Author: Farook

Bukhari-6359

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 நபி (ஸல்) அவர்கள் அல்லாத மற்றவர்களுக் காக ஸலவாத்’ கூறலாமா? அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) அவர்களுக்காக ஸலவாத்’ கூறுவீராக! (பிரார்த்தனை செய்வீராக!) நிச்சயமாக உங்களுடைய பிரார்த்தனை அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். (9:103)

6359. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

யாரேனும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஸகாத் பொருளைக் கொண்டு வந்தால் நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லி அலைஹி (இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக)’ என்று பிரார்த்திப்பது வழக்கம். (அவ்வாறு) என் தந்தை அபூ அவ்ஃபா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் தம் ஸகாத் பொருளைக் கொண்டுவந்தபோது, ‘அல்லாஹும்ம ஸல்லி அலா ஆலி அபீ அவ்ஃபா’ (இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தாருக்குக் கருணை புரிவாயாக)’ என்று பிரார்த்தித்தார்கள்.

Book : 80


كَانَ إِذَا أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَدَقَتِهِ قَالَ: «اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ» فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ، فَقَالَ: «اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى»


Bukhari-6358

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6358. அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.

நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இது தங்களின் மீது சலாம் கூறும் முறையாகும். (தொழுகையில் ஓதப்படும் ‘அத்தஹிய்யாத்’ மூலம் இதை நாங்கள் அறிவோம்.) ஆனால், நாங்கள் (தங்களுக்கு) ‘ஸலவாத்’ சொல்வது எப்படி? என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம’ என்று கூறுங்கள் என்றார்கள்.

பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களின் மீது அருள் புரிந்ததைப் போன்று உன் அடியாரும் உன் தூதருமான முஹம்மத்(ஸல்) அவர்களின் மீதும் அருள் புரிவாயாக! இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்கிடுவாயாக!)

Book :80


قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، هَذَا السَّلاَمُ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي؟ قَالَ: ” قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ


Bukhari-6357

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 நபி (ஸல்) அவர்களுக்காக (ஸலவாத்’ ஓதி)ப் பிரார்த்திப்பது.

6357. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிலைலா(ரஹ்) அவர்கள் கூறினார்:

கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘உங்களுக்கு ஓர் அன்பளிப்பை வழங்கட்டுமா?’ என்று கேட்டுவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்.

(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடையே வந்தபோது நாங்கள் ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு எவ்வாறு நாங்கள் ‘சலாம்’ உரைக்க வேண்டும் என்பதை அறிந்துள்ளோம். ஆனால், தங்களின் மீது நாங்கள் எவ்வாறு ‘ஸலவாத்’ கூறவேண்டும்?’ என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்’ என்று கூறுங்கள் என்றார்கள்.

(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும்

لَقِيَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ، فَقَالَ: أَلاَ أُهْدِي لَكَ هَدِيَّةً؟ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَيْنَا، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، قَدْ عَلِمْنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: ” فَقُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ


Bukhari-6356

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6356. முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு ஸஅலபா இப்னி ஸுஐர்(ரலி) அவர்கள் (சிறுவராக இருந்தபோது மக்கா வெற்றி ஆண்டில் அவர்கள்) உடைய கண்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அன்போடு) தடவிக் கொடுத்தார்கள். அன்னார், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் ஒரு ரக்அத் ‘வித்ர்’ தொழுததைத் தாம் பார்த்ததாகக் கூறினார்கள்.

Book :80


وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ مَسَحَ عَنْهُ: أَنَّهُ رَأَى سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يُوتِرُ بِرَكْعَةٍ


Bukhari-6355

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6355. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டு வரப்படுவதுண்டு. அப்போது குழந்தைகளுக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் தெளித்தார்கள். (அதிகமாகத் தண்ணீர் ஊற்றி) அதனைக் கழுவவில்லை.

Book :80


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالصِّبْيَانِ فَيَدْعُو لَهُمْ، فَأُتِيَ بِصَبِيٍّ فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ، وَلَمْ يَغْسِلْهُ»


Bukhari-6354

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6354. முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.

