Alamiah-19838.
Musnad-Ahmad-JawamiulKalim-20268.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.