Author: Farook

Muslim-3124

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3124. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் “முகாபரா” முறையில் விவசாயம் செய்துவந்தோம். அப்போது (குத்தகைதாரரிடம்) சூடடித்த பின் கதிர்களில் எஞ்சியுள்ள தானியத்தையும் (நீரோட்டம் நன்றாக உள்ள பகுதியின்) இன்ன விளைச்சலையும் பெற்றுவந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யாரிடம் நிலம் உள்ளதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும். அல்லது தம் சகோதரருக்கு (இலவசமாகப்) பயிரிடக் கொடுத்து விடட்டும். இல்லாவிட்டால் அதை அப்படியே வைத்திருக்கட்டும்!” என்று கூறினார்கள்.

Book : 21


كُنَّا نُخَابِرُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنُصِيبُ مِنَ الْقِصْرِيِّ وَمِنْ كَذَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا، أَوْ فَلْيُحْرِثْهَا أَخَاهُ، وَإِلَّا فَلْيَدَعْهَا»


Muslim-3123

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமது தேவை போக எஞ்சிய நிலத்தை வைத்திருப்பவர், அதில் தாமே பயிரிடட்டும்; அல்லது தம் (முஸ்லிம்) சகோதரருக்குப் பயிரிடக் கொடுத்துவிடட்டும்! அதை விற்க வேண்டாம்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சலீம் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சயீத் பின் மீனா (ரஹ்) அவர்களிடம், ” “அதை விற்க வேண்டாம்” என்பதன் பொருள் என்ன, குத்தகைக்கு விடவேண்டாம் என்பதா?”என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள்.

Book : 21


«مَنْ كَانَ لَهُ فَضْلُ أَرْضٍ فَلْيَزْرَعْهَا، أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ، وَلَا تَبِيعُوهَا»، فَقُلْتُ لِسَعِيدٍ: مَا قَوْلُهُ، وَلَا تَبِيعُوهَا يَعْنِي الْكِرَاءَ؟ قَالَ: «نَعَمْ»


Muslim-3122

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3122. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “முகாபரா” எனும் வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.

Book : 21


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُخَابَرَةِ»


Muslim-3121

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3121. ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சுலைமான் பின் மூசா (ரஹ்) அவர்கள் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள், “யாரிடம் நிலம் உள்ளதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும்! அல்லது தம் சகோதரருக்குப் பயிரிடக் கொடுத்துவிடட்டும்;அதற்காக (குத்தகை) தொகை பெற வேண்டாம்” என்று கூறினார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் உங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள் “ஆம்” என்றார்கள்.

Book : 21


«مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا، أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ، وَلَا يُكْرِهَا»، قَالَ: نَعَمْ


Muslim-3120

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3120. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரிடம் நிலம் உள்ளதோ அவர், அதில் தாமே பயிர் செய்யட்டும்! அவரால் பயிர் செய்ய இயலாவிட்டால், அதைத் தம் (முஸ்லிம்) சகோதரர் எவருக்காவது (பிரதி பலன் எதிர்பாராமல்) இலவசமாக(ப் பயிர் செய்ய)க் கொடுத்துவிடட்டும்! அதற்காக அவரிடம் கூலி எதையும் பெற வேண்டாம்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 21


«مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا، فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يَزْرَعَهَا وَعَجَزَ عَنْهَا، فَلْيَمْنَحْهَا أَخَاهُ الْمُسْلِمَ، وَلَا يُؤَاجِرْهَا إِيَّاهُ»


Muslim-3119

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3119. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தை வாடகைக்கு விடுவதை, அல்லது (நிலத்தைக் கொடுத்துப்) பிரதிபலன் பெறுவதைத் தடை செய்தார்கள்.

Book : 21


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُؤْخَذَ لِلْأَرْضِ أَجْرٌ، أَوْ حَظٌّ»


Muslim-3118

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3118. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலரிடம், தமது தேவைக்குப் போக எஞ்சிய நிலங்கள் இருந்தன. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யாரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதைத் தாமே பயிரிடட்டும்; அல்லது அதைத் தம் (முஸ்லிம்) சகோதரர் எவருக்காவது (பிரதிபலன் எதிர்பாராமல் இலவசமாகப் பயிர் செய்யக்) கொடுத்து விடட்டும்; இவ்வாறு செய்ய அவர் மறுத்தால் தமது நிலத்தை அப்படியே (பயிரிடாமல்) வைத்துக்கொள்ளட்டும்!

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 21


كَانَ لِرِجَالٍ فُضُولُ أَرَضِينَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ فَضْلُ أَرْضٍ فَلْيَزْرَعْهَا، أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ، فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ»


Muslim-3117

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3117. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும்; தாம் பயிரிட (விரும்பா)விட்டால், அதை தம் (முஸ்லிம்) சகோதரருக்குப் பயிரிடக் கொடுத்து விடட்டும்!

Book : 21


«مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا، فَإِنْ لَمْ يَزْرَعْهَا، فَلْيُزْرِعْهَا أَخَاهُ»


Muslim-3116

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17

நிலக் குத்தகை.

3116. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதவாது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்.58

Book : 21


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ»


Muslim-3115

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3115. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்கும், பல்லாண்டு விளைச்சலை விற்பதற்கும் (முஆவமா), மரத்திலுள்ள கனிகள் (கனிந்து) நல்ல நிலையை அடைவதற்கு முன் விற்பதற்கும் தடை விதித்தார்கள்.

Book : 21


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كِرَاءِ الْأَرْضِ، وَعَنْ بَيْعِهَا السِّنِينَ، وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَطِيبَ»


Next Page » « Previous Page