நான் (நான்கு அல்லது ஐந்து வயது) சிறுவனாக இருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தம் வாயில் வைத்து) என் முகத்தில் (பரக்கத்திற்காக) உமிழ்ந்தார்கள்.

இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்.

Book :80


أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ، وَهُوَ الَّذِي «مَجَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَجْهِهِ وَهُوَ غُلاَمٌ مِنْ بِئْرِهِمْ»


Bukhari-6353

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6353. அபூ அக்கீல் ஸுஹ்ரா இப்னு மஅபத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

என் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அவர்கள் ‘சந்தையிலிருந்து) அல்லது ‘சந்தைக்கு’ என்னை அழைத்துச் சென்று உணவுப் பொருள் வாங்குவார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களும் அன்னாரைச் சந்தித்து ‘எங்களையும் (உணவு வியாபாரத்தில் கூட்டுச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் உங்களுக்காகச் சுபிட்சம் வேண்டிப் பிரார்த்தித்துள்ளார்கள்’ என் பாட்டனாரும் அவர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொள்வார்கள். சில வேளைகளில் ஒரு முழு ஒட்டகம் (சுமக்கும் அளவுக்கு உணவுப் பொருள்கள்) அப்படியே அவர்களுக்கு (இலாபமாக)க் கிடைக்கும். அதை (தம்) வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

Book :80


أَنَّهُ كَانَ يَخْرُجُ بِهِ جَدُّهُ عَبْدُ اللَّهِ بْنُ هِشَامٍ مِنَ السُّوقِ – أَوْ: إِلَى السُّوقِ – فَيَشْتَرِي الطَّعَامَ، فَيَلْقَاهُ ابْنُ الزُّبَيْرِ، وَابْنُ عُمَرَ، فَيَقُولاَنِ: «أَشْرِكْنَا، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ دَعَا لَكَ بِالْبَرَكَةِ» فَيُشْرِكُهُمْ، فَرُبَّمَا أَصَابَ الرَّاحِلَةَ كَمَا هِيَ، فَيَبْعَثُ بِهَا إِلَى المَنْزِلِ


Bukhari-6352

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 சிறுவர்களுக்காகச் சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்திப்பதும் அவர்களுடைய தலையை (அன்புடன்) தடவிக்கொடுப்பதும். அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்: எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்காகச் சுபிட்சம் வேண்டி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.39

6352. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

(சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது’ என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பரும்னேன். பிறகு நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது.

Book : 80


ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ، «فَمَسَحَ رَأْسِي، وَدَعَا لِي بِالْبَرَكَةِ، ثُمَّ تَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ، فَنَظَرْتُ إِلَى خَاتَمِهِ بَيْنَ كَتِفَيْهِ، مِثْلَ زِرِّ الحَجَلَةِ»


Bukhari-6351

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6351. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்களில் எவரும் தமக்க நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆகவேண்டும் என்றிருந்தால், ‘இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர்வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!’ என்று கேட்கட்டும்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :80


لاَ يَتَمَنَّيَنَّ أَحَدٌ مِنْكُمُ المَوْتَ لِضُرٍّ نَزَلَ بِهِ، فَإِنْ كَانَ لاَ بُدَّ مُتَمَنِّيًا لِلْمَوْتِ فَلْيَقُلْ: اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الوَفَاةُ خَيْرًا لِي


Bukhari-6350

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6350. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் கப்பாப் இப்னு அரத்(ரலி) அவர்களிடம் (அவர்களை உடல் நலம் விசாரிக்கச்) சென்றேன். அவர்கள் (கடும் வயிற்று வலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத்) தம் வயிற்றில் ஏழு முறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது ‘மரணத்தை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திராவிட்டால் நான் மரணத்தை வேண்டிப் பிரார்த்தித்திருப்பேன்’ என்று அவர்கள் கூறியதைச் செவியேற்றேன்.

Book :80


قَالَ: أَتَيْتُ خَبَّابًا، وَقَدِ اكْتَوَى سَبْعًا فِي بَطْنِهِ، فَسَمِعْتُهُ يَقُولُ: «لَوْلاَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ»


Next Page » « Previous Page