Author: Farook

Bukhari-6349

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30 வாழ்வையும் சாவையும் வேண்டிப் பிரார்த்திப்பது.

6349. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் கப்பாப் இப்னு அரத்(ரலி) அவர்களிடம் (அவர்களை உடல் நலம் விசாரிக்கச்) சென்றேன். அவர்கள் (கடும் வயிற்று வலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத் தம் வயிற்றில்) ஏழு முறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ‘மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திராவிட்டால் மரணத்தை வேண்டி நான் பிரார்த்தனை செய்திருப்பேன்’ என்று கூறினார்கள்.

Book : 80


أَتَيْتُ خَبَّابًا، وَقَدِ اكْتَوَى سَبْعًا، قَالَ: «لَوْلاَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ»


Bukhari-6348

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29 இறைவா! உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்திடுவாயாக) என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

6348. ஆயிஷா(ரலி) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, ‘சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்துவிட்டுப் பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பு வழங்கப்படாத வரையில் எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை’ என்று கூறுபவர்களாயிருந்தார்கள்.

பின்னர் அவர்களின் தலை என்னுடைய மடிமீதிருக்க அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் சிறிது நேரம் மயக்கமுற்றார்கள். பிறகு அவர்களின் மயக்கம் தெளிந்தபோது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலைகுத்தி நின்றது. பின்னர் ‘இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)’ என்று பிரார்த்தித்தார்கள். அப்போது நான் ‘அப்படியானால், நம்முடன் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. (மறுமை வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.)’ என்று (மனத்திற்குள்) சொல்லிக் கொண்டேன். மேலும், அவர்கள் ஆரோக்கியமாக இருந்தபோது (இறைத்தூதர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று) அவர்கள்

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ صَحِيحٌ: «لَنْ يُقْبَضَ نَبِيٌّ قَطُّ حَتَّى يَرَى مَقْعَدَهُ مِنَ الجَنَّةِ ، ثُمَّ يُخَيَّرُ» فَلَمَّا نَزَلَ بِهِ وَرَأْسُهُ عَلَى فَخِذِي غُشِيَ عَلَيْهِ سَاعَةً ثُمَّ أَفَاقَ، فَأَشْخَصَ بَصَرَهُ إِلَى السَّقْفِ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ الرَّفِيقَ الْأَعْلَى» قُلْتُ إِذًا لَا يَخْتَارُنَا، وَعَلِمْتُ أَنَّهُ الحَدِيثُ الَّذِي كَانَ يُحَدِّثُنَا وَهُوَ صَحِيحٌ، قَالَتْ: فَكَانَتْ تِلْكَ آخِرَ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا: «اللَّهُمَّ الرَّفِيقَ الْأَعْلَى»


Bukhari-6347

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 28

தாங்க முடியாத சோதனையிலிருந்து பாதுகாப்புக் கோருவது.

6347. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்.


(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த அறிவிப்பில் மூன்று மட்டுமே உள்ளது. நான்தான் ஒன்றை அதிகபட்சமாக அறிவித்துள்ளேன். இவற்றில் அது எதுவென எனக்குத் தெரியவில்லை. (மறந்துவிட்டேன்.)

அத்தியாயம்: 80


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ مِنْ جَهْدِ البَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ القَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ» قَالَ سُفْيَانُ: «الحَدِيثُ ثَلاَثٌ، زِدْتُ أَنَا وَاحِدَةً، لاَ أَدْرِي أَيَّتُهُنَّ هِيَ»


Bukhari-6346

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6346. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது, ‘லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்’ என்று ஓதுவார்கள். (பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

Book :80


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ عِنْدَ الكَرْبِ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ العَرْشِ العَظِيمِ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ العَرْشِ الكَرِيمِ» وَقَالَ وَهْبٌ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، مِثْلَهُ


Bukhari-6345

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 துன்பம் நேரும் போது பிரார்த்திப்பது

6345. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது ‘லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்’ என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

Book : 80


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو عِنْدَ الكَرْبِ يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَرَبُّ العَرْشِ العَظِيمِ»


Bukhari-6344

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 நபி (ஸல்) அவர்கள் தம் சேவகரின் நீண்ட ஆயுளுக்காகவும் நிறைந்த செல்வத்திற் காகவும் பிரார்த்தித்தது.

