Author: Farook

Bukhari-6297

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51

அக்குள் முடியை அகற்றுவதும், வயதான பின் விருத்தசேதனம் (கத்னா) செய்து கொள்வதும்.

6297. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1. விருத்தசேதனம் செய்வது. 2. மர்ம உறுப்பின் முடிகளைக் களைய சவரக் கத்தியை உபயோகிப்பது 3. அக்குள் முடிகளை அகற்றுவது. 4. மீசையைக் கத்தரிப்பது. 5. நகங்களை வெட்டுவது.

என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book : 79


الفِطْرَةُ خَمْسٌ: الخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الإِبْطِ، وَقَصُّ الشَّارِبِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ


Bukhari-6296

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 50 இரவில் கதவுகளைத் தாழிடுதல்

6296. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இரவில் நீங்கள் தூங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள். தண்ணீர்ப் பைகளை சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்.

என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘குச்சியை (குறுக்காக) வைத்தேனும் உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அறிவிப்பாளர் அதாஉ(ரஹ்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன்.72

Book : 79


«‏ أَطْفِئُوا الْمَصَابِيحَ بِاللَّيْلِ إِذَا رَقَدْتُمْ، وَغَلِّقُوا الأَبْوَابَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ ‏‏‏»

‏ ـ قَالَ هَمَّامٌ وَأَحْسِبُهُ قَالَ ـ ‏”‏وَلَوْ بِعُودٍ يَعْرُضُهُ


Bukhari-6295

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6295. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவுகளைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக்கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிருப்பவர்களை எரித்து விடக்கூடும்.

இதை ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 79


«خَمِّرُوا الآنِيَةَ، وَأَجِيفُوا الأَبْوَابَ، وَأَطْفِئُوا المَصَابِيحَ، فَإِنَّ الفُوَيْسِقَةَ رُبَّمَا جَرَّتِ الفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ البَيْتِ»


Bukhari-6292

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 48

(நண்பருடன்) நீண்ட நேரம் தனியாக உரையாடுவது.

(17:47ஆவது இறைவசனத்தின் மூலத்தி லுள்ள) நஜ்வா’ (இரகசிய ஆலோசனை) எனும் வேர்ச்சொல்லுக்கு, யத்தனாஜவ்ன’ (இரகசிய ஆலோசனை செய்கிறார்கள்) எனும் வினைச் சொல்லின் பொருளாகும்.

6292. அனஸ் (ரலி) அறிவித்தார்.

(தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டுவிட்டது. அப்போது ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஏதோ தனியாக உரையாடிக் கொண்டிருந்தார். அவர் உரையாடிக் கொண்டிருந்ததில் நபித்தோழர்கள் உறங்கிவிட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் (பேசி முடித்து) எழுந்து வந்து தொழுவித்தார்கள்.

Book : 79


«أُقِيمَتِ الصَّلاَةُ، وَرَجُلٌ يُنَاجِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَا زَالَ يُنَاجِيهِ حَتَّى نَامَ أَصْحَابُهُ، ثُمَّ قَامَ فَصَلَّى»


Bukhari-6291

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6291. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப்) பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்’ என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இது குறித்துத் தெரிவிக்க) நிச்சயம் நான் செல்வேன்’ என்று கூறிவிட்டு (அவ்வாறே) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்கள் மன்றத்தில் இருந்தார்கள். அவர்களிடம் நான் (இது பற்றி) இரகசியமாகச் சொன்னேன். (அதைக் கேட்டபோது) தம் முகம் சிவக்கும் அளவுக்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, ‘(இறைத்தூதர்) மூஸாவின் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும். இதை விட அதிகமாக அவர் புண்படுத்தப்பட்டார். இருப்பினும், பொறுமையு(டன் சகித்துக்) கொண்டார்’ என்றார்கள்.69

Book :79


قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا قِسْمَةً، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ، قُلْتُ: أَمَا وَاللَّهِ لَآتِيَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُهُ وَهُوَ فِي مَلَإٍ فَسَارَرْتُهُ، فَغَضِبَ حَتَّى احْمَرَّ وَجْهُهُ ثُمَّ قَالَ: «رَحْمَةُ اللَّهِ عَلَى مُوسَى، أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ»


Bukhari-6290

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 47

மூன்று பேரைவிட அதிகமானோர் இருக்கும் போது (இருவர்) இரகசியம் பேசுவதும் உரையாடுவதும் தவறாகாது.

6290. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரைவிட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும் வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

Book : 79


«إِذَا كُنْتُمْ ثَلاَثَةً، فَلاَ يَتَنَاجَى رَجُلاَنِ دُونَ الآخَرِ حَتَّى تَخْتَلِطُوا بِالنَّاسِ، أَجْلَ أَنْ يُحْزِنَهُ»


Next Page » « Previous Page