6344. அனஸ்(ரலி) அறிவித்தார்.

என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ள (ஆயுள் முதலான) வற்றில் வளம் சேர்ப்பாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

Book : 80


قَالَتْ أُمِّي: يَا رَسُولَ اللَّهِ، خَادِمُكَ أَنَسٌ، ادْعُ اللَّهَ لَهُ، قَالَ: «اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ، وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ»


Bukhari-6343

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 கிப்லாவை முன்னோக்கியவாறு பிரார்த்திப்பது

6343. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்க இந்தத் தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டார்கள். (இங்கு வந்து) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு கிப்லாவை முன்னோக்கி, தம் மேல்துண்டை (இடம் வலமாக) மாற்றிப் போட்டார்கள்.

Book : 80


«خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى هَذَا المُصَلَّى يَسْتَسْقِي، فَدَعَا وَاسْتَسْقَى، ثُمَّ اسْتَقْبَلَ القِبْلَةَ وَقَلَبَ رِدَاءَهُ»


Bukhari-6342

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 கிப்லாவை முன்னோக்காமல் பிரார்த்திப்பது

6342. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு) வெள்ளிக் கிழமையன்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனைக்குப் பின்) மேகமூட்டம் உண்டாம் மழை பொழிந்தது. எந்த அளவிற்கென்றால், அந்த மனிதரால் தம் வீட்டுக்குப் போய்ச் சேர முடியவில்லை. அடுத்த வெள்ளிக்கிழமை வரை மழை நீடித்தது. (அந்த வெள்ளிக்கிழமை) ‘அதே மனிதர்’ அல்லது ‘வேறொருவர்’ எழுந்து, ‘மழையை வேறு பக்கம் திருப்பிவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். (கன மழையினால்) நாங்கள் நீரில் மூழ்கிவிட்டோம்’ என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைவா! (இந்த மழையை) எங்கள் சுற்றுவட்டாரங்களுக்குத் திருப்பிவிடுவாயாக! எங்களுக்குப் பாதகமாக இதை ஆக்கிவிடாதே’ என்று பிரார்த்தித்தார்கள்.

அந்த மேகம் கலைந்து மதீனாவின் சுற்றுப் புறங்களுக்குச் சென்றது

بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الجُمُعَةِ، فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا، فَتَغَيَّمَتِ السَّمَاءُ وَمُطِرْنَا، حَتَّى مَا كَادَ الرَّجُلُ يَصِلُ إِلَى مَنْزِلِهِ، فَلَمْ تَزَلْ تُمْطَرُ إِلَى الجُمُعَةِ المُقْبِلَةِ، فَقَامَ ذَلِكَ الرَّجُلُ أَوْ غَيْرُهُ، فَقَالَ: ادْعُ اللَّهَ أَنْ يَصْرِفَهُ عَنَّا فَقَدْ غَرِقْنَا. فَقَالَ: «اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا» فَجَعَلَ السَّحَابُ يَتَقَطَّعُ حَوْلَ المَدِينَةِ، وَلاَ يُمْطِرُ أَهْلَ المَدِينَةِ


Bukhari-6341

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 பிரார்த்திக்கும் போது கைகளை உயர்த்துவது அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: (என் தந்தையின் சகோதரர் அபூஆமிர் கொல்லப்பட்ட சமயம்) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் இரு கைகளையும் உயர்த்தினார்கள். அப்போது அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நான் கண்டேன்.30 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தியவாறு, இறைவா! கா-த் செய்த தவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என உன்னிடம் நான் அறிவிக்கிறேன் என்று கூறினார்கள்.31

6341. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது) அவர்களின் அக்குள்களின் வெண்மையை நான் காணும் அளவுக்கத் தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள்.

Book : 80


«رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ»


Bukhari-6340

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 22

அவசரப்படாத வரையில் அடியானின் பிரார்த்தனை ஏற்கப்படும்.

6340. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 80


يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، يَقُولُ: دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي


Next Page » « Previous